என் மலர்
நீங்கள் தேடியது "வைகை எக்ஸ்பிரஸ்"
- போத்தனூரில் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் வழக்கமாக வரும் நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
- சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24-ந்தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12657), அதற்கு மாற்றாக சென்னை சென்டிரலில் இருந்து மறுநாள் (27-ந்தேதி) அதிகாலை 1.30 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (22649), அதற்கு மாற்றாக மறுநாள் (27-ந்தேதி) அதிகாலை 1.40 மணிக்கு (2 மணி நேரம் 40 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செல்லும்.
* எழும்பூரில் இருந்து வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமாக மதுரை செல்லும் நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 21-ந்தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06124), வழக்கமாக சென்டிரல் வரும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
* போத்தனூரில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06124), வழக்கமாக வரும் நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (06151), வழக்கமாக கன்னியாகுமரி செல்லும் நேரத்தைவிட 25 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19,21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் குண்டக்கல் செல்லும் சிறப்பு ரெயில் (06091), வழக்கமாக செல்லும் நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12691), வழக்கமாக நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24-ந்தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12601), வழக்கமாக நேரத்தைவிட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.
- வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* வருகிற நவம்பர் 15-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கா்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12292), இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு (25 நிமிடம் தாமதம்) செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடமும், சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 3,5,8,12,13,15 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 30 நிமிடமும் தாமதமாக மதுரை சென்றடையும்.
நாகர்கோவில்-காச்சிகுடா
* நாகர்கோவிலில் இருந்த வருகிற நவம்பர் 8,15 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354), வழக்கமான நேரத்தைவிட 3 மணி நேரம் தாமதமாக காச்சிகுடா சென்றடையும்.
* மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற நவம்பர் 12-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.
* அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து வருகிற நவம்பர் 11-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12516), வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
* சண்டிகாரில் இருந்து வருகிற நவம்பர் 5-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20494), வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.
- 7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் போக்குவரத்தாக வைகை எக்ஸ்பிரஸ் உள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரெயிலான வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பகல் நேரத்தில் சென்னைக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டதால், தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். அதாவது 7.40 மணி நேரத்தில் சென்னை சென்றடையும் வகையில் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரெயில் என்பதால், தென்மாவட்ட பயணிகளுக்கு வைகை எக்ஸ்பிரஸ் உபயோகமாக இருந்து வருகிறது.
7.40 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 48-வது பிறந்தநாள் விழா இன்று மதுரை ரெயில் நிலைய சந்திப்பின் 4-வது நடைமேடையில் ரெயில் என்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த ரெயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து வைகை ரெயில் எக்ஸ்பிரஸ் என்ஜின் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர்.
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள லோகோ பைலட்டுகள் மற்றும் பணியாளர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் தங்களுக்கான அனுபவத்தையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த வசதி வருகிற மே மாதம் 11-ந் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்தும், காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்தும் சென்னைக்கு பகல் நேரத்தில் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்கள் என்பதால், இரு மார்க்கங்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் அதிகம் பயணம் செய்கின்றனர்.
இதனால், முன்பதிவு பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.
எனவே, பயணிகளின் வசதிக்காக இந்த ரெயில்களின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12636/12635) மற்றும் காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12606/12605) ஆகிய ரெயில்களில் ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி வருகிற மே மாதம் 11-ந் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது. அதன்பின், இந்த ரெயில்களில் 3 குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.
- கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
- மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
திண்டுக்கல்:
தென்னக ரெயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 1-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரெயில்கள் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில்-மும்பை விரைவு ரெயில் ஆகஸ்ட் 30-ந்தேதி திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரெயில் வருகிற 30-ந்தேதி பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், ஆகஸ்ட் 1-ந்தேதி விருத்தாச்சலம், சேலம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அச்சமடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
- சுமார் 10 நிமிட காலதாமதமாக ரெயில் புறப்பட்டுச்சென்றது.
செங்கல்பட்டு:
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட கரும்புகையால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த செங்கல்பட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் டி1 பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் சார்ஜ் போட்டபோது கரும்புகை வெளியேறியது.
இதனால் அச்சமடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு கரும்புகையானது அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 10 நிமிட காலதாமதமாக ரெயில் புறப்பட்டுச்சென்றது.
- மேல்மருவத்தூரில் தைப்பூசம் திருவிழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- இதனால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்றுசெல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
சென்னை:
இருமுடி, தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரைக்குச் செல்லும் வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12635) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி வரை மேல்மருவத்தூரில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று 45-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அலங்கரிக்கப்பட்டு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பயணிகள் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர். பின்னர் கேக் வெட்டி பயணிகள் அனைவருக்கும் வழங்கினர்.
திண்டுக்கல்:
1977-ம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயிலாக தொடங்கப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ். ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவை இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
பெரும்பாலும் இரவு நேர ரெயில்களே சென்னைக்கு உள்ள நிலையில் பகல் நேரத்தில் அதிக வேகத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் என்பதால் வைகை ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
காலை 7.10 மணிக்கு மதுரையில் புறப்படும் இந்த ரெயில் மதியம் 2.30 மணிக்கு சென்னையை சென்றடையும். சென்னையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் ரெயில் பயணம் செய்பவர்களுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மிகச்சிறந்த வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் அதனை சமாளிப்பது கஷ்டம் என்பதால் பகல் நேர ரெயிலான வைகை எக்ஸ்பிரசில் பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்வது இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று 45-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்கரிக்கப்பட்டு வந்த ரெயிலுக்கு பயணிகள் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர். பின்னர் கேக் வெட்டி பயணிகள் அனைவருக்கும் வழங்கினர். இந்த சேவை மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் எனவும் ரெயில்வே பயணிகள் விருப்பம் தெரிவித்தனர்.






