என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birthday"

    • எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
    • பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான். பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.

    பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.

    நீடு வாழ்க இளவல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமான் இன்று 59-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில்," இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு இளவல் சீமான் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்தவர்.

    முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!

    உயர்கல்விக்காக நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    DQ41 திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.

    துல்கர் சல்மான்- ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் DQ 41.

    துல்கர் சல்மான் அவரது 41 வது திரைப்படமான DQ 41-ல், அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைந்துள்ளார்.

    சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். DQ41 திரைப்படம் எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் பத்தாவது திரைப்படம் ஆகும்.

    இப்படத்திற்கு அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பூஜா ஹெக்டே பிறந்தநாளை முன்னிட்டு DQ41 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    • பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா.
    • பிரபல ரவுடியான இவர் பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பெங்களூர் பரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சிறையில் கைதி ஒருவர் பெரிய கத்தியால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா. பிரபல ரவுடியான இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் சிறை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு சக கைதிகள் ஆப்பிள் மாலை அணிவித்து உள்ளனர். பின்னர் குப்பாச்சி சீனா பெரிய கத்தியால் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

    இதை அங்கு இருந்த யாேரா ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறை விதிகளின் படி சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவது குற்றம் ஆகும். ஆனாலும் கைதிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியானது எப்படி என்று சிறைத்துறை உயர் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது முதல் கட்ட விசாரணையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது தெரியவந்தது. மேலும் வீடியோவில் இருந்த சில கைதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து பரப்பன அக்ரகாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் செல்போன்களை எப்படி கொண்டு சென்றனர். மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உதவியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
    • உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.
    • 7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் போக்குவரத்தாக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

    கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரெயிலான வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.

    மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். அதாவது 7.40 மணி நேரத்தில் சென்னை சென்றடையும் வகையில் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரெயில் என்பதால், தென்மாவட்ட பயணிகளுக்கு வைகை எக்ஸ்பிரஸ் உபயோகமாக இருந்து வருகிறது.

    7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 48-வது பிறந்தநாள் விழா இன்று மதுரை ரெயில் நிலைய சந்திப்பின் 4-வது நடைமேடையில் ரெயில் என்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த ரெயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து வைகை ரெயில் எக்ஸ்பிரஸ் என்ஜின் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள லோகோ பைலட்டுகள் மற்றும் பணியாளர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் தங்களுக்கான அனுபவத்தையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

    • மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான்.
    • சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் துல்கர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.படத்தின் டீசரை படக்குழு இன்று மாலை 3 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

    • எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
    • ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தோனி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்திய சாதனைகள் நாம் ஒருமுறை புரட்டி பார்க்கலாம்.

    தோனி தனது கிரிக்கெட் பயணத்தை பள்ளி அணிகளில் விளையாடுவதன் மூலம் தொடங்கினார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய அவர், பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் ஊக்குவிப்பால் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் 1999-2000ல் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 2004-ம் ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 2005ம் ஆண்டும், டி20யில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ம் ஆண்டும் இந்திய அணியில் தோனி அறிமுகமானார்.

    அதனை தொடர்ந்து 2007ல் இந்திய T20 அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 2008 முதல் 2014 வரை டெஸ்ட் அணியையும், 2007 முதல் 2016 வரை ஒருநாள் அணியையும் வழிநடத்தினார்.

    உலக கோப்பை வெற்றிகள்: தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்தியா முதல் T20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.

    1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.

    2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின்பு ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் (T20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

    டெஸ்ட் முதலிடம்: 2009ல் இந்திய டெஸ்ட் அணியை ICC தரவரிசையில் முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): 2008 முதல் CSK அணியின் கேப்டனாக இருந்து, அணியை 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியனாக்கினார். தோனியின் தலைமை மற்றும் ரசிகர் ஆதரவால் CSK உலகளவில் மிகவும் பிரபலமான IPL அணிகளில் ஒன்றாக உள்ளது.

    விருதுகள் மற்றும் கௌரவங்கள்: பத்ம ஸ்ரீ (2009), பத்ம பூஷண் (2018) , ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2007-08), ICC ஒருநாள் வீரர் விருது (2008, 2009) ஆகிய விருதுகளை தோனி வென்றுள்ளார்.

    திருமண வாழ்க்கை: தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    தனிப்பட்ட விருப்பங்கள்: கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக தோனிக்கு மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களின் மீது தீவிர ஆர்வம் உள்ளது. இதன் காரணமாக அவர் தனது வீட்டில் நிறைய கார் மற்றும் பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட்டில் தோனியின் தாக்கம்: தோனி இந்திய கிரிக்கெட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். சிறிய நகரத்தில் பிறந்து, தனது திறமை மற்றும் உழைப்பால் உலகளவில் புகழ் பெற்றார். அவரது அமைதியான தலைமை, முடிவெடுக்கும் திறன் மற்றும் எளிமையான பண்பு இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளது.

    • எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி எம்.எஸ்.தோனி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • நடிகை காஜல் அகர்வால் அண்மையில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தில் பார்வதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • காஜல் அவரது பிறந்தநாளை மாலத்தீவில் அவரது தங்கை நிஷா அகர்வாலுடன் கொண்டாடினார்.

    நடிகை காஜல் அகர்வால் அண்மையில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தில் பார்வதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

     

    இந்நிலையில் காஜல் அவரது பிறந்தநாளை மாலத்தீவில் அவரது தங்கை நிஷா அகர்வாலுடன் கொண்டாடினார். அப்போது இருவரும் நீச்சலுடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நிஷா அவரது அக்கா காஜலுக்கு கன்னத்தில் முத்தம் மிட்ட காட்சி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

    • ஜனாதிபதி முர்மு பிறந்தநாளில் பார்வையற்ற குழந்தைகள் பாட்டுப் பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
    • இதை பார்த்த ஜனாதிபதி கண் கலங்கி அழுத சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்த நாளன்று பிரதமர் மோடி உள்பட பல்வேறு மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தை பார்வையிட்டார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அங்குள்ள குழந்தைகள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்தனர். இதைக் கண்ட ஜனாதிபதி முர்மு, மேடையிலேயே கண் கலங்கி அழுதார். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ×