உண்மையான பக்தர்கள் 50 வயது வரை காத்திருப்பார்கள்.. சபரிமலை பெண்கள் நுழைவு வழக்கில் உச்சநீதிமன்றம்

ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
உண்மையான பக்தர்கள்  50 வயது வரை காத்திருப்பார்கள்.. சபரிமலை பெண்கள் நுழைவு வழக்கில் உச்சநீதிமன்றம்
Published on

சபரிமலைக்குள் நுழையலாம் என்று 2018-ல் 4:1 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சபரிமலை கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 4:1 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கியது.

2019ல் இந்தத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, விவகாரம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது மத சுதந்திரம் குறித்து நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

நீதிபதிகள் கருத்து

நீதிபதி பி.வி. நாகரத்னாகூறுகையில், "ஐயப்பனின் உண்மையான பெண் பக்தர்கள், சபரிமலைக்குச் செல்ல தங்களுக்கு 50 வயது பூர்த்தியாகும் வரை காத்திருப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.

மேலும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் மத வரலாற்றைப் புறக்கணிக்க முடியாது என்றும், சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மதத்தை முற்றிலுமாகத் தள்ளிவிட முடியாது என்றும் கூறினார்.

நீதிபதி அஹ்சனுதீன் அமானுல்லா, "ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர், அந்தத் தெய்வம் சார்ந்த ஆச்சாரங்களை எப்படி நிராகரிக்க முடியும்?.

மற்ற பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஒரு நபர் தனது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முடியுமா" என்றும் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், ஒரு வழிபாட்டுத் தலத்தின் பொதுவான நம்பிக்கைக்கு எதிராக ஒவ்வொருவரும் செயல்படத் தொடங்கினால், அங்கு மதம் என்ற அடையாளமே இருக்காது. இது மதக் கோட்பாட்டையே சிதைத்துவிடும் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com