search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,

    தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின்.

    தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக உள்ளார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் 2018-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நான்கு சதவீத வாக்குகள் கிடைத்தன. அதன் பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அந்த கட்சி பெற்றது.

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கமல்ஹாசன் இணைந்து போட்டியிட தயாராகி வருகிறார். இதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சியினருக்கு பல்வேறு கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார்.

    கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சியாக உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் மக்களின் குரல் ஒலிக்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று தனது பிறந்தநாளில் அவர் கட்சியினர் மத்தியில் பேசினார்.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக உள்ளார். இப்படி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கமல்ஹாசனுக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில் கமல்ஹாசன் உடன் கைகோர்ப்பது தி.மு.க. கூட்டணிக்கு வலுசேர்க்குமா என்பதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு பலன் அளிக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

     அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று டெல்லியில் தனது குரலை ஒலிக்கச் செய்து விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் அவருக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் இரண்டு இடங்களை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வேகம் காட்டி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதனை வலுவாக வலியுறுத்தவும் அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகளும் கிடைக்கும்பட்சத்தில் அது எங்களது கூட்டணிக்கு பலமாகவே இருக்கும் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சங்ககிரி:

    கோவை தெற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக கோவை புளியகுளத்தைச் சேர்ந்த வட்டச் செயலாளர் வாசுதேவன்(47) உள்பட 20 பேர் நேற்று இரவு கோவையிலிருந்து சென்னைக்கு ஆம்னி சொகுசு பஸ்சில் சென்றனர்.

    பஸ்சை கோவை துடியலூரைச் சேர்ந்த டிரைவர் சங்கர் (40) ஓட்டிச் சென்றார். இரவு 1:45 மணிக்கு சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குப்பனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டாரஸ் லாரியின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன் பகுதி முழுவதும் சிதைந்து சேதம் அடைந்தது. விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவை புளியகுளத்தை சேர்ந்த மல்லேஸ்வரி (23), வெங்கடேஷ் (26), மாரிமுத்து (44), பவன்சாய் (44), தீனதயாளன் (45), ஜோசி (48), பிரகாஷ் (43), சுரேந்திரபாபு (35), ஐயப்பன் (48), வெங்கட்ராஜ் (49), ஜான்சன் (52), வாசுதேவன் (46), சசிகுமார் (46), சீனிவாசன் (48), ராஜ்குமார் (47) ஆகிய 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி, சமூகநல தனி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் அவசரக்கால மருத்துவநுட்பர் ராமச்சந்திரன், பைலட் சரவணகுமார் ஆகியோர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் இடுபாட்டில் சிக்கி இருந்த பஸ் டிரைவர் சங்கரை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்து உள்ளது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் தயாரித்து அளிக்கும் எந்திரத்தை 'கமல் பண்பாட்டு' மையத்தின் சார்பில் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    இன்று முக்கியமான ஒரு நல்ல நாள்; நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா; நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்து உள்ளது.

    ராஜ்கமல் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக இந்த எந்திரத்தை வைத்து ஆரோக்கியமாக குடிநீர் அருந்தி வருகிறேன். அதேபோன்ற ஒரு எந்திரத்தை இந்த மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறோம்.

    காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். மாசு இல்லாத ஒரு குடிநீரை இந்த எந்திரம் மூலம் மக்கள் பெற முடியும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    பின்னர் கமல்ஹாசனிடம் தி.மு.க. கூட்டணிக்கான அடித்தளம் போல இந்த நிகழ்ச்சி காணப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, "அரசியல் கடந்து மனித நேயம் எங்களை இணைத்துள்ளது. எல்லோருக்கும் தனிகட்சி உள்ளது. அவர்களுக்கென விசுவாசம் உள்ளது. ஆனால் மனிதநேயம் முக்கியம் அதுதான் இணைத்துள்ளது. இந்த மனிதநேயத்துடன் இது தொடரும். இங்கு அனைவரும் அரசியல் கடந்து மனிதம் சார்ந்து வந்துள்ளோம்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிறந்தநாள் விழா நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் அரங்கில் தொண்டர்களும் நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.
    • தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா சென்னையில் வருகிற 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம்மவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான வருகிற 7-ந்தேதி மாலை 3 மணிக்கு சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் அரங்கில் தொண்டர்களும் நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.

    ஆழ்ந்த அறிவும், எல்லையில்லா ஆற்றலும், பல கோடி மக்களை ஈர்க்கும் வல்லமையும், தேர்ந்த ஆளுமையும் கொண்ட நமது தலைவரின் பிறந்தநாளை கொண்டாடவும், பாராளுமன்றத் தேர்தலை எழுச்சியோடு எதிர்கொள்ளவும் நவம்பர் 7 (செவ்வாய்க்கிழமை) அன்று நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நற்பணி நம்மவர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் ம.நீ.ம உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் நம்மவரின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடிட வரவேற்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கமல்ஹாசன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த சொக்கரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.
    • பாராளுமன்ற தேர்தல் வருவதால் அடுத்த 6 மாதத்துக்குள் நீங்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு வரவேற்று பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த சொக்கரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.

    பேரவையின் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், பேரவையின் மாநில பொருளாளர் பானுமதி, துணைத் தலைவர்கள் மாடசாமி, ராஜன், குணசேகரன், மெல்கியோ சுதன், சுரேஷ், ஆனந்த், ரவிச்சந்திரன், சங்கீதா, கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேரவையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இப்பொதுக்குழு கூட்டத்தில், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் தொழிற்சங்கமும், மய்யம் திருப்பூர் பனியன் தொழிற்சங்கமும், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையில் இணைந்தது. கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:- மக்கள் நீதி மையத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவையை வலுப்படுத்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் நம்மவர் தொழிற்சங்கங்களை தொடங்கி கட்சியை பலப்படுத்துங்கள். பாராளுமன்ற தேர்தல் வருவதால் அடுத்த 6 மாதத்துக்குள் நீங்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நம்மால் எடுத்து செல்ல முடியும். இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தாஜூதீன் தலைமையில் அந்த கட்சியினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவலை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    அதில் கமல்ஹாசன் கன்னடர். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற ஊர் தான் அவரின் பூர்வீகம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே யூடியூப் சேனலில் இருந்து அதனை அகற்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார்.
    • நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம்.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சனாதனம் என்ற ஒரு வார்த்தையை சொன்னதற்காக ஒரு சின்ன பிள்ளையை பாடாய் படுத்துகிறார்கள். அந்த குழந்தையின் தாத்தாவுக்கு தாத்தா சொன்ன விஷயம்தான் அது. எங்களுக்கு அந்த வார்த்தை தெரிந்ததே பெரியார் சொல்லிதான். அவரை தி.மு.க. மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. வேறு கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழ்நாடே அவரை சொந்தம் கொண்டாடலாம். அதில் ஒருவன் நான்.

    40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அவ்வாறு செய்தது தவறு. இனிமேல் அதை செய்ய நான் தயாராக இல்லை. இவ்வளவு காலம் கடந்து அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை, கோவை, சென்னை என்று பல இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கட்சியில் அழைக்கிறார்கள். நான் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நின்று வெற்றிவாய்ப்பை இழந்தேன். அது சூழ்ச்சி காரணமாக நடந்தது. அந்த சூழ்ச்சியில் நாம் இனிமேல் சிக்கிக்கொள்ளக்கூடாது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு சரியாக வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். போர்படையின் முன்வரிசையில் நிற்க பயமாக இருந்தால் அவன் தலைவனே இல்லை. நான் நிற்கிறேன். ஏற்கனவே நான் கோவையில் தோல்வியடைந்து மூக்கை உடைத்து விட்டேன். அதற்கு மருந்து போட்டுவிட்டு நான் மீண்டும் கோவையில் போட்டியிடுவேன்.

    தி.மு.க. நிர்வாகிகளே என்னிடம் நீங்கள் தோற்கக்கூடாது என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    தமிழ்நாடு தொழில் தலைநகரமாக மாற வேண்டிய முயற்சியை நாம் எடுக்க வேண்டும். இந்தியாவின் தலைவாசல் இமாலயம் அல்ல, கன்னியாகுமரி என்று சொல்லக்கூடிய வாய்ப்பை நம்மால் செய்து காட்ட முடியும். அதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

    தேர்தலுக்காக நேரம் அதிகம் இல்லை. மத்திய அரசின் சவுகரியத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. அதற்கு நமது அசவுகரியத்தால் நாம் பலியாகிவிடக்கூடாது.

    ஒருவர் தான் மட்டுமே பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அது ஜனநாயகம் அல்ல. அதை எதிர்த்துதான் இன்று 'இந்தியா' வெகுண்டு பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது. சீனாவில் அவர்களின் மொழியை திணிப்பது இல்லை. அதற்காக நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை.

    நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இப்படிதான் அனைத்து விஷயத்திலும் நாங்கள் இருப்போம். எங்களுக்கு பிடித்ததை தேடுவோம். இந்தி பேசினால்தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம்.

    நமது அரசியல் வெகுண்டு எழும் அரசியல் அல்ல. பெரியார், காந்தி, அம்பேத்கர் உள்பட பல அறிஞர்கள் எனக்கு வழங்கிவிட்டு போன அரசியல். இப்போது சனாதனத்தை பேசியதற்கு வந்த கோபம் ஏன் அப்போது வரவில்லை?. அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம். அதிலும் பெரியது என்றால் அது மனிதம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார்.
    • பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கோவை:

    நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.

    கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

    ஏற்கனவே கோவை தெற்கு தொகுதி சட்டசபை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு உள்ளதால், தொகுதி மக்களுக்கு அவர் பரீட்சயமானவராக மாறி விட்டார். இதனால் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி எளிதாக இருக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என்பதால் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து கூட்டணி அமைத்து போட்டி என்ற நிலைப்பாட்டில் கமல்ஹாசன் இருக்கிறார்.

    தற்போது கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் நட்பு ரீதியாக நெருக்கமான நிலையில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இணைந்து அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த கூட்டணியில் சேரும் பட்சத்தில் கமல்ஹாசன் எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகமே? இருந்தாலும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி எப்படியாவது கேட்கும் தொகுதியை பெற்று விடலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அப்படி கேட்கும் தொகுதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது, அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது பற்றியும் கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். இந்தநிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தற்போது சிறுஉரசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் (22-ந்தேதி) கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசிக்கிறார். கூட்ட முடிவில் கமல்ஹாசன், யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய இருக்கிறார்.

    கமல்ஹாசன் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதால் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை மறுநாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கோவை வருகிறார். நேராக கூட்டம் நடக்கும் ஓட்டலுக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    கூட்டம் முடிந்த பின்னர் மாலையில் கணியூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அங்கு பேராசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print