search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்ஹாசன்"

    • படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.
    • அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.

    நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 ' பர்ஸ்ட் சிங்கிள்' தாத்தா வாராரு தாத்தா வாராருன்னு ... அனிருத் பாடியுள்ளார்.
    • மே 3 -வது வாரம் நேரு ஸ்டேடியத்தில் விழா நடத்தி இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் 'இந்தியன் 2 ' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்கினார். இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.




    இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் 'இந்தியன் 2' படம் வரும் ஜூன் மாதத்தில் 'ரிலீஸ்' செய்யப்படும் என தகவல் வெளியானது, அதிகாரப்பூர்வ 'ரிலீஸ்' தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்க உள்ளது.




    இந்நிலையில் இப்படத்தின் 'பர்ஸ்ட் சிங்கள்' விரைவில் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளது.

    "தாத்தா வாராரு.. தாத்தா வாராரு.." என்ற வரிகளில் தொடங்கும் இதன் பர்ஸ்ட் சிங்கிள் அமைந்துள்ளது.

    இந்தியன் 2 ' பர்ஸ்ட் சிங்கிள்' தாத்தா வாராரு தாத்தா வாராருன்னு ... அனிருத் பாடியுள்ளார். மே 3 -வது வாரம் நேரு ஸ்டேடியத்தில் விழா நடத்தி இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    மேலும் இப்படத்தில் 'சேனாபதி' என்ற வேடத்தில் கமல் ஊழலுக்கு எதிரான இந்தியன் தாத்தாவாக மீண்டும் நடித்துள்ளார். இந்த 'மேக்கப்' போட கமல் தினமும் 6 மணிநேரம் செலவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், மாரி போன்ற பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
    • போலிஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார்.

    2007 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக காஜல் அகர்வால் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து 'சந்தாமாமா' படத்தின் மூலம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

    2009 ஆம் ஆண்டு ராஜமௌளி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா' படம் காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், நாயக், பிசின்ஸ் மேன் போன்ற பிரபல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.

    பின் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தார்.

    நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், மாரி போன்ற பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

    கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கருங்காப்பியம் படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து தெலுன்கு படமான தற்பொழுது சத்யபாமா படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஏசிபி போலிஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 17 ஆம் தேதி வெலியாகிறது என படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதையொட்டி காஜல் அகர்வாலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.
    • நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.




    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு

    விரைவில் தொடங்க உள்ளது. 'சைபீரியாவில் 'க்ளைமாக்ஸ்' காட்சியும் மற்றும் புதுடெல்லி, சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.




    இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அலை, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிம்புக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குசாவடியில் அலையென திரண்ட மக்களுக்கு மத்தியில் வாக்களித்தார். நடிகர் சூர்யா, கார்ஹ்த்டி, சிவகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    நடிகர்களான விக்ரம், விஜய் சேதுபதி, செல்வ ராகவன், தனுஷ், வெற்றி மாறன் ரத்ன குமார், கமல்ஹாசன், திரிஷா, ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் அவர்களின் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது
    • இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன

    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.

    இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

    இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நடிகர் சித்தார்த் பிறந்தநாளை ஒட்டி இன்று அவரது சிறப்பு போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
    • வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    அதைத் தொடர்ந்து ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. சில வாரங்களுக்கும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

    அதில் ரஜினிகாந்தின் கை, தங்க கைக்கடிகாரங்களால் வடிவமைக்கப்பட்ட விலங்கில் மாட்டி இருக்கும். அவருக்கும் பின்னால் ஒரு பெரிய கடிகார வடிவமைக்கிபட்டிருக்கும்.

    அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ  கதைக்களத்தில் ஒரு அங்கமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு 'கழுகு' என்று டைட்டில் பெயர் சூட்டப்பட்டு இருக்க்கிறது என தகவல் வெளியாகியது.

     

    இந்நிலையில் அடுத்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மோகன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

     

    படத்தின் ப்ரொமொ வீடியோ படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரத்தில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர்.
    • இப்படத்தில் துல்கரின் வேடத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட சிம்பு இப்போது புதிதாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.




    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.




    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர்.

    இப்படத்தில் துல்கரின் வேடத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட சிம்பு இப்போது புதிதாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.




    இப்படத்தின் படப்பிடிப்பு தேர்தல் . வாக்கு பதிவு முடிந்த பின் விரைவில் தொடங்க உள்ளது. 'சைபீரியாவில் 'க்ளைமாக்ஸ்' காட்சியும் மற்றும் புதுடெல்லி சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி.
    • முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும்.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    60 ஆண்டுகளாக பொள்ளாச்சிக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் மொத்தமே நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. அதில் பொள்ளாச்சியில் மட்டுமே இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன.

    விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி. இப்படி விவசாயிகளுக்காக செய்வது தான் திராவிட மாடல். ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது.

    இலவச மின்சாரம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 10 ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது. விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு. ஆகவே எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

    திராவிட மாடல் என்பது பெண்களுக்கானது. உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன், புதுமை பெண் திட்டம் எல்லாம் உங்களுக்கானது. ஆனால் பெண்களுக்கான அரசாக மத்திய அரசு இல்லை. விவசாயிகளுக்காக பல நன்மைகளை செய்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசா அல்லது விவசாயிகளை விரோதிகள் போல பார்க்கும் மத்திய அரசா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. அரசு மக்களுக்காக வேலை செய்யும் அரசு.

    நாட்டுக்கு நல்லது செய்யும் அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், பொய்யாமொழி புலவரை பற்றி பேசி விட்டால் நீங்கள் பேசுவது எல்லாம் மெய்யாகி விடாதே. இந்த பொய் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
    • செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.

    மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.

    ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.

    ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கமல் பழங்கால பாணியில் தொப்பி, காக்கி சீருடை அணிந்தும், இன்னொரு கமல் வெள்ளை சட்டை அணிந்து வர்மக்கலைஞர் போன்றும் போஸ் கொடுத்துள்ளனர்.
    • மக்களிடம் ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் 'சேனாபதி' தயாராகி விட்டார்" என்பதை புகைப்பட 'போஸ்டர்' மூலம் விளக்குவதாக அமைந்துள்ளது.


    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.




    இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

    இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.




    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    மேலும் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலாவை மீண்டும் 'இந்தியன் - 2' படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் மும்பை சென்ற போது மனீஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன. அந்த காட்சிகளை படத்தில் இணைத்து ஜூன் மாதம் 2- ந்தேதி "இந்தியன் 2" படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.




    இந்நிலையில் கமலின் 'இந்தியன் 2 ' படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று தமிழ் புத்தாண்டை யொட்டி சிறப்பு 'போஸ்டர்' வெளியிட்டுள்ளனர்அந்த புதிய போஸ்டரில் இரட்டை வேடத்தில் கமல் நடிக்கும் கதாபாத்திரத்தின் பிரேம்கள் காட்டப்பட்டுள்ளன.

    அதில் கமல் பழங்கால பாணியில் தொப்பி, காக்கி சீருடை அணிந்தும், இன்னொரு கமல் வெள்ளை சட்டை அணிந்து வர்மக்கலைஞர் போன்றும் போஸ் கொடுத்துள்ளனர்.

    "இந்தியன்-2 ல் மக்களிடம் ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் 'சேனாபதி' தயாராகி விட்டார்" என்பதை இந்த புகைப்பட 'போஸ்டர்' மூலம் நமக்கு விளக்குவதாக  அமைந்துள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை.
    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை கொடுக்காமல் ஒதுங்கிவிட்டனர்.

    இதனால் காங்கிரசை நம்பி காத்திருந்த கமல்ஹாசனை யாருமே பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போய் சந்தித்தார்.

    அப்போது போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் மேல்சபை எம்.பி. பதவி மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளராமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். நெல்லை மற்றும் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.


    கோவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராகுலுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி இருப்பதால் என்னால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி கமல்ஹாசன் புறக்கணித்துள்ளார்.

    ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவரது செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியும் பேசி வந்துள்ளார். டெல்லியில் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று பேசியுள்ள அவர் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரமும் மேற்கொண்டார்.

    ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது நடந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.

    இப்படி தேர்தல் நேரத்தில் யாரோ ஒருவர் போல மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக காங்கிரசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதே, கமல்ஹாசனின் கோபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படி காங்கிரஸ் கட்சி மீது கமல் கொண்டுள்ள கோபம் இன்னும் அடங்காமல் இருப்பதாலேயே ராகுல் பிரசாரக் கூட்டத்தை கமல் ஹாசன் புறக்கணித்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    ராகுலின் தமிழக சுற்றுப் பயணம் பற்றி கமல்ஹாசன் எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    ×