என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி"
- நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
- 42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "சிறந்த நாள் இது" என்று தெரிவித்தார்.
- இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.
- கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வாங்கினர்.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர்.
கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
- விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்தது.
- புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.
கர்னூல் மாவட்டம் களுகோட்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்த நிலையில், இப்போது ரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு அமைத்தது குறிப்பிடத்தக்கது.
- திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் பவன் கல்யாண் பரிகார விரதம் இருந்தார் .
- ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்த நெய்யை பயன்படுத்தியதாக 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.
லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதனிடையே திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்றார்.
இதனிடையே ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் விலங்குகளின் கொழுப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்துள்ளன.
- 'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என அந்த நபர் முரண்டு பிடித்தார்
- இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தங்க கலசத்தை சேதப்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என முரண்டு பிடித்து அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
குடிபோதையில் இருந்த நபரை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பதி போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றது.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் வசிக்கும் குட்டாடி திருப்பதி என தெரியவந்தது.
- திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார்
- ஸ்ரேயாவிக்ரு தற்போது பெண் குழந்தை உள்ளது.
நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார். இந்நிலையில், அண்மையில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தமிழ் திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்தார். தற்போது நான் வயலன்ஸ் படத்தில் கனகா பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியிருந்தார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
- அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம், கொலக்கலூவை சேர்ந்தவர் நாக கணேஷ். இவர் குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தூரத்து உறவினரான தெனாலி அடுத்த எடவூருவை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி என்பவரை பெண் கேட்டு சென்றனர். நாக கணேஷ் தங்களது மகளை விட உயரம் குறைவாக இருப்பதால் பெண் தர அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.
நாக கணேஷ், கீர்த்தி அஞ்சனாதேவி இருவரும் சந்தித்த முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டனர். இருவரும் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமலேயே செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். நீண்ட நேரம் செல்போனில் பேசி அரட்டை அடித்து காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். அமராவதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தங்களது உயிருக்கு கீர்த்தியின் பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் நல்லபாடு போலீசில் பாதுகாப்பு கேட்டு சரணடைந்தனர்.
போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். தங்களது திருமணம் கோவிலில் எளிமையான முறையில் நடந்ததால் உறவினர்கள், நண்பர்களை அழைத்து பிரம்மாண்ட முறையில் திருமண வரவேற்பு விழா நடத்த புதுமணத் தம்பதியினர் முடிவு செய்தனர்.
நாக கணேஷ் நேற்று காலை வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவருடன் வங்கிக்கு சென்றார். நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தார். நாக கணேஷ் வங்கிக்கு சென்றதை அறிந்த கீர்த்தியின் தந்தை, மகன் துர்காவிடம் எத்தனை பேர் இருந்தாலும் வெட்டி சாய்த்து விட்டு வா நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து கீர்த்தியின் சகோதரர் தனது 2 நண்பர்களுடன் பைக்கில் வந்து நாக கணேசின் பைக்கை வழிமறித்தார்.
தன்னிடமிருந்த கத்தியை எடுத்து நாக கணேஷை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த நாக கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
துர்கா ராவ், நாக கணேஷை வெட்டி கொலை செய்வதை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் தாலியில் உள்ள ஈரம் காய்வதற்கு முன்பாகவே தங்கையின் கணவரை கொலை செய்து பூவையும் பொட்டையும் பறித்த கல் நெஞ்சம் படைத்த துர்கா ராவிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.
கொலை குறித்து நல்லபாடு போலீசார் வழக்கு பதிவு செய்து துர்கா ராவ் அவரது 2 நண்பர்கள், கீர்த்தியின் தந்தை ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம்.
- ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் .
ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
திருப்பதி அலிபிரி மாலைப்பாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2022ஆம் ஆண்டு Fasttag முறையை அறிமுகம் செய்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பாதுகாப்பை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்யவும் Fastag-ஐ கட்டாயமாக்கியுள்ளது.
- விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
- ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதேபோல் நேற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வந்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 23 வைகுந்தம் தங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 85,740 பேர் தரிசனம் செய்தனர். 35,555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- இதுபோன்ற முக்கியமற்ற பிரச்சினைகளை விட சமூகத்தில் மிகவும் முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாள் வழிபாட்டிற்கு உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
யுக துளசி என்ற அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அந்த மனுவில், ஆகம சாஸ்திரங்களின் படி வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஏற்கனவே உள்ள தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடிஸ்வர சிங், "இதுபோன்ற முக்கியமற்ற பிரச்சினைகளை விட சமூகத்தில் மிகவும் முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன.
கடவுள் மீதான உண்மையான அன்பு சக உயிரினங்களுக்கு சேவை செய்வதில் உள்ளது, இத்தகைய விஷயங்களில் அல்ல," என்று தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
- திருப்பதியில் நேற்று 90,011 பேர் தரிசனம் செய்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் தரிசனத்திற்கு வந்ததால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலை மீது செல்ல நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
இதனால் நாராயணகிரி தோட்டம் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர், டீ, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேவஸ்தான அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர். பக்தர்கள் தங்கும் வாடகை அறைகள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . பக்தர்கள் வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வருமாறு தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 90,011 பேர் தரிசனம் செய்தனர். 33,378 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






