என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK Vijay"

    • இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை.
    • தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

    இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை.

    தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.

    • களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என்ற விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ.
    • நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    இங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு சொல்கிறேன், 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள், அவர்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச் சாலை செல்வது உறுதி.

    நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.

    நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    வடிவேலு, நயன்தாரா வந்தால்கூடதான் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூடதான செய்யும். அதற்காக எல்லோரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது.

    அதிமுக களத்தில் இல்லை என பேச எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

    அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனமானது. விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
    • 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.

    தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் சென்னை பனையூரில் அக்கட்சி தலைவரான நடிகர் விஜயின் காரை முற்றுகை யிட்டு அஜிதா மற்றும் அவரது ஆதர வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அஜிதா ஆக்னல் 3 நாட்களாக உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை அவரது கணவர் உள்ளிட்டோர் உடனடியாக தூத்துக்குடியில் தங்கள் வீட்டருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறும்போது, அஜிதா ஆக்னலுக்கு தற்போது எக்ஸ்ரே போன்ற பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தூக்க மாத்திரைகளின் செயல்பாட்டை குறைக்கும் விதமான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு இல்லை. 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.விரைவில் குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அவருக்கு இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அஜிதா ஆக்னல் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

    • திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் முழங்கினார்.
    • தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி... தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே" என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை. அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே முயற்சி செய்து வருகிறார். அவரைப் பார்த்து அதிமுகதான் பயப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
    • இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது

    த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் , "வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள். உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். த.வெ.க. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது. ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்" என்று தெரிவித்தார்.

    இதனுடைய, தவெக கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி, "தமிழ்நாடு அமைதியான மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகவும் இருந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    தவெக பிரச்சார கூட்டங்களில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

    • பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை.
    • கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை.

    தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர்ர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
    • திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது.

    தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஐயோ பாவம் தவிர விஜய்க்கு வேறு என்ன சொல்ல முடியும்.

    விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் (செங்கோட்டையன்) ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார்.

    அவர் சேர்ந்ததனால், ஏதோ அம்மா உடன் இருப்பதுபோல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார்.

    செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.

    திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது.

    கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    • செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.

    அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக ஒரு தீய சக்தி என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.

    இந்நிலையில், திமுக அரசின் மீதான தவெக தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலினிடம்,"அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா" என விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்," என்னைக்காவது விஜயிடம் போய் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? ஒருவாட்டி அவரை பேச விடுங்கள் பார்க்கலாம்.." என்றார். 

    • அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது.
    • எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.

    ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தவெக பெண் தொண்டர் ஒருவரிடம் பிரச்சார கூட்டம் குறித்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.

    அப்போது, தீவிர தவெக தொண்டரான அந்த பெண்," விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வெச்சிடுவேன்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் பேசிய அவர்,"ஈரோடு பிரச்சார கூட்டத்திற்கு விஜய்க்காக வந்தேன். நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுருக்கேன். முதல் முறை அதிமுகவிற்கும், 2வது முறை சீமானுக்கும் போட்டேன். இந்த முறை கண்டிப்பாக என் ஓட்டு விஜயக்கு தான்.

    ஆட்சிக்கு வருபவர்களால் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது. இலவசம் இலவசம்-னு சொல்றாங்க ஆனா பஸ்-ல கூட ஏத்துறது இல்ல. தண்ணீர் வசதி, சாலை வசதி இல்ல.

    விஜய் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும். மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும். எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.

    என் வீட்டில் 9 பேர் இருக்காங்க. 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவாங்க. அப்படி போடலனா சோத்துல விஷம் தான்.

    விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகருக்கு மாலைபோட்டு வரர்தா வேண்டியிருக்கேன" என்றார்.

    • தி.மு.க. எனும் தீய சக்திக்கும், த.வெ.க. எனும் தூய சக்திக்கும் தான் போட்டியே என்றார் விஜய்.
    • எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது:-

    எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..

    என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி.

    தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.

    என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • இளைஞர் மாநாட்டில் இளைஞர்கள் இல்லை என்கிறார் ஆதவ் ஆர்ஜூனா.
    • நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?

    ஈரோடு பரப்புரையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    அப்போது அவர் மேலும் பேசியதாவது:-

    அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது.

    கொள்கை தலைவர் சமூக சீர்த்திருத்தவாதி எங்களுடைய வழிகாட்டி தந்தை பெரியாரின் வழியில் அவர் பாதத்தை தொட்டு நமக்கான மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டில் இருந்து தலைவர் தொடங்குகிறார்.

    நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?

    இங்கு இருக்கக்கூடிய ஈரோடு மக்கள் எந்த அளவிற்கு, ஒவ்வொரு விவசாயிகள், ஒவ்வொரு நெசவாளர்கள், ஒவ்வொரு தொழிலாளர்கள் நம்முடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துயரத்தில் கடக்கின்றனர்.

    இந்த ஆட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் டாஸ்மாக் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நிர்வாகத்தை கொடுத்துள்ளார்கள்.

    இதை மாற்ற வேண்டும் என்றால் யாரால் மாற்ற முடியும்? தமிழக வெற்றிக் கழகத்தால், தலைவர் விஜயால் மட்டுமே மாற்ற முடியும்.

    இன்று இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை த.வெ.க. தான்.

    திமுக நடத்திய இளைஞர்கள் மாநாட்டில் இளைஞர்களே இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி.
    • விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பொதுக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ் சார்பில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.

    இந்நிலையில், ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," விஜயின் பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு கியூ ஆர் கோட், பாஸ் தேவையில்லை.

    விஜயின் பிரச்சாரத்திற்கு யார் வேண்ஐமானாலும் வரலாம் பொதுமக்கள் தாங்களாகவே பங்கேற்கலாம், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

    ×