என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divorce Petition"

    • நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார்.
    • அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.

    நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு 73வது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரியவந்தது.

    நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

    இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.

    விஜயுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த நடிகை' சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

    அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.

    நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை.

    திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

    நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
    • பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சி தலைவரான அவர் பிரிந்து சென்ற தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

    உமர் அப்துல்லாவின் இந்த மனுவை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி விசாரணை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. திருமண முறிவை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி கோர்ட்டு அவரது விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

    டெல்லி ஐகோர்ட்டு இன்று உமர் அப்துல்லாவின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய் தது. கீழ் கோர்ட்டு வழங்கிய உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.

    ×