சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றதுஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு ராஜ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதே போல் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஞானசக்தி விநாயகர் கோவில் மற்றும் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com