என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி"

    • போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.

    ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் விஜயகுமார் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

    • நானும் எனது சகோதரரும் குடும்பத்தோடு கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் இருக்கிறோம்.
    • சென்னை போலீசார் எங்களை வந்து பிடித்துள்ளனர்.

    சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வினோத் என்ற குள்ள வினோத், பாலாஜி. ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரையும் கொல்கத்தாவுக்கு சென்று சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ரவுடி வினோத் கொல்கத்தாவில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் நானும் எனது சகோதரரும் குடும்பத்தோடு கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் இருக்கிறோம். சென்னை போலீசார் எங்களை வந்து பிடித்துள்ளனர்.

    இதுவரை எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களது கை, கால்கள் உடைக்கப்பட்டால் அதற்கு தமிழக போலீசாரே பொறுப்பாகும்.

    இவ்வாறு பேசியுள்ள அவர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினரோடு இருக்கும் காட்சிகளையும் பதிவு செய்து உள்ளார்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    • பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா.
    • பிரபல ரவுடியான இவர் பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பெங்களூர் பரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சிறையில் கைதி ஒருவர் பெரிய கத்தியால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா. பிரபல ரவுடியான இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் சிறை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு சக கைதிகள் ஆப்பிள் மாலை அணிவித்து உள்ளனர். பின்னர் குப்பாச்சி சீனா பெரிய கத்தியால் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

    இதை அங்கு இருந்த யாேரா ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறை விதிகளின் படி சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவது குற்றம் ஆகும். ஆனாலும் கைதிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியானது எப்படி என்று சிறைத்துறை உயர் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது முதல் கட்ட விசாரணையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது தெரியவந்தது. மேலும் வீடியோவில் இருந்த சில கைதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து பரப்பன அக்ரகாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் செல்போன்களை எப்படி கொண்டு சென்றனர். மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உதவியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
    • 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது

    பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.

    இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.

    இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.

    இந்த மனுவை கடந்த வருடம் அக்டோபரில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவானது.

    இதனை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.

    சோட்டா ராஜன் 4 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவருக்கு ஏன் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது? என உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தை எழுப்பியது.

    சாட்சிகள் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை. அதனால், பல வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. 

    • ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்.
    • அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.

    டெல்லியின் சீலம்பூரில் வியாழக்கிழமை மாலை பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் குணால் என்ற 17 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டெல்லி காவல்துறை, இளம் பெண் தாதா ஜிக்ராவை கைது செய்துள்ளனர்.

    ஜிக்ரா தன்னுடைய உறவினரான சாஹிலுடன் சேர்ந்து, பழி வாங்கும் ஒரு பகுதியாக இந்த கொலையை செய்திருக்கிறார்.

    2023-ம் ஆண்டு நவம்பரில் சாஹிலை மீது கொலை முயற்சி நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் லாலா மற்றும் ஷம்பு என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் குணாலின் நெருங்கிய நண்பர்கள். சிறுவன் என்பதற்காக குணால் பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் இல்லை. குணாலே திட்டமிட்டு சாஹில்- ஐ கொலை செய்ய முயன்றதாக ஜிக்ரா நினைத்துள்ளார். இதனால் அவர் தற்போது சாஹில் உடன் சேர்ந்து குணாலை கொலை செய்துள்ளார்.

    ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார். ஆயுதங்களுடனும், இந்த சிறுவர்களுடனும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.

    ஜோயா என்பவருக்கு பவுன்சராகவும் ஜிக்ரா வேலை செய்து வந்திருக்கிறார். ஜோயா தற்போது சிறையில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜிக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.  

    • சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.

    குளச்சல், அக்.27-

    குளச்சல் அருகே திக்கணங்கோடு கீழ புல்லுவிளையை சேர்ந்தவர் ரெத்தினகுமார்.

    இவரது மகன் ரிஜேஸ் (வயது26).கூலி த்தொழிலாளி. கடந்த 24-ந் தேதி இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகில் செல்லும்போது பெத்தேல்புரத்தை சேர்ந்த சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாய மடைந்த ரிஜேஸ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சிம்சோனி பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் மீது மேலும் 4 வழக்குகள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

    • சப்-கலெக்டர் உத்தரவு
    • தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் என்ற வெடிகுண்டு ஆல்பர்ட் (வயது 49). பிரபல ரவுடியான இவர் மீது தக்கலை போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவர் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனையடுத்து இவர் மேலும் குற்ற செயலில் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை சான்று பெற தக்கலை இன்ஸ்பெக்டர் மூலம் கல்குளம் தாசில்தார் வினோத் முன்னிலையில் ஆஜர்படுத்தி 1 வருடம் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாமல் நன்னடத்தையுடன் இருப்பேன் என பாண்டு பத்திரத்தில் கையொப்பம் இட்டு உறுதியளித்திருந்தார்.

    இந்த உறுதியை மீறும் வகையில் மறு மாதமே போலி மதுபாட்டில் ஒரு வாகனத்தில் கடத்தி கொண்டு போகும் போது மார்த்தாண்டத்தில் வைத்து மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட் டார்.

    இதனையடுத்து நன்ன டத்தை உறுதியை மீறி மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு தக்கலை சப்-கலெக்டரிடம் தக்கலை இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார். சப்-கலெக்டர் விசாரணைக்கு பிறகு ஆல்பர்ட் குற்ற வழக்கில் ஈடுபட்டு நன்னடத்தையை மீறியது தெரியவந்துள்ளது.

    எனவே 268 நாட்கள் ஆல்பர்ட்டை சிறையில் அடைக்க பத்மனாபபுரம் உட்கோட்ட நடுவரும் சப்-கலெக்டருமான கவுசிக் உத்தரவிட்டார்.

    • ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வழிமறித்தார்.
    • பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் லைன்மேடு வடக்கு காடு பென்ஷன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவர் நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஜி (வயது 36) என்பவர் வழிமறித்தார்.

    பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார். இது குறித்து சீனிவாசன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் லைன்மேடு, தர்மலிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் தனது வேலை விஷயமாக அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட , மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவுடி மாதேஸ் என்கிற மாதேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செயின், பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டது.

    அவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி ப்ற்றி பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.
    • ரவுடி அலெக்சிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கீழஅண்ணா தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அவர் இட்லி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அலெக்ஸ் வீட்டில் கைத்துப்பாக்கி இருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தி னர்.

    அப்போது அவரது வீட்டில் ஏர் பிஸ்டல் ரகத்தை சேர்ந்த கைத்துப்பாக்கி இருந்தது. அதனை போலீ சார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அது ஆளை கொல்லும் அள வுக்கு சக்தியுடைய துப்பாக்கி இல்லை என்பதும், விசையை அழுத்தினால் அதிக சத்தத்து டன் வெடிக்கும் சாதாரண துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.அலெக்ஸ் சில ஆண்டு களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் குருசாமியுடன் இருந்து உள்ளார். அப்போது தான் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    குருசாமி சிறைக்கு சென்றதும் திருந்தி வாழ்வது என முடிவெடுத்து அலெக்ஸ் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே ரவுடியாக இருந்ததால் அவருக்கு மறைமுக எதிரிகள் இருப்ப தாக கூறப்படுகிறது. ஆகவே அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவுடி அலெக்சி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது.
    • இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் மகன் சிபி வயது ( வயது 22 ). இவர் மீது கடந்த ஆண்டு கருமலை கூடல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×