என் மலர்
நீங்கள் தேடியது "Rowdy"
விழுப்புரம்:
திண்டிவனம் ரோசனை போலீஸ்இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவனூர் பஸ் நிலையம் அருகே ஒருவர் சாலையின் குறுக்கே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தீவனூர் கிராமத்தை சேர்ந்த ரவுடி பிரவின்(வயது 34) என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிரவீனை கைது செய்தனர்.
- எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தினேன்.
- கைதான ராஜரத்தினம் பெயர் கடையம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
குத்திக்கொலை
இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் கீழபத்து வயல் பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (38 ) என்பவர் சக்திவேல் முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுதொடர்பாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர் விசாரணை நடத்தி ராஜரத்தினத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-
அவதூறு பேச்சு
தினமும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம்போல் நேற்றும் மது அருந்தினோம். அப்போது சக்திவேல் முருகன் மனைவியை நான் அவதூறாக பேசினேன்.
உடனே அவர், எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்தேன்.
- சேலம் கன்னங்குறிச்சியில் பல வழக்குகளில் ஈடுப்பட்ட பிரபல ரவுடி போலீசார் கைது செய்தனர்.
- 2 மாதங்களுக்கு முன்பு தலை மறைவானார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கோகுல் என்ற கோகுல் நாத் (வயது 29), இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் 2 மாதங்களுக்கு முன்பு தலை மறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கடை வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் ரவுடிகளால் மாமூல் வசூலிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது மாமூல் வேட்டைகளுக்கு சென்று ரவுடிகள் மாமூல் வசூலிப்பதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதோடு, புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தடைபட்டு வருகிறது.
ரவுடிகளின் ராஜ்ஜியமாக புதுவை மாறி வருவதை வில்லியனூர் சம்பவம் உறுதி செய்கிறது.
இச்சம்பவத்தில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டு உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்கள் மீது 144 சட்டத்தை போட்டு அவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.
வணிகர்களிடமும், சிறு, சிறு தொழில் செய்வோரிடமும் மாமூல் வசூல் செய்யும் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
புதுவை மாநிலத்தில் தற்போது தொழில்கள் நலிவடைந்த நிலையில் வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார வரி, தொழில் வரி, குப்பை வரி என அனைத்துக்கும் அதிக அளவில் வரிவசூல் செய்வதோடு புதிதாக மாமூல் வசூல் என்ற வரியையும் வணிகர்களிடம் வசூலிப்பது நியாயமா? இந்த நிலை நீடித்தால் புதுவை மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.
தற்போது காவல்துறையில் குறுக்கிடும் எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட விரோதமான 3 நம்பர் ஆன்-லைன் லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவற்றை எல்லாம் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ரோந்து பணியை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ராபின். ரவுடி. இவர் மீது ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 கொலை வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ராபின் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை சந்தித்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வெளியே சென்று இருப்பதை அறிந்த ராபின் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் இளம்பெண்ணை மிரட்டி கடத்தி சென்றார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் இளம்பெண்ணை துரைப்பாக்கத்தில் விட்டு விட்டு ராபின் தப்பி ஓடி விட்டார்.
வீட்டுக்கு திரும்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மடிப்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இளம்பெண்ணை ராபின் கடத்தி சென்றபோது மாந்தோப்பில் அவரது நண்பர்கள் 4 பேர் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, “உறவுப் பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி புகாரை வாங்க மறுக்கிறார். மேலும் புகாரை வாபஸ் பெறக்கோரி எங்களை மிரட்டுகிறார்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடி ராபினை கைது செய்ய வேண்டும் என்றனர்.
காஞ்சீபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் தேவா (25).
காஞ்சீபுரம் பகுதிகளில் தேவா அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திரா பெட்ரோல் பின்புறம் இவரை மர்மநபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரவுடி தேவாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அவருடைய நண்பர்கள் சதீஷ், துரைபாபு, பாரதி காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவர் நேற்று இரவு சைக்கிளில் மடத்து தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது சைக்கிள் பழுதாகி விட்டது. அதனை அவர் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த ராமையா மகன் மண்டை செல்வம் மற்றும் சங்கர் என்பவரது மகன் தினேஷ் ஆகியோர் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர்.
கோவிந்தராஜ் பணம் கொடுக்க மறுத்ததால் அவரைத் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.
இதனை பார்த்த ஜாபர் சாதிக் என்பவர் தட்டிக்கேட்டு தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரையும் கத்தியால் தாக்கி அவரது செல்போனையும் பறித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டை செல்வம் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேர் மீதும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர்:
கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ரவுடி என கூறவில்லை. படித்தவர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். அதன்பேரில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
40 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் செய்யாததை நான் செய்வேன். தூய்மையான அரசை கொண்டு வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திராவிடம் என்பது 2 கட்சிகள், 3 குடும்பங்களுக்கு சொந்தமானது கிடையாது. நாடு தழுவியது.
கடலூர் மாவட்டத்தில் நான் 2 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரி கிறது. தமிழகத்தில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மறதியாக உள்ளார்கள். அதை போக்க வேண்டும்.
எல்லோரும் சேர்ந்தால்தான் தூய்மையான அரசியலை கொடுக்க முடியும். என்னைப்போல் மக்களும் மாற்றம் வேண்டும் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.
மதுரைக்கு பிரதமர் வந்தபோது ‘மோடி கோ-பேக்’ என்ற வாசகம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது. இது அரசியலுக்காக நடக்கிறது. அரசியல் தீண்டத்தகாதது அல்ல. அரசியலில் இழந்த மாண்பை மீட்க வேண்டும்.
அனைவரும் சேர்ந்துதான் மது விலக்கை கொண்டு வர முடியும். அரசியல் காரணங்களுக்காக ஏழைகள் ஏழைகளாக உள்ளனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #kamal #makkalneethimaiyam
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் வேம்பத்தூர் கண்ணாநகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல், (வயது 52). இவர் பீமநேரி தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர், தனது நண்பர்கள் ரீமாஸ் (30), சுந்தருடன் மோட்டார் சைக்கிளில் கடம்படி விளாகம் பகுதியில் உள்ள துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சந்தைவிளை பகுதியில் உள்ள செங்கட்டி பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிளை அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.
திடீரென இம்மானுவேலுவை அரிவாளால் வெட்டினார்கள். இதை தடுக்க வந்த ரீமாசுக்கும் வெட்டு விழுந்தது. இவர்களது சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.
படுகாயம் அடைந்த இம்மானுவேல் ரீமாஸ் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இம்மானுவேல் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம் 341, 294 (பி), 324, 327, 506(2) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் சிக்க வில்லை. ராஜ்குமார் மீது ஏற்க னவே பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
அம்பத்தூர்:
அண்ணா நகர், அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36) ரவுடி. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடியாக இருந்த சந்தானம் கடந்த சில மாதங்களாக திருந்தி பெயிண்டிங் வேலை செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சந்தானம் பணி முடித்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சத்யா நகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து சந்தானத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தவர்களை சந்தானம் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் சந்தானம் இருந்தால் ஏரியாவில் மதிப்பு கிடைக்காது என்று எண்ணி அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சின்ன ராமபர்ட், ஜோசப் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே ஆந்திராவில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்தபோது காணாமல் போனார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டனர் என்று கூறி இருந்தனர்.
இந்த புகாரை அடுத்து போலீசார் கடத்தல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை கடத்தி சென்றது அவரது உறவினரான ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ரமணா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது டாக்டர்கள் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை ரமணா கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் வழக்கை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் (போக்சோ) வழக்காக மாற்றி ரமணவை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரமணா ரவுடியாக செயல்பட்டு வந்தார். அவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.