என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்கு"
- தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.
- மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி ஒட்டப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி தீபா .இவர் சாமி செட்டி பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆசிரியர் தீபா கடந்த 18-ம் தேதியன்று வெண்ணாம்பட்டி குடியிருப்பில் உள்ள உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்க்கச் சென்றார். அங்கு அவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதியன்று இரவு தீபாவின் வீட்டின் கதவை உடைத்துக் மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து மறுநாள் காலையில் பக்கத்து வீட்டில் இருந்த நபர்கள் தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் அங்கு வந்து பார்த்தபோது வீடு கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சடைந்தார். தீபா தனது தாயார் இறந்து விட்டதால் வெண்ணாம்பட்டி குடியிருப்பில் இருந்து விட்ட நிலையில் அவர் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.
தீபா நேற்று அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் நடந்து 17 நாட்களுக்குப் பிறகு தாமதமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பையும் குறைத்து 12 பவுன், ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் என குறைத்து மதிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
- மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
- சுதாகர் தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார்.
- இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் சுதாகர் (44) தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சுதாகர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பாபு (42), அமுதா (50) , சங்கர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் டவுன் 2-வது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தற்போது இந்த கோவில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கோவில் சுவரில் ஒரு அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் திறந்த வெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- எஸ்.பி அதிரடி நடவடிக்கை
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலை அடைத்து மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி, அரூர், பென்னா கரம், பாலக்கோடு, உள்ளிட்ட காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது தருமபுரி சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் அரூர் சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 9 கடைகளிலும் பென்னாகரம் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் பாலகோடு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்டத்தில் குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விருதுநகர் அருகே கணவர், கர்ப்பிணி மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
- 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சிவகாமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா தேவி (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை முனீஸ்வரன் வீட்டில் ஏற்றுக் கொண்ட னர். ஆனால் சுஷ்மிதா தேவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரனின் உறவி னர்கள் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் முனீஸ்வரனின் பெற்றோர் வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் சுஷ்மிதா தேவி கர்ப்ப மடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுஷ்மிதா தேவியின் பெற்றோர் சமாதானம் அடைந்து தலை தீபா வளிக்கு தம்பதிகளை முறைப்படி அழைத்துச் சென்றனர். சுஷ்மிதா தேவி கர்ப்பமாக இருப்பதால் ஒரு வாரமாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். அவரைப் பார்க்க முனீஸ்வ ரன் அடிக்கடி சென்று வந்தார். சம்பவத்தன்று முனீஸ்வரன் தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கல வடியான்-ராதா தம்பதி யின் மகன் மோகன் என்பவர் அவர் காதல் திருமணம் செய்து கொண்டதை கிண்டல் செய்து பேசியுள்ளார். இது குறித்து சுஷ்மிதா தேவியின் பெற்றோரிடம் முனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து முனீஸ்வரன், சுஷ்மிதா தேவி மற்றும் அவரது பெற்றோர் மோகனின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளனர்.
அப்போது மோகனின் குடும்பத்தாரும் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த உறவினர்களும் மோகனுக்கு ஆதரவாக அங்கு திரண்ட னர். இருதரப்புக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரனை மண்வெட்டி கம்பால் அவர்கள் தாக்கி னர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதை தடுப்பதற்காக குறுக்கே புகுந்த சுஷ்மிதா தேவியையும் கர்ப்பிணி என்றும் பாராமல் அவர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மோகன், அவரது பெற்றோர், சக்தி வேல், வனிதா, வில்லரசி, கற்பகமணி, மாரியம்மாள், முருகன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
- அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
சென்னை பெரவள்ளூர், கே.சி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்(25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென இமானுவேல் வந்தார். அப்போது அவர் போலீசார் தன் மீது அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறியபடி பிளேடால் கழுத்து மற்றும் இடது கையை அறுத்துக் கொண்டார்.
இதில் அவர் ரத்தம் சிந்தியபடி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இம்மானுவேலுக்கு 20 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு அங்கு தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 59). இவரது மகன் தமிழ்ச்செல்வன் புதுச்சேரி குருவிநத்தத்தை சேர்ந்த சரண்ராஜிடம் பணம் கடனாகப் வாங்கியது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று லோக சுந்தர், சரண்ராஜ் உள்பட நான்கு பேர் திடீரென்று தமிழ்ச்செல்வன் வீட்டுக்குள் நுழைந்து தமிழ்ச்செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த தமிழ்ச்செல்வன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் லோக சுந்தர், சரண்ராஜ் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
- இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
குழித்துறை :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பாகோடு ஊராளிவிளையை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 48), கட்டிட தொழிலாளி. சம்பத்தன்று வீட்டின் அருகாமையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த வினோலின் (36), அனல் ஜெகலின் றோஸ் (37) ஆகியோர் கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அவரது தாயார் கனகம்மாள் (70), தடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரையும் கம்பியால் தாக்கியதால் அவரும் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல மறுதரப்பில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த பிறிகேஸ் வினோலின் (26), அவ்வழியே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாந்தப்பன் (46), ஜான்சன் (55) ஆகியோர் தடுத்து நிறுத்தி இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
- ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
தக்கலை, நவ.21-
தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
போலீசார் குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக கூட்டத்தை கூட்டி பொது தொல்லை கொடுத்து வருவதாக பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் விசு மற்றும் மதுரை பகுதியை சேர்ந்த தென்மண்டல தலைவர் வன்னியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.