search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "litigation"

    • சுதாகர் தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் சுதாகர் (44) தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சுதாகர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பாபு (42), அமுதா (50) , சங்கர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சமூக விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி. குழந்தை திருமணம் தொடர் பாக இவருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார்.அப்போது விருதுநகர் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த சிறுமிக்கும், செங்கமலப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவ ருக்கும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உறவினர் முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்ட விரோதமாக திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதற்கு முனியசாமியின் பெற்றோர் கருப்பசாமி, செல்லத்தாய், உறவினர் மற்றொரு கருப்பசாமி ஆகி யோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இதுகுறித்து சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி முனியசாமி உள்பட 4 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த கணவர்-உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 30-ந்தேதி சிறுமிக்கு சாத்தூர் சுப்பி ரமணியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவ ருக்கு சிறுமியை, அவரது சித்தி மாரீஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத் துள்ளார்.

    அதன் பிறகு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி முருகன் அவரை கட்டாயப்படுத்தி பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகனின் பெற்றோர் சிறுமியை தகாத வார்த்தை களால் திட்டி கொடுமைப் படுத்தியதாக கூறப்படு கிறது. இதையடுத்து சிறுமி உதவி மையத்தை தொடர்பு கொண்டார். அவர்களது ஏற்பாட்டில் சிறுமி குழந்தை காப்பகத்தில் சேர்க்கப் பட்டார். மேலும் இதுகுறித்து சின்ன காமன்பட்டி சமூக நலத் துறை மகளிர் ஊர்நல அலுவலர் மாரியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் காப்பகத்திற்கு சென்று சிறுமியிடம் விசா ரித்தார். அப்போது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சிறுமி அவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரி யம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியின் கணவர் முருகன், சித்தி மாரீஸ்வரி, கணவரின் தந்தை பெருமாள், தாய் சரோஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்லமுத்து (வயது 35). கடந்த 12-ந் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி (20) உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது குறித்து தட்டி கேட்ட அண்ணாமலை என்பவரை பூபதி தரப்பினர் தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்கச் சென்ற செல்லமுத்து மற்றும் சிலரை பூபதி தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பூபதி, கண்ணு மகன் சுப்ரமணியன், ஏழுமலை மகன் வெங்கடேசன், வேலு மகன் கோவிந்தராஜ் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர்.

    • விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 41). ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும் தோட்டப் பட்ைட சேர்ந்த விஸ்வநாத னுக்கும் முன்விரோத தக ராறு இருந்து வந்தது. சம்ப வத்தன்று விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கபில் தேவ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விஸ்வநாதன் மீது இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் விஸ்வ நாதன் மற்றும் கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து விஸ்வ நாதன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கபில்தேவ் மீதும், கபில்தேவ் கொடுத்த புகா ரின் பேரில் விஸ்வநாதன், பாவாணன் ஆகியோர் மீதும் போலீசார் தனித்தனி யாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் ராணி (50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் கோத்தகிரி செல்வதற்காக நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சென்றார். பள்ளிகளின் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்க உள்ள நிலையில் கோத்தகிரி, ஊட்டி செல்வதற்காக ஏராளமான பயணிகள் பஸ்நிலையத்தில் குவிந்திருந்தனர்.

    இதனால் பஸ்சில் இடம் கிடைக்காமல் ராணி நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது கோத்தகிரியில் இருந்து வந்த அரசு பஸ் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் பஸ்சை டிராக்கில் நிறுத்துவதற்காக டிரைவர் முயன்றார்.

    அந்த நேரத்தில் ராணி பஸ்சின் பின்புற சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் இடம் பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ராணியின் காலில் ஏறி இறங்கியதில் கால் நசுங்கியது. இதனால் ராணி வேதனையில் அலறி துடித்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் ராணி அனுமதிக்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முத்துக்கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து.
    • கோவில் உண்டியை கத்தியால் சேதப்படுத்தினர் .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக்கி ருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது30) ,அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர்கள் இருவரும் நேற்று மாலை 6 மணி அளவில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு குடிபோதையில் அந்த வழியாக வந்த வாகனங்க ளை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியை கத்தியால் சேத ப்படுத்தினர் .இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டுள்ளார்.

    ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் 2 பேரும் சங்கரை சரமாரி யாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். காயமடைந்த சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை ஆசாமிகளை தேடி வருகிறார்.

    • முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர்.
    • உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50) விவசாயி. இவர் தன் மனைவி சாரதா பெயரில் தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் கட்டி உள்ளார். இது 6.7.2018 அன்று முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர். இதை தெரிந்து தெரிந்து கொண்ட சிறுதலைப் பூண்டி தபால்காரர் விஜயன், அதை அபகரிக்க நினைத்து சென்னைக்கு சென்றிருந்த தேவராஜை போன் மூலம் தொடர்பு கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் கியாஸ் வந்துள்ளதால் உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.

    இதை நம்பிய தேவராஜ் தன் மனைவி சாரதா மூலம் அனைத்தையும் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.பின்பு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 23 ஆயிரத்து 645 ரூபாயையும் விஜயன் எடுத்துவிட்டார். இது குறித்து தேவராஜ் பலமுறை கேட்டும் விஜயன் தரமறுத்திருக்கிறார். இதுகுறித்து தேவராஜ் வளத்தி போலீஸ் நிலையத்தில் தபால்காரர் விஜயன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரி கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது விருகாவூர் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாஷ் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் எஸ்.ஒகையூர் கிராமத்தில் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சில நிலங்களில் பயிறு இருந்ததால் அந்த பகுதி ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.

    இதனால் தங்கள் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல் அனைத்து நிலத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், ராஜா, கொடியரசு, பிச்சப்பிள்ளை, பொன்னுசாமி உள்ளிட்ட 14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மற்றும் சிலர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. புகாரின் எஸ்.ஒகையூரை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 17 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிக்கப்பட்டது.
    • சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி உசேன் காலனியை சேர்ந்தவர் தெய்வமணி(வயது22), பட்டதாரி ஆசிரியர். இவர் கடந்த 2000 ஆண்டில் மகாராஜா நகரில் நிலம் வாங்கினார். இந்த நிலையில் தற்போது மகளின் படிப்பு செலவிற்காக வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதற்காக வில்லங்க சான்றி தழை சரிபார்த்தபோது, தெய்வமணிக்கு சொந்த மான இடம், கடந்த ஆண்டு தனலட்சுமி என்பவரிடம் இருந்து அவரது கணவர் செந்தில்குமாருக்கு விற்கப்பட்டதாகவும், பின்னர் அதனை அவர் மாரிக்கனி, முத்துலட்சுமி ஆகியோருக்கு விற்றுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும் அந்த நிலப்பத்திரத்தை வைத்து தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் வாங்கி யிருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த தெய்வமணி இதுகுறித்து விசாரித்தபோது, தனலட்சுமி மகள் என போலி ஆவணத்தை தயார் செய்துள்ளார். மேலும் தெய்வமணி இறந்ததாக கூறி போலி சான்றிதழையும் தயார் செய்து அதன் மூலம் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக பத்திர எழுத்தர் வைரமுத்து, சிவகாசி சார்பதிவாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட 8 பேர் இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு அரசு பெண் ஊழியர் துன்புறுத்தினர்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மார்டன் தெருவை சேர்ந்தவர் விக்டோரியா, அரசு பள்ளி ஊழியர். இவருக்கும், கல்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஜான்பிரிட்டோ விருதுநகர் மாஜிதிரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் எனது கணவர் தொழில் செய்வதற்காக என்னிடம் பண உதவி கேட்டார். இதற்காக 3 தவணைகளில் வங்கியில் ரூ.23 லட்சம் வரை கடன் பெற்று கொடுத்தேன். ஆனால் அதனை செலவு செய்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது. இதுகுறித்து கேட்டால் பணம் கொடுத்தால் என்னுடன் சேர்ந்து வாழ்வேன் என மிரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் கென்னடி-ஆகத்தம்மாள் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    தற்போது கூடுதலாக 9 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது பெற்றோர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராணுவ வீரர்

    சாத்தூர் படந்தாலை சேர்ந்தவர் விமலாதேவி(27). இவருக்கும், வெம்பக் கோட்டை சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் கண்ணன் என்பவருக்கும் 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் விமலாதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் மீது சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தனபதி. இவர்களுக்குள் முன்விரோதம் தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்பத்திற்கும், தனபதி குடும்பத்திற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ராஜபிரியா, ராமலிங்கம், ஜெயசூர்யா, ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ராஜபிரியா கொடுத்த புகாரின் பேரில் தனபதி, விஜயா, சரண்யா, ஜெயசூர்யா மீதும், ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் ராமலிங்கம், மணிமேகலை, ராஜப்பிரியா ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×