துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தா படக்குழு

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தா படக்குழு
Published on

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் துல்கர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.படத்தின் டீசரை படக்குழு இன்று மாலை 3 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com