என் மலர்
நீங்கள் தேடியது "dispute"
- துறையூர் அருகே கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு சகோதரர்கள் வெட்டிக்கொண்டனர்
- போலீசார் தீவிர விசாரணை
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவரது மகன்கள் பன்னீர்செல்வம் (48), பாஸ்கர் (40). இருவரும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்கள். இதில் பன்னீர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். பாஸ்கர் என்பவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்ட நிலையில் இருவரும் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று முடிந்து நேற்று இரவு கறி விருந்து நடைபெற்றுள்ளது. அப்பொழுது சகோதரர்கள் இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாஸ்கர், தனது தகப்பனாரான மாரிமுத்துவிடம் கறி கேட்டுள்ளார். அதற்கு மாரிமுத்து கறி ஏற்கனவே தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.இதனால் பாஸ்கரின் அண்ணன் பன்னீர்செல்வம் தனது இலையில் இருந்த கறியை எடுத்து பாஸ்கர் இலையில் வைத்துள்ளார். எச்சில் இலையில் இருந்த கறியை எடுத்து எப்படி என்னுடைய இலையில் வைக்கலாம்? என கூறி பாஸ்கர் பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி சகோதரர்கள் இருவரும் காய்கறி நறுக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து மாறி மாறி வெட்டிக்கொண்டனர். இதனால் பதற்றம் அடைந்த மாரிமுத்துவின் உறவினர்கள் சகோதரர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் கோவிந்தராஜ்,(வயது24) . இவருக்கும் மங்கலம் பேட்டை பேரூராட்சியை சேர்ந்த சுபாஷ் மகள் அனுஷாவுக்கும் (19) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓரு வருடம் ஆகாத நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையிலும் மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மாமியாரும் மருமகளும் தனித்தனியே சமைத்து சாப்பிட்டு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டின் அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, மாமியார் கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளதால் தான் முதலில் தண்ணீர் பிடித்து கொண்டு செல்கிறேன் என கூறிய போது மாமியார்- மருமகள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமானஅனுசா தனது வீட்டில் வெளிக்கதவு மற்றும் உன் கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார். குளிக்க சென்ற கணவன் கோவிந்தராஜ் தகவல் கேட்டு ஓடி வந்து கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று அனுசாவை தூக்கிலிருந்து மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுசா உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. காவியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார்.அனுசாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடியாத நிலை உள்ளதால் கோட்டாட்சியர் விசாரணை செய்ய பரிந்துரை செய்துள்ளார்.
- மாலை கருப்பூர் பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட்டில் பணியில் இருந்தார்.
- என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் தாபா ஓட்டல் நடத்தி வரும் நபர், முகமது அலியிடம் வந்து தனது ஓட்டலில் குடித்துவிட்டு இரு தரப்பினர் தாக்கிக் கொள்வதாக கூறினார்.
சேலம்:
சேலம் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரராக பணியாற்றி வருபவர் முகமது அலி. இவர் நேற்று மாலை கருப்பூர் பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட்டில் பணியில் இருந்தார்.
அப்போது, அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் தாபா ஓட்டல் நடத்தி வரும் நபர், முகமது அலியிடம் வந்து தனது ஓட்டலில் குடித்துவிட்டு இரு தரப்பினர் தாக்கிக் கொள்வதாக கூறினார்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு முகமது அலி சென்று பார்த்தபோது, தகராறில் ஈடுபட்ட வெளியூரை சேர்ந்த 5 பேர் கொண்ட ஒரு தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். ஓமலூர் அருகே கோட்டக் கவுண்டம்பட்டியை சேர்ந்த 5 பேர் கொண்ட மற்றொரு தரப்பினர் அங்கு இருந்தனர்.
அவர்களிடம் முகமது அலி விசாரணை நடத்தினார். அப்போது ஆத்திரமடைந்த அந்த 5 பேரும் போலீஸ்காரரை தாக்கினர். இதுகுறித்து முகமது அலி உடனடியாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீஸ்காரர் முகமது அலி கொடுத்த புகாரின் பேரில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முகமது அலி மீது தாக்குதல் நடத்தியதாக சண்முகம் (வயது 22), மணிகண்டன் (29), விஜய் (25), தினேஷ் (31), வெங்க டேசன் (35) ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது போதையில் தகரா றில் ஈடுபட்ட நபர்களை விசாரிக்க சென்ற போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சில அணிக ளின் மீது, வெற்றி பெறும் என்று கூறி ரூ.4000 மற்றும் ரூ.7000 என 2 முறை பந்தயம் வைத்துள்ளார்.
- பந்தய பணமான மொத்தம் ரூ.11 ஆயிரத்தை நீலமேகம் மற்றும் வினோத்திடம் அழ கேசன் கொடுக்கவில்லை.
சேலம்:
சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனா ரப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அழகேசன் (வயது 22). வெள்ளி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நீலமேகம் (24), சரவணன் மகன் வினோத் (22) ஆகியோரிடம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சில அணிக ளின் மீது, வெற்றி பெறும் என்று கூறி ரூ.4000 மற்றும் ரூ.7000 என 2 முறை பந்தயம் வைத்துள்ளார்.
ஆனால் இவர் கூறிய 2 அணிகளுமே தோற்று விட்டதால், பந்தய பணமான மொத்தம் ரூ.11 ஆயிரத்தை நீலமேகம் மற்றும் வினோத்திடம் அழ கேசன் கொடுக்கவில்லை.
இதனால் சம்பவத்தன்று, அழகேசனை சோளம்பள் ளம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே வரவழைத்த நீலமேகம், வினோத் ஆகியோர் பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அழகேசனை தாக்கி அவரிட மிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 4800, வாட்ச் உள்ளவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்ட னர். தாக்குதலில் காயம் அடைந்த அழகேசன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நீலமேகம் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து, அவர்களி டமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார்.
- அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
சேலம்:
சேலம் பொன்னம்மா பேட்டை ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரின் மகன், அப்சல் என்கிற காச்சா (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்சலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- தனியாக சென்ற வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்
திருச்சி,
திருச்சி கல்லக்குடி ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள கோயிலில் தேர்பவனி நடைபெற்று உள்ளது. அப்போது தேரின் முன்பாக நடனம் ஆடுவது தொடர்பாக இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, வாக்கு வாதம் நடைபெற்று உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆலம்பாக்கம் மேலத்தெருவை சேர்ந்த அடைக்கலராஜ்(வயது 30) என்பவர், பஞ்சாயத்து அலுவலகம் பக்கம் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த எட்வின்(31), எடிசன்(27), சிம்சன்(26), பாரத்(25) ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அடைக்கலராஜ் பலத்த காயம் அடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராவத்தநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவியாக சரண்யா கதிரவன் என்பவர் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவியின் கணவரான கதிரவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
- ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராவத்தநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராவத்தநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவியாக சரண்யா கதிரவன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவியின் கணவரான கதிரவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து இரு தரப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் 5 பேருக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராவத்தநல்லூர் பஸ் நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறினர். அதற்கு போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து
- ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது.
- கூட்டத்தை பார்த்து பயந்த வருண், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.
டெல்லியில் இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் ஏற்பட்ட சலசலப்பு துப்பாக்கி சூட்டில் முடிந்தது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கறிஞர் சுஷில் குப்தா தனது தரப்பை சேர்ந்த ஜஃப்ரூல் மற்றும் சையத் முக்கிம் ராசா என்பவரை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் நோக்கிலேயே முக்கிம் ரசா சுஷில் குப்தா அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
முக்கிம் ரசாவுடன் அன்கித், முகிம், வருண் மற்றும் குலாம் முகமது உள்ளிட்டோரும் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கிருந்த பொது மக்கள் அலுவலக வாசலில் திரண்டனர். கூட்டத்தை பார்த்து பயந்த வருண், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.
இதில் அங்கிருந்த அனாஸ் அகமது மீது தோட்டா பாய்ந்தது. காயமுற்ற அனாஸ் அகமதுவை அங்கிருந்தவர்கள் அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அனாஸ் அகமதுவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய பின் அங்கிருந்து தப்பிக்க முயன்ற குலாமை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கினர். இதோடு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரையும் பொது மக்கள் தாக்கினர். பொதுமக்களால் தாக்கப்பட்ட குலாமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் மூன்று பேரை தாக்கினர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அன்கித் மற்றும் முகிம் ஆகியோரை போலீசார் இரண்டு மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- மணிகண்டன் (வயது42) திருமணமான இவர் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்
- இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள பணப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42) தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகின்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.
அப்போதும் கணவன் -மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் மனைவி சுவிதா கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அன்று முதல் மன வருத்தத்தில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் மணிகண்டணின் தற்கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்திரா தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார்.
- அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சந்திரா (வயது 39) இவர் சம்பவத்தன்று நீர்த்தேக்க தொட்டி அருகே தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பிளாஸ்டிக் குடம் அருகில் உள்ள கிணற்றில் கிடந்துள்ளது. இது குறித்து கேட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த மொட்டையன் மகள் மலர், அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.