என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோவில்"

    • திருப்பதியில் நேற்று 67,264 பேர் தரிசனம் செய்தனர்.
    • ரூ 4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    தெலுங்கானா ஹாக்கி சங்க தலைவராக இருப்பவர் விஜயகுமார். நகை பிரியரான இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வந்தார்.

    நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த விஜயகுமார் கோவிலில் இருந்து வெளியே வந்தார். அவரது உடல் முழுவதும் 4 கிலோ நகைகளை அணிந்து இருந்தார்.

    இதேபோல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர சோனி குடும்பத்தினர் 4 பேர் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஏழுமலையான் உருவம் பதித்த தலா ½ கிலோ நகைகள் வீதம் 4 கிலோ நகைகளை அணிந்து வந்தனர். இதனை பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.

    திருப்பதியில் நேற்று 67,264 பேர் தரிசனம் செய்தனர். 29,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருப்பதியில் நேற்று 68,754 பேர் தரிசனம் செய்தனர்.
    • திருப்பதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒருவாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.

    பக்தர்கள் கிருஷ்ணதேஜா மாளிகை வரை 3 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மோர், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68,754 பேர் தரிசனம் செய்தனர். 25,569 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் இதமான காற்று வீசுகிறது.

    இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.

    கியாஸ், சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை பக்தர்களுக்கு வழக்கம்போல அன்னதானம், லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டாலர்களின் வடிவமைப்பை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பக்தர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி டாலர்களை விற்க முன்மொழியப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் சாமி உருவம் பொறிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி டாலர்களை நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு ஆன்லைனில் வழங்க தேவஸ்தானம் தயாராகி வருகிறது.

    வருமானத்தை அதிகரிக்க அமைக்கப்பட்ட நிதிக்குழு சமீபத்தில் ஸ்ரீவாரி டாலர்களின் விற்பனையை அதிகரிக்க பரிந்துரைத்தது.

    திருமலையில் முக்கியமாக ஆஃப்லைனில் விற்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் மற்றும் டாலர்களை கிடைக்கச் செய்து ஆன்லைனிலும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் ஆன்லைனில் டாலர்களை வாங்கினால், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, போக்குவரத்து காப்பீடு மூலம் அஞ்சல் துறை மூலம் அனுப்ப வேண்டும்.

    இதேபோல், டாலர்களின் வடிவமைப்பை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அதிகரிப்பைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி டாலர்களை விற்க முன்மொழியப்பட்டுள்ளது.

    தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஒப்புதலுடன், ஸ்ரீவாரி தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் விரைவில் பக்தர்களுக்கு ஆன்லைனில் கிடைக்கும் என தெரிவித்தனர்.

    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று 66,885 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் காலை முதல் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.

    நேற்று பக்தர்களின் கூட்டம் படிப்படியாக குறைந்தது.

    திருப்பதியில் நேற்று 66,885 பேர் தரிசனம் செய்தனர். 26,690 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தற்போது திருப்பதி  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால் வரிசையில் காத்திருந்த முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினர்.

    பக்தர்களின் சிரமத்தை அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தனர்.

    • திருப்பதி மலைக்கு கேக் கொண்டு செல்வதும் கேக் வெட்டுவதும் தேவஸ்தான விதிகளுக்கு எதிரானது.
    • தேவஸ்தான அதிகாரிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர பிரபல பிக்பாஸ் நடிகைகள் தனுஜா, மாதுரிஆகியோர் திருப்பதி மலைக்கு வந்தனர்.

    திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய இவர்கள் தனுஜாவின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி மலைக்கு கேக் கொண்டு செல்வதும் கேக் வெட்டுவதும் தேவஸ்தான விதிகளுக்கு எதிரானது.

    எனவே தேவஸ்தான அதிகாரிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதுரி மற்றும் தனுஜா கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவில் முன்பாக திருப்பதி தேவஸ்தான விதிகளை மீறி போட்டோ ஷூட் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



    • திருப்பதி கோவிலில் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
    • யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ் தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம்.

    அதன்படி வருகிற 19-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    அதையொட்டி கோவிலில் 17-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் 16-ந்தேதி ஏற்கப்படமாட்டாது. இருப்பினும், முக்கிய பிரமுகர்கள் மட்டும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர்.

    அதேபோல் 19-ந்தேதி கோவிலில் நடக்கும் யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் 18-ந்தேதி ஏற்கப்படமாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அன்று நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது. பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.

    அதன்படி, நாளை காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

    அதன்பிறகு புனித சடங்குகள் நடக்கின்றன. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரவு 8.30 மணியளவில் அனுமதிக்கப்படுவார்கள்.

    சந்திர கிரகணத்தால் நாளை கோவிலில் நடக்க இருந்த அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, நெறிமுறைகளுக்கு உட்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம். 5 வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், காணிக்கையாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    பக்தர்கள் மேற்கண்ட தகவல்களை கவனத்தில் கொண்டு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு தங்கள் திருமலை யாத்திரையை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகு தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • திருப்பதியில் நேற்று 74,902 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தரிசன வரிசையில் இனி கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தப்பட உள்ளது. அமிர்தசரஸ் தங்ககோவிலில் உள்ளது போல் திருப்பதி கோவிலுக்கு தனி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளன.

    அதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஸ்கேனிங் மையம் அருகே உள்ள புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகு தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் இந்து மதத்தை சாராத மாற்று மதத்தினர்கள் தரிசனம் செய்ய விரும்பினால் கட்டாயம் அவர்கள் இந்து கடவுளை நம்புகிறோம். இந்து கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் பொட்டு வைத்துக் கொள்கிறோம் என உறுதிமொழி கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    அதே போல் தரிசனத்திற்கு செல்லும் மாற்று மதத்தினர் கட்டாயம் நெற்றியில் நாமம் போட்ட பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,902 பேர் தரிசனம் செய்தனர். 22,869 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளியை சேர்ந்தவர் மவுனிகா (வயது 27). இவர் நேற்று முன்தினம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்தார். ரூ 300 தரிசன டிக்கெட்டில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தார். தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் மோனிகா நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

    அப்போது திடீரென வந்த பாம்பு ஒன்று மவுனிகாவின் காலில் கடித்துவிட்டு சென்றது. பாம்பு கடித்ததால் மவுனிகா அலறி துடித்தார். இதனைக் கண்டு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தேவஸ்தான அதிகாரிகள் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து மவுனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அஸ்வினி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மவுனிகாவின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    • இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.
    • கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வாங்கினர்.

    அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

    • நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
    • குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகிரங்க குற்றம் சாட்டினார். இதனால் உலகம் முழுவதும் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

    முந்தைய ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்துக்கு வினியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார்.

    இவ்விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.

    இதுதொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

    இந்த விசாரணைக்காக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கு, ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஹவாலா பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது.
    • பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.

    மார்ச் மாதம் 3-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அன்று நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது. பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.

    அதன்படி, மார்ச் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

    அதன்பிறகு புனித சடங்குகள் நடக்கிறது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரவு 8.30 மணியளவில் அனுமதிக்கப்படுவார்கள்.

    சந்திர கிரகணத்தால் மார்ச் 3-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, நெறிமுறைகளுக்கு உட்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், காணிக்கையாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    பக்தர்கள் மேற்கண்ட தகவல்களை கவனத்தில் கொண்டு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு தங்கள் திருமலை யாத்திரையை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×