பிரதிஷ்டை தின வழிபாட்டுக்காக சபரிமலை நடை 25-ந்தேதி திறப்பு

இந்த நாளில் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
பிரதிஷ்டை தின வழிபாட்டுக்காக சபரிமலை நடை 25-ந்தேதி திறப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டது.

5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடைசி நாளான நேற்று கோவிலில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெற்றது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் இந்த பூஜை நடைபெற்றது. நேற்றுடன் நடை சாத்தப்படும் என்பதால் பக்தர்கள் கூட்டமும் கோவிலில் அதிகமாக காணப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நேற்று இரவு கோவில் நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக மீண்டும் வருகிற 25-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

26-ந்தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதற்காக தான் 25-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பிரதிஷ்டை தின வழிபாட்டுக்கு பிறகு 26-ந்தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

இந்த நாளில் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com