search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • மதுரையில் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜநாடார்- கிருஷ்ணம்மாள் மன்றம் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது.விழாவை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியாஹவாசனம், 11 மணிக்கு தன பூஜை, மகா கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,வாஸ்து சாந்தி நடந்தது. மாலை 5மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியா ஹவாசனம்,முதற்கால யாக பூஜை ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி நடக்கிறது. காலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், 2-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு, 9.15 மணிக்கு கல்யாண விநாயகர் விமான மகா கும்பாபிஷேகம், கல்யாண விநாயகர் மூலாலய கும்பாபிஷேகம், மகா அபிஷேகம்,மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. 6-ந் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி 48 நாட்களுக்கு நடக்கிறது.

    கும்பாபிஷேக பூஜைகளை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் தானீகம் ராஜா பட்டர் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×