என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறைக்குள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி - வீடியோ வெளியாகி பரபரப்பு
    X

    சிறைக்குள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி - வீடியோ வெளியாகி பரபரப்பு

    • பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா.
    • பிரபல ரவுடியான இவர் பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பெங்களூர் பரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சிறையில் கைதி ஒருவர் பெரிய கத்தியால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா. பிரபல ரவுடியான இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் சிறை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு சக கைதிகள் ஆப்பிள் மாலை அணிவித்து உள்ளனர். பின்னர் குப்பாச்சி சீனா பெரிய கத்தியால் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

    இதை அங்கு இருந்த யாேரா ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறை விதிகளின் படி சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவது குற்றம் ஆகும். ஆனாலும் கைதிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியானது எப்படி என்று சிறைத்துறை உயர் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது முதல் கட்ட விசாரணையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது தெரியவந்தது. மேலும் வீடியோவில் இருந்த சில கைதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து பரப்பன அக்ரகாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் செல்போன்களை எப்படி கொண்டு சென்றனர். மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உதவியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×