search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதூறு"

    • ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
    • கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.

    இதனையடுத்து, 'கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேலும், அண்மையில் நடைபெற்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை விமர்சித்தனர்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, கவர்னருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று நீதிபதி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். 

    • இந்த வழக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது.
    • ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

     அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு ஜூன் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா குறித்து கடந்த 2018 ஜூன் மாதம் பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவதூறாக பேசியதாக அவர் மீது பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் நடந்து செல்லும் தேசிய ஒற்றுமைப் பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, அதை இடையில் நிறுத்திவிட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்று மீண்டும் பயணத்தைக் தொடர்ந்தார்.

     

     

     இந்நிலையில், இன்று (மே 27) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

     

     

    இதனை ஏற்று வழக்கு விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சேலம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளனர். இதை பார்த்த தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பது தெரிய வந்தது. இவர் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார். இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழக அரசு குறித்து அவதூறு பதிவு வழக்கில் ேபாலீஸ் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் ஆஜராகவில்லை.
    • வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கி ரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 38). இவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்தது.

    இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அர்ஜூன் சம்பத் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படு கிறது.

    இந்த பதிவு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் கோவை யில் உள்ள அர்ஜூன் சம்பத் வீட்டில் நேற்று மதுரை மாவட்ட போலீசார் சம்மன் வழங்கினர்.

    அதன்படி இன்று காலை அர்ஜூன் சம்பத் செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக வில்லை. அவரின் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.

    பங்காரு அடிகளாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் அர்ஜூன் சம்பத் நேரில் ஆஜராக முடிய வில்லை என்றும், வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
    • இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் வட கைலாசம், காமராஜர் நகரில் உள்ள குருலட்சுமி அறக்க ட்டளைக்கு சொந்தமான இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ரூ100கோடி மதிப்பிலா ன 1 ஏக்கர் 80 சென்ட் இடத்தை ராமச்சந்திரன் ,ரேவதி ,அன்பு ஆகியோர்களின் உறவினர்கள் 40 ஆண்டு குத்தகைக்கு வைத்திருந்து 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    கோர்ட்டு உத்தரவுப்படி இந்த இடத்தை கடந்த19-ந் தேதி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கையகப்படுத்திய போது ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தூண்டுதலின் பேரில் தான் நீங்கள் இடத்தை கையகப்படுத்துகிறீர்கள். நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம் என்று ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர்கள் மிரட்டியதாக ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் மீது வேல்முருகன் எம்.எல்.ஏ. உதவியாளர் ராஜசேகர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்எம்.எல்.ஏ உதவியாளர் புகார்மனு கொடுத்துள்ளார். அதில்பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வேல்முருகன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
    • முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் சிவசங்கரன் என்பவர், வாட்சப் குழுவில் என்.எல்.சி வன்முறை தொடர்பாக வழக்கறிஞர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் முதல்நிலை காவலர் சிவசங்கரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததின்பேரில் முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    கடலூர்:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக வாய்க்கால் வெட்டும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அழித்து இப்பணி நடைபெறுவதை கண்டித்தும், நிலம் கொடுத்தவர் வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க கோரியும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக சேத்தியா த்தோப்பு அருகேயுள்ள மேல்வ ளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் பேட்டியளித்தார். இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்பாக அவதூறாகவும், ஆபாசமா கவும் பேசினார். இது தொலைக்கா ட்சிகள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

    இதனையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தி.மு.க. தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அருளரசி, மலர்விழி, சுதாசம்பத் ஆகியோர் சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

    இம்மனுக்களில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய சாந்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
    • பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்தனர். அப்போது டிவிட்டர் வலைதளத்தில் கடந்த 4-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை விமர்சித்தும் அவரது புகைப்படத்தை பகிர்ந்து மதரீதியாக விமர்சித்தும் அதன் மூலம் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் இரு மதத்தினரிடையே பகைமை உணர்ச்சியும் வெறுப்பையும் தூண்டும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

    இது குறித்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் கட்டிமுத்து என்பவர் இதனை டிவிட்டரில் பதிவிட்டது தெரியவந்தது. அதன்படி கட்டிமுத்து மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி பரப்புவோர் மீது காவல் துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நவாஸ்கனி எம்.பி. குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
    • திருப்பாலைக்குடி மக்களுக்கு எம்.பி. உரிய உதவிகளை செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருப்பா லைக்குடி கிழக்கு ஜமாத் தலைவர் கலீல் ரகுமான் கூறுகையில், சமீபத்தில் எம்.பி.க்கு எதிராக சிலர் எதிர்க்கட்சி தூண்டுதலில் தவறான தகவல்களை அவதூறாக பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தி முற்றிலும் தவறானது.

    ஏற்கனவே திருப்பாலைக்குடியில் அடிப்படை வசதி கோரி மக்கள் போராட்டம் செய்ய வேண்டும் என்று கூறியபோது ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அப்படி போராட்டம் ஏதும் செய்ய வேண்டாம். நான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்கள் தேவையை நிறைவேற்றி தருகிறேன் என்று கூறி அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

    ஆனால் சில விஷமிகள் எம்பிக்கு எதிராக சில தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருப்பாலைக்குடி மக்கள் நலனில் எம்.பி. அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முகமது பாருக் கூறுகையில், தற்போது எம்.பி. பேசியதாக ஒரு வீடியோ சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்த வீடியோ மூன்று மாதத்திற்கு முன்பாக வேறு ஒரு நிகழ்ச்சியில் வேறு விஷயத்திற்காக பேசியதை சில விஷமிகள் எடிட்டிங் செய்து அவதூறாக பரப்பி வருகின்றனர் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    திருப்பாலைக்குடி மக்களுக்கு எம்.பி. உரிய உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி கூறிய தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிராசார் திடீர் போராட்டம்
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    விஜய் வசந்த் எம் பி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பரப்பிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணா விரத போராட்டம் அறி விக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகியிடம் போலீசார் உடனடியாக அந்த வாலி பரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக் கப்பட்டது. இந்த நிலை யில் நேற்று மாலை மீண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்த னர். ஆனால் இன்று காலை வரை அந்த வாலிபரை கைது செய்யப்படவில்லை.இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்பினு லால்சிங், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட னர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கள் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், டைசன்,செல்வன் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகி கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் டிஎஸ்பி நவீன் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. சம்பந்தப் பட்ட நபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

    • ராஜபாளையம் அருகே பெண்ணை அவதூறாக பேசிய கணவர்-கள்ளக்காதலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கண்மாய்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 27). இவரது கணவர் பிரவீன் (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரவின் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பிரியா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தெரிய வந்ததை தொடர்ந்து ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் கணவர் மீது பிரியா புகார் கொடுத்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்தி ரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் பிரியா தென்காசி ரோட்டில் நடந்து சென்றதாக போது சொக்கர் கோவில் அருகே பிரவீ னும், தங்கப்பி ரியாவும் அவரை வழிமறித்து தகாத வார்த்தை களால் திட்டி அவதூறாக பேசியதாக கூறப்படு கிறது.

    இது குறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் நிலை யத்தில் பிரியா புகார் செய்தா ர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×