என் மலர்

    நீங்கள் தேடியது "devotees"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற தென் திருப்பதி ஸ்ரீ வேங்கடாஜலபதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த திருக்கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று காலை துவங்கியது.

    ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளி னார் அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது.

    பக்தர்கள், பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்க ளில் வாசலில் பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

    இதில் ஏராள மான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் திரு இந்தளூர் பட்டர் சுவாமிகள் மற்றும் விழா குழுவினர்கள் சந்தானகிருஷ்ணன், மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நாளை மாலை மணியளவில் பல்லவராயன் பேட்டை திருகுளத்தில் சுவாமி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புரட்டாசி திருவோணத்தை யொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி வேதாந்த மகாதேசிகர் திருநட்சத்திரம், புரட்டாசி திருவோணம் நட்சத்திரத்தில் ஆழ்வார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

    அதனைத்தொடர்ந்து சீதா, லட்சுமன, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யோக நரசிம்ம பெருமாளுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.

    தஞ்சாவூர்:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். பொதுவாக சனிக்கி ழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை. இதனால் புரட்டாசி மாத சனிக்கி ழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் தஞ்சை கொண்டிரா ஜபாளையம் பகுதியில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.

    பெருமாளுக்கு பல்வேறு பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.

    இதேப்போல் பிரசன்ன பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ரத்தின அங்கி சேவையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேப்போல் தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள திருநாட்டியத்தான்குடியில் கோட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மதுரையில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தன.

    மதுரை

    ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாதம் பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் பலர் அசைவத்தை தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை விஷேச நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் வைணவ தலங்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். இதன் காரணமாக புரட்டாசி சனிக்கிழமை களில் வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று மதுரை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டது. மூலவர் கூடலழகர் பெரு மாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 5 மணி முதல் மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராள மானோர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிரு ந்தன.

    இதேபோல் மதுரை நகரில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், தெற்கு கிருஷ்ணன் பிரசன்ன வேங்கடேஸ்வர பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மற்றும் ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில், காளமேகப் பெருமாள் கோவில், கைத்தறி நகர் பாலாஜி வெங்கடேஸ்வரர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாசர்களுக்கு படையிலிட்டு வழிபாடு
    • கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது

    .

    இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    மேலும், புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அரங்கனை தரிசனம் செய்தும், தாசர்களுக்கு படையலிட்டும் வழிபடுவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாத சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து தாசர்களுக்கு படையிலிட்டு வழிபாடு செய்தனர்.

    கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவில் நிர்வாகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன.ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்துள்ளார்.

    இதேபோல் கோைவ பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

    கோவை ராமர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகளவிலான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யோக நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் பகுதியில் ஸ்ரீ யோகநரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த இந்த கோவிலில்.

    இன்று புரட்டாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு யோக நரசிங்கப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    வேதாரண்யத்தில் உள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷே கங்கள் நடைபெற்றது.

    பின், சிறப்பு சந்த னக்காப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

    பின்னர், பக்தர்களுக்கு மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதேபோல், வேதாரண்யத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி கோவில், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்பவிநாயகர், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வினைகள் தீர வேண்டி விநாயகரை வழிபட்டனர்.

    மேலும், வேதாரண்யம் காவல் சரகத்தில் 35 இடங்கள், கரியாப்பட்டினம் காவல் சரகத்தில் 35 இடங்கள், வேட்டைக்காரன் இருப்பு காவல் சரகத்தில் 13 இடங்கள் ஆக மொத்தம் 83 இடங்களில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து, 2,3 நாட்கள் கழித்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 நாள் பிரமேற்சவத்தில் 9-ம்நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற 10 நாள் பிரமேற்சவத்தில் 9-ம்நாள் நிகழ்ச்சியாக சுவாமி தெட்சணாமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருத்தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.ஏற்பாடுகளை எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo