என் மலர்
நீங்கள் தேடியது "உமர் அப்துல்லா"
- கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
'டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்' என்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "அனைத்து ஜம்மு காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் கிடையாது. சிலர் மட்டும் தான் இங்கு எப்போதும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கெடுத்து வருகிறார்கள். ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு மக்களையும், ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லிமையும் ஒரே சித்தாந்தத்துடன் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள் என்று நினைக்கும் போது, மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது கடினம். மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம்" என்று தெரிவித்தார்.
- பாஜக அல்லாத அரசு இருந்தால் மாநில அந்தஸ்து கிடையாது என்றால் பாஜக அதை சொல்ல வேண்டும்.
- பாஜக உடன் மற்றவர்கள் கூட்டணி அமைத்ததால் மாநிலம் சீரழிந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை விரைவுப்படுத்தும் நோக்கத்தில் பாஜக-வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரித்து இரண்டையும் யூனியன் பிரதேசமாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு உறுதி அளித்தபோதிலும், வழங்காமல் இழுத்தடிக்கிறது.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மாநில அந்தஸ்துக்காக பாஜக உடன் கூட்டணி வைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அளித்த வாக்குறுதிகளிலும் ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வருவதைப் பொறுத்து மாநில அந்தஸ்து சார்ந்துள்ளது என்று ஒருபோதும் கூறவில்லை.
ஒருவேளை ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசு இருந்தால், மீண்டும் மாநில அந்தஸ்து இல்லை என்றால், பாஜக நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசாங்கம் இருக்கும் வரை, உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று அவர்கள் எங்களிடம் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முடிவு செய்வோம்.
தேசிய மாநாடு கட்சி, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. 2015ஆம் ஆண்டு பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சியமைத்ததில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் இன்னும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த கூட்டணியில் ஜம்மு-காஷ்மீர் எப்படி சீரழிந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்கள் செய்த தவறை மீண்டும் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
- நேற்று முன்தினம் மேகவெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்தது.
- ஒரு கிராமத்தை வெள்ளம் மற்றும் மண் மூடியதால் பலர் சிக்கித்தவிப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சசோதி என்ற கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் பேய்மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை இழுத்துச் சென்றது. மேலும், வீடுகளை மழை வெள்ளம், மண் மூடியுள்ளது.
இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் 70 முதல் 80 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் கிராம மக்கள், 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர உமர் அப்துல்லா பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் மீட்புப்பணியை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே உமர் அப்துல்லாவை சுற்றி வளைத்த பொதுமக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அப்போது அருகில் இருந்த கூடாரத்திற்கு (Tent) வாருங்கள், உங்களுடைய குறைகளை கேட்கிறேன் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஆனால், மக்கள் செல்ல மறுத்துவிட்டார். இதனால் மக்களை சந்திக்காமல் உமர் அப்துல்லா செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
மக்களுடைய கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய கோபம் உண்மையானது. கடந்த இரண்டு நாட்களாக மாயமாக தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடை என்ன? என விரும்புகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு வருவார்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
மாயமானவர்கள் உயிர்ப்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றால், உடல்களை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப்., ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ள மக்களை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மீட்க முடியாத இடங்களில், குறைந்தபட்சம் உடல்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை பார்வையிட்டார்.
இந்நிலையில் அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சபர்மதி ஆற்றங்கரையில் காலை ஓட்டப் பயிற்சி செய்து ஒற்றுமை சிலையை பார்வியிட்ட படங்களை முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தலத்தில் பகிர்ந்தார்.
இதை பிரதமர் மோடி மறுபதிவு செய்து, 'காஷ்மீரிலிருந்து கெவாடியா வரை. சபர்மதி ஆற்றங்கரையில் ஒற்றுமை சிலையைப் பார்வையிட்ட உமர் அப்துல்லாவைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவரது வருகை ஒற்றுமையின் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. மேலும் நமது சக இந்தியர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் பாஜக அரசால் ரூ. 2,989 கோடி செலவில் கட்டப்பட்ட ஒற்றுமை சிலை கடந்த 2018 இல் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
- பல விசயங்களுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டியுள்ளது.
- பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்றால், அதற்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
பஹல்காம் தாக்குலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்விக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
பல விசயங்களுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டியுள்ளது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சில நாட்களுக்கு முன்னதாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி எனக் கூறியிருந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்றால், அதற்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் சுட்டுக்கொலை செய்துள்ளோம். அதேவேளையில், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்விக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் இது தொடர்பாக கேள்வி கேட்பார்கள்.
370 சட்டப்பிரிவை நீக்கினால், பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று 2019ஆம் ஆண்டு சொன்னவர்களிடம், இன்று 6 வருடங்களுக்குப் பிறகு பயங்கரவாதிகள் இன்னும் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்பதை கேட்க வேண்டியிருக்கும். ஆகவே, அப்போது கூறப்பட்டதற்கும், தற்போதைய நிலைமைக்கும் வித்தியாசம் உள்ளது.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- எந்த சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தினர் என்பதை விளக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லாவை விட துணைநிலை ஆளுநர் அதிகாரமிக்கவர். போலீஸ் துறை இவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படையை எதிர்த்து சண்டையிட்ட காஷ்மீர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தவர்களுக்கு வருடந்தோறும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.
அந்த வகையில் ஜூலை 13ஆம் தேதியான நேற்று முதல்வரான உமர் அப்துல்லா நேற்று அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் உமர் அப்துல்லாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டையிடுவது போன்று போலீசார் தள்ளிவிட்டனர்.
இது தொடர்பான வீடியோவை உமர் அப்துல்லா வெளியிட்டுள்ளார். மேலும் "இது நாள் உடல் ரீதியான அனுபவித்த போராட்டம். நான் சட்டத்திற்கு புறம்பாக அல்லது சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. எந்தச் சட்டத்தின் கீழ் அஞ்சலி செலுத்துவதை தடுக்க சட்ட பாதுகாவலர்கள் முயற்சி செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல.
- எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.
என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக.
எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். மாநில அந்தஸ்து வழங்கப்படும் நாளில் நான் ஆளுநரிடம் சென்று சட்டசபையைக் கலைப்பேன் என தெரிவித்தார்.
- சண்டை எங்கே நடந்தாலும் அது நல்லது அல்ல.
- சண்டை விரைவில் முடிவுக்கு வந்தால், சிறந்ததாக இருக்கும்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை 8 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய ஈரான், இன்று கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
அதேவேளையில் அணுஉலை இருக்கும் இடங்கள், அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ள இடங்களை குறிவைத்து ஈரான் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உமர் அப்துல்லா பதில் கூறுகையில் "இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை நல்ல விசயம் அல்ல. சண்டை எங்கே நடந்தாலும் அது நல்லது அல்ல. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தள்ளப்பட்டதற்கு, ஈரான் செய்தது என்ன?. இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வந்தால், சிறந்ததாக இருக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உளவுத்துறைத் தலைவர், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு அருகில் இல்லை என்றார். அப்போது அதுதான் ஆதாரம். இப்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல் திடீரென ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 90 மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். 400 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றார்.
- தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
- மாலிக் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரே ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக், தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
மாலிக் தனது முடிவை X தளத்தில் வெளியிட்டு, ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கை மற்றும் நலன் எப்போதும் எனது முன்னுரிமையாக இருக்கும் என்பதால், எனது மக்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த முடிவு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கடந்த ஆண்டு தோடா தொகுதியில் பாஜகவை தோற்கடித்து இவர் ஆம் ஆத்மியின் முதல் எம்எல்ஏ ஆனார். மாலிக் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
- முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு.
- ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்த பணியை வழங்கினால், வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.
ஜம்மு-காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்கும் நிலையான காவலர் பணிக்கு (static guard duties) சுமார் 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இளைஞர்கள் அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி, முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உமர் அப்துல்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள மிகவும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்க 4 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற உங்கள் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு குறித்து எனது ஆழ்ந்த சந்தேகங்களையும் கவலையையும் தெரிவிக்கவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.
நமது முன்னாள் படைவீரர்களின் சேவை மற்றும் ஒழுக்கத்தை நாங்கள் மதிக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கை கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான படித்த வேலையில்லாத இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் வாய்ப்புகளை தேடி போராடி வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையான காவலர் பணிக்குஅ ராணுவ நிபுணத்துவம் தேவையில்லை. உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும். அவர்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்பு ஒரு முக்கிய உயிர்நாடியாக இருக்கலாம்.
மேலும், இந்தக் கொள்கை நீண்டகால சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிவர்த்தி செய்யத் தவறும் ஒரு குறுகிய கால பாதுகாப்பு தீர்வாகக் கருதப்படலாம். உள்ளூர் இளைஞர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய தூணான பொதுப் பாதுகாப்பைப் பராமரிப்பதில் பொறுப்புணர்வு மற்றும் பங்கேற்பையும் வளர்க்கும்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
- பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.
பின்னர், சண்டை நிறுத்தத்தை இருநாடுகளும் அறிவித்த நிலையிலும், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டைவிட்டு வெளியேறினர்.
பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது வீடு திரும்பலாம் என ஜம்மு- காஷ்மீர் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் சூழலில், உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
மேலும் அவர், "பாகிஸ்தானின் அத்துமீறல் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது. பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
- பல ஆண்டுகளாக ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
- இந்த நேரத்தில் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும்.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இரு தரப்பு மோதல், அதைதொடர்ந்த்த உலக நாடுகளின் தலையீடு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றை குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தேசிய ஊடகம் ஒன்றில் நேர்காணல் அளித்தார்.
அதில் பேசிய அவர், "பஹல்காம் தாக்குதலால், பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பல ஆண்டுகளாக ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டு வந்த மாநில சுற்றுலாத் துறை மீண்டும் சரிந்துள்ளது. பாகிஸ்தான் மீண்டும் வேண்டுமென்றே காஷ்மீரை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றியுள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
ஆண்டின் இந்த நேரத்தில் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருக்கும். வருமானம் ஈட்டக்கூடியதாக இருந்தது. இந்த நேரத்தில், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்பினர். முன்பு ஒரு நாளைக்கு 50 முதல் 60 விமானங்கள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் இப்போது எல்லாம் வெறிச்சோடியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் வான்வெளி மூடப்பட்டுள்ளன" என்று வேதனை தெரிவித்தார்.






