என் மலர்

  நீங்கள் தேடியது "Sabarimala"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீண்டும் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படும்.
  • பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

  நடிகர் ஜெயராம், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ், தலைமை பொறியாளர் அஜித்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு விபூதி பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

  நிறை புத்தரிசி பூஜைக்காக நெற்கதிர் கட்டுகள் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு மேல்சாந்தியிடம் பக்தர்கள் ஒப்படைத்தனர்.

  இன்று வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

  இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் சேதம் அடைந்துள்ள தங்க கூரை பராமரிப்பு பணி தொடங்க உள்ளது. இந்த பணிகள் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்கு முன்னதாக முடிக்கப்படும் என தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.

  கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை அதிகாலை 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுகிறது.
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை விழா நாளை நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

  நாளை அதிகாலை 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுகிறது. அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

  இவ்விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும்முன்பு பம்மை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். தற்போது பத்தினம்திட்டா பகுதியில் பலத்த மழை பெய்வதால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

  எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை பத்தினம் திட்டா கலெக்டர் திவ்யா எஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4-ம்தேதி 6 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது.
  • 4-ந்தேதி இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

  கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை வருகிற 4-ம் தேதி நடக்கிறது.

  இதற்காக சபரிமலை கோவில் நடை நாளை (3-ந் தேதி) மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் 4-ம்தேதி அதிகாலை கோவில் நடை திறந்ததும் ஆறு மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது.

  இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக செட்டிகுளங்கரா கோவில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்காக நெற்கதிர்கள் கொண்டுவரப்படும்.

  நிறை புத்தரசி பூஜைக்கு பிறகு 4-ந்தேதி இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை (17-ந்தேதி) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

  கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ் மாதத்தின் முதல்நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.

  அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார்.

  நாளை (17-ந்தேதி) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 21-ந் தேதி வரை நடை திறந்து இருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம்.

  அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

  அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார்.

  17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும்.
  • 18-ம் படிக்கு மேல்பகுதியில் நகரும் கூரை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.

  திருவனந்தபுரம் :

  சபரிமலையில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:-

  கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை கேரள அரசால் தொடங்கப்பட்டது. அதனை கேரள போலீசார் நிர்வகித்து வந்தனர். இதையடுத்து தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  மனு மீதான விசாரணையின் போது, தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரள ஐகோர்ட்டு வழங்கியது. அதைதொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

  மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம்.

  இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை. சபரிமலை சன்னிதானத்தில் 18-ம் படிக்கு மேல்பகுதியில் நகரும் கூரை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். ரூ.1.5 கோடி செலவில் பம்பையில் அலங்கார வளைவு அமைக்க கேரள ஐகோர்ட்டில் அனுமதி கோரப்படும். பாதுகாப்பு ஊழியர்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் புதிய அறைகள் கட்டப்படும், தகவல் மையமும் தொடங்கப்படும். பம்பை மலை முகடு முதல் கணபதி கோவில் வரை பம்பை ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடி செலவில் 165 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை.
  • இந்த கோவிலில் நடக்கும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை

  ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல்.

  மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது:-

  கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

  குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

  வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

  அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

  இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

  ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

  தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

  ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

  இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

  மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

  இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.

  ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.

  மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.

  ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 14-ந்தேதி திறக்கப்படுகிறது.
  • நாளை (வியாழக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

  வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மே மாதம் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

  பின்னர் 19-ந் தேதி மாத பூஜை நிறைவு பெற்றது. ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது. முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

  நாளை (வியாழக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

  ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பிரச்சினையால் பக்தர்கள் கோவில் சன்னிதானத்தில் இரவு நேரத்தில் தங்க கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையையும் விலக்கி கொள்ள கோவில் நிர்வாகம் முன்வந்துள்ளது.
  கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.

  கொரோனா பிரச்சினை யால் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டது.

  அதன்படி கோவிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வருகிற 1-ந்தேதி முதல் 40 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இது தவிர உடனடி முன்பதிவு மூலம் மேலும் 5 ஆயிரம் பக்தர்களும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

  சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பனை வேண்டி வெடி வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா பிரச்சினையால் இந்த வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இந்த தடை விலக்கப்பட்டு, பக்தர்கள் கோவிலில் வெடி வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.

  தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் வெடி வழிபாடு நேர்ச்சை நடத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

  கொரோனா பிரச்சினையால் பக்தர்கள் கோவில் சன்னிதானத்தில் இரவு நேரத்தில் தங்க கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையையும் விலக்கி கொள்ள கோவில் நிர்வாகம் முன்வந்துள்ளது.

  மாலையில் மலையேறும் பக்தர்கள், இரவில் சன்னிதானத்தில் உள்ள அறைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் அறைகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாளில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.

  சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். நடை திறந்து 11 நாட்களில் கோவிலுக்கு 1 லட்சத்து 19 ஆயிரத்து 238 பக்தர்கள் தரிசனத்திற்கு சென்றுள்ளனர்.

  இந்த எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 நாட்களில் கோவில் வருமானம் ரூ.10 கோடியை கடந்து உள்ளது.

  கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் வழங்கப்படும் அப்பம், அரவணை பிர சாதங்களை வாங்கிச் செல்வார்கள். கோவிலுக்கு வராத பக்தர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் அனுப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 3 வகை கட்டணத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.

  ஒரு அரவணை மற்றும் அர்ச்சனை பிரசாதம் ரூ.450-க் கும், 4 அரவணை, அர்ச்சனை பிரசாதம் ரூ.830-க்கும், 10 டின் அரவணை அடங்கிய பாக்கெட் ரூ.1510-க்கும் வழங்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை நடைபெற்றது.
  நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை நடைபெற்றது..

  தினசரி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்சபூஜைக்கு பின்பு 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து இருவழிகளில் சன்னிதானம் செல்வார்கள்.
  கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

  கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பிரச்சினை குறைந்ததால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் பம்பையில் புனித நீராடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

  மேலும் சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து பின்னர் பம்பையில் ஓய்வெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து இருவழிகளில் சன்னிதானம் செல்வார்கள்.

  கொரோனா பிரச்சினைக்கு பிறகு ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நீலிமலை பாதை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print