என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்க கிரிக்கெட் லீக்"
- இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.
- கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வாங்கினர்.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர்.
கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
- சிஎஸ்கே அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.
- டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவை சி.எஸ்.கே. நிர்வாகம் இன்று வெளியிட்டது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தொடங்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.
இந்நிலையில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவை சென்னை அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் லாஞ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கியிருந்தது.






