search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man Murder"

    • தொழிலாளி தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்ததும் 2 பேரையும் கண்டித்துள்ளார்.
    • மனைவி கள்ளக்காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். ஆத்திரமடைந்த கணவர் 2 பேரையும் சரமாரியாக வெட்டியதில் கள்ளக்காதலன் உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி (வயது 40). கூலித் தொழிலாளியான இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா (27) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். சங்கீதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஈஸ்வரனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இதனால் தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்ததும் தீபாவளி 2 ேபரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபாவளி தனது மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

    இதனையடுத்து சங்கீதாவும், ஈஸ்வரனும் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் சங்கீதாவும், ஈஸ்வரனும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த தீபாவளி அரிவாளால் அவர்கள் 2 பேரையும் மாறி மாறி வெட்டினார். ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்த சங்கீதா மற்றும் ஈஸ்வரன் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஈஸ்வரன் இறந்து விட்டார். சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலனை வெட்டிய தீபாவளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பணிக்காக சென்றபோது அவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முக்கிய கொலையாளியான சுந்தரபாண்டி கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நங்கையார் சந்திப்பு போலீசிலும், துரை முருகன் என்ற ராஜா பேட்டை போலீசிலும் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேச்சுவார்த்தை

    இதற்கிடையே கொலையாளிகள் அனைவரை யும் கைது செய்ய வேண்டும், நம்பிராஜன் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில் நம்பிராஜனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் அரசு பணிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    பணி ஆணை

    அதன்படி இன்று காலை நம்பிராஜனின் மனைவி பேச்சியம்மாள் என்ற பேச்சிக்கு ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரவு பதிவேற்ற கணிணி ஆபரேட்டர் பணிக்கான ஆணையை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார்.

    ஆதரவற்ற விதவை சான்றிதழ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அப்போது நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    உடலை பெற்றுக்கொண்டனர்

    இதையடுத்து நம்பிராஜனின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பின்னர், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருந்த நம்பிராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நம்பிராஜன் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    இதனையொட்டி நடுக்கல்லூரில் தொடங்கி நெல்லை அரசு ஆஸ்பத்திரி வரையிலும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கஞ்சா போதையில் கொலை
    • சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை

    பணகுடி:

    பணகுடி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பசுபதி(வயது 24). ஆட்டோ டிரைவர்.

    சம்பவத்தன்று இரவு இவர் ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    பசுபதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில் கஞ்சா புகைப்பவர்கள் அதிக அளவில் இருப்பார்கள். அவர்கள் கஞ்சா போதையில் அந்த வழியாக சென்ற பசுபதியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே பணகுடி அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்த கணேசன் (59) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் கஞ்சா போதையில் பசுபதியின் கழுத்தை துண்டால் இறுக்கியும், கல்லால் தாக்கியும் கணேசன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் மெயின் சாலையில் வசிப்பவர் ரத்தினம் (65). இவரது மகன் செல்வம் (30). இவர்களது குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் ராசு குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் செல்வம் அதே பகுதியில் சென்ற போது அவரை ராசு மகன் கண்ணதாசன் (42) வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வம் அதே இடத்தில் இறந்தார்.

    இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளி கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
    திருச்சுழி அருகே தாய் கண் முன்பு வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர் நூர் முகமது (வயது 32), வாடகை கார் டிரைவர். இவர் தனது தாய் பாட்சா பீவியுடன் வசித்து வந்தார்.

    நேற்று பண்டிகை நாள் என்பதால் வீட்டில் இருந்தார். இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கினார்.

    இரவு 11 மணி அளவில் யாரோ வீட்டுக்கதவை தட்டினர். சத்தம் பலமாக கேட்கவே நூர்மகமது கதவை திறந்தார்.

    அப்போது உள்ளே நுழைந்த அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் தாய் கண் முன்பே நூர் முகமதுவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உடனே அவர்களிடம் இருந்து தப்பி நூர் முகமது வெளியே ஓடினார்.

    ஆனாலும் அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டியது. இதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டார்.

    அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த நூர்முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் இறந்த பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    இது குறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நூர் முகமது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர். #tamilnews
    மதுரையில் நேற்று இரவு மர்ம நபர்களால் ரவுடி மற்றும் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை செல்லூர் வைத்தியநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது25), பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

    அசோக்குமார் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் வந்தனர். அவர்கள் யார் என்று பெற்றோர் கேட்டபோது, தெரிந்தவர்கள்தான் பேசி விட்டு வருகிறேன் என்று அசோக்குமார் வெளியே சென்றார்.

    சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது. பெற்றோர் சென்று பார்த்த போது அசோக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அசோக்குமாருக்கும், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களில் யாராவது அசோக்குமாரை கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் அருள்தாஸ்புரத்தில் நேற்று நள்ளிரவில் மற்றொரு வாலிபரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அவரது பெயர் ஹரிராஜா (26). செல்லூர் பாக்கியநாதபுரம் அனுமார் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த பெரியபாண்டியின் மகன் ஆவார்.

    பெரியபாண்டி பாக்கிய நாதபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஹரிராஜா அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    நேற்று இரவு வெளியே போய் வருவதாக கூறி சென்ற ஹரிராஜா அருள் தாஸ்புரம் தண்ணீர் தொட்டி அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×