search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டவாள பராமரிப்பு பணி: வைகை எக்ஸ்பிரஸ் ஆக.1-ந் தேதி ரத்து
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தண்டவாள பராமரிப்பு பணி: வைகை எக்ஸ்பிரஸ் ஆக.1-ந் தேதி ரத்து

    • கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
    • மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

    திண்டுக்கல்:

    தென்னக ரெயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 1-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரெயில்கள் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    நாகர்கோவில்-மும்பை விரைவு ரெயில் ஆகஸ்ட் 30-ந்தேதி திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

    சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரெயில் வருகிற 30-ந்தேதி பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், ஆகஸ்ட் 1-ந்தேதி விருத்தாச்சலம், சேலம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×