என் மலர்
நீங்கள் தேடியது "tag 227917"
- புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் மடம். இந்த மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சுவாமிக்கு பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க–ப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோல் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி அமைந்துள்ளது மௌன சித்தர் பீடம். இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் உடன் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகானுக்கு பிடித்தமான பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புற்றடிமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த கடந்த ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினம் தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.இந்நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.
இதனையொட்டி உலக தேச நலன் பெற வேண்டி அம்மனுக்கு சர்வ மங்கள மகா சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் 108வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டுபுடவை, தங்கதாலி, வெள்ளிகொலுசுஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாரா தனை நடை பெற்றது. முன்னதாக கோபூஜை, கஜபூஜைகள் செய்யப்ப ட்டது. மகாதீபா ராதனை கட்டப்பட்டது.பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்க ப்பட்ட 108 கலசங்களைக் கொண்டு அம்மனுக்கு கலச அபிஷேகம் நடைபெ ணற்றது.பூஜைகளை வைத்தீஸ்வரன்கோயில் ராஜாமகாதேவ சிவாச்சா ரியார் தலைமை யில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- சாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர்.
ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாட ல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி நடைபெருவது வழக்கம்.
நேற்று ஐப்பசி அமாவாசையைமுன்னிட்டு காவிரி வடக்குதிசையில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீவதா ன்யேஸ்வரர் கோயில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சி ணாமூர்த்தி சுவாமி, மற்றும் விஸ்வநாதர் கோவில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் கோயில் சுவாமி அம்பாளு டன் காவிரி தென்கரையிலும் 2 கரைகளிலும் எழுந்தரு ளினர்.
பின்னர் அஸ்திரதே வருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரண்டு கரைகளிலும் எழுந்தருளிய சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் பாலச்சந்திர சிவாச்சாரியார், கண்காணிப்பாளர் அகோரம், ஆடிட்டர் குருசம்பத், மாயூரநாதர் பெரிய கோயில் கண்காணி ப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், கணக்காளர் வெங்கட்ராமன், பக்த ர்கள் என திரளாக கலந்து க்கொன்டனர்.
- கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
- கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.
மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதில் கோதண்ட ராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்தனர்.
- அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
- நடராஜருக்கு மஞ்சள்,பால்,தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவாரூர்:
புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி ஆகிய நாட்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் நடராஜருக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.
- ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக இந்த கோவிலில் உள்ள 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை.
இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை என்பதால் தஞ்சை தெற்குவீதியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.
அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர். பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதே போல் கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள் கோவில், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நீலமேக பெருமாள் , நரசிம்ம பெருமாள், மேல ராஜா வீதி நவநீதகிருஷ்ணன், கீழ ராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளி அக்ரஹாரம் கோதண்ட ராம பெருமாள் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு இலட்சார்ச்சனையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
- காலை சரஸ்வதி பூஜை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் சமதே கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் நவராத்திரிவிழா நடைபெற்றது
நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு கடந்த 26-ந்தேதி இரவு இலட்சார்ச்சனையுடன் தொடங்கி தினந்தோறும் இரவு கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு இலட்சார்ச்சனையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
30-ந்தேதி ஏகதின லட்சார்ச்சனையும், 4ந்தேதி காலை சரஸ்வதி பூஜை சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4 மணியளவில் சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும், இரவு 9மணிக்கு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற்றது
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து தெப்பத்திருவிழா நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- பஞ்சபூத மகாயாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மங்கள பொருட்களுடன், பிரசாதம் வழங்கப்பட்டது.
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் மறைந்த நாடி.ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த ஒளிலாயம் அமைந்துள்ளது.
இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், பசுக்களை பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள சத்குரு ஒளிலாயம் பீடத்தில் நிறுவனர் சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 5-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உலக நன்மை வேண்டி நிலத்திற்கு அதிபதியான தியாகேசர், நீருக்கு அதிபதியான ஜம்பு கேஸ்வரர், அக்னிக்கு அதிபதியான அருணாச்சலேஸ்வரர், வாய்வுக்கு அதிபதியான காளகஸ்தீஸ்வரர், ஆகாயத்திற்கு அதிபதியான சிதம்பரேஸ்வரர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருள செய்து, அவர்களுக்கு முன்பாக ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பஞ்சபூத மகா யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி திபாராதனை நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுமார் 1500பெண்களுக்கு சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று சேலைகளை வழங்கினார்.
அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ ம.சக்தி, பேரூர் செயலாளர் போகர்.ரவி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருட்களுடன், நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.
குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை ஒளிலாயம் பீடத்தின் நிர்வாகிகள் நாடி.செல்வமுத்துகுமரன், நாடி.செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் மற்றும் கிராமமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
- ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவிய ெபாடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாலவட ரங்கநாதர் கோயில் உள்ளது.
நேற்று இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பாலவடரங்கநாதர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் மருத்துவப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் ஆலய அர்ச்சகர் ரமேஷ்ஐயர் செய்திருந்தார்.
- சவுந்தரநாயகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் அமரவைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோட்டை காளியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் சமேத அக்னி ஸ்வர சுவாமி கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.
சவுந்தரநாயகி அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் அமர வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நவராத்திரி விழா தொடக்கமாக கொலுபொ ம்மைகள் வைக்கப்பட்டு கொலுகாட்சி நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி அய்யர் கல்வி நிறுவன செயலர் வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா தொடங்கியது.
திருக்காட்டுப்பள்ளியில் கோட்டை காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கோட்டை காளிய ம்மன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திரளான பக்தர்கள் கோட்டை காளியம்மனை தரிசனம் செய்தனர்.






