என் மலர்
நீங்கள் தேடியது "கனிமொழி"
- இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்றவர் காணாமல் போனார்.
- பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதால் இது ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு துணைநிற்போம் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
"விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது இதேபோன்ற ஒரு போக்கு காணப்பட்டது.
- சாதாரண மக்கள் நெருக்கடியின் சுமையைத் தாங்க வேண்டியிருந்தது.
சென்னை :
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் வணிக ரீதியான எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பரவலான கவலையைத் தூண்டியுள்ளது. பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற தகவல்கள் இந்த கவலைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.
கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது இதேபோன்ற ஒரு போக்கு காணப்பட்டது, அப்போது மத்திய பா.ஜ.க. அரசின் தாமதமான மற்றும் போதுமான நடவடிக்கை இல்லாததால் சாதாரண மக்கள் நெருக்கடியின் சுமையைத் தாங்க வேண்டியிருந்தது.
சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரைவாகச் செயல்பட வேண்டும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பரந்த பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இடையூறுகளைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.
- சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலனும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்களை சூழ வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
- தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னையில் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
- பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது.
- இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடை தரித்த வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.
- தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.
- அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.
* தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.
* அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.
* மற்றக்கட்சியினர் கூட்டணி குறித்து அ.தி.மு.க.வினர் ஏன் கவலைப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நயினார் நாகேந்திரனின் விஜய் குறித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
- அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
- பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதி மிக்க தலைவராக முதலமைச்சர் உள்ளார்
- தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் துரோக பாஜக கூட்டத்தோடு அதிமுக கைகோர்த்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, "உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்னகத்தின் எஃகு மனிதர் நம் முதலமைச்சர். பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதி மிக்க தலைவராக முதலமைச்சர் உள்ளார்
இந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கும்போது, கழக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லத் தோன்றவில்லை; "வெற்றி நமது" என்பதை அவர் உறுதி செய்துவிட்டார் என்று பாராட்டவே வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பது அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அல்ல. பா.ஜ.க தலைமையிலான கூட்டணி. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அள்ளி அல்ல, கிள்ளிக்கூட கொடுக்காத ஒரு துரோகக் கூட்டணி இது. தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் துரோக பாஜக கூட்டத்தோடு அதிமுக கைகோர்த்துள்ளது.
யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதலமைச்சருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது.
- தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாகும். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே ஏராளமானோர் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கின்றனர்.
இந்தியா முழுவதும் இருந்து வர்த்தகர்களும், தொழிலாளர்களும் சிவகாசிக்கு வந்து செல்லும் நிலையில் இங்குள்ள ரெயில் நிலையம் போதிய வசதிகள் இன்றி இருக்கிறது.
ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மாணிக்கம்தாகூர் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். சில வாரங்களாக ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதில் நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
சென்னை பூங்கா ரெயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
- மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
- இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
தேர்தலை ஒட்டி இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று பட்ஜெட் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மத்திய பாஜக அரசை பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- காங்கிரசுடனான கூட்டணியில் எந்த மோதலும் இல்லை.
- எந்த கட்சி கூட்டணியில் இணையும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.
நெல்லை:
நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறது.
நெல்லையில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது சந்தோஷமாக உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதை இது காட்டுகிறது. அடுத்ததாக அமையப் போவதும் தி.மு.க ஆட்சி தான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன் வைக்கிறார்கள்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க. தான் என்பதை மக்கள் அறிவார்கள். எங்கள் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் நிச்சயமாக வந்து இணைய வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் அது குறித்து எங்களின் தலைவர் மு.க ஸ்டாலின் தான் இறுதி முடிவை எடுப்பார். கருத்துக்கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருப்பதை எங்களால் கண்கூடாக பார்க்க முடிகிறது. மக்களின் பேராதரவு எங்களுக்கே இருக்கிறது. சமீபத்தில் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தோடு தி.மு.க. பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு.
டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி சந்தித்துள்ளார்.
கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எம்பி கனிமொழி, ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.






