என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cloud burst"

    • நேற்று முன்தினம் மேகவெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்தது.
    • ஒரு கிராமத்தை வெள்ளம் மற்றும் மண் மூடியதால் பலர் சிக்கித்தவிப்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சசோதி என்ற கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் பேய்மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை இழுத்துச் சென்றது. மேலும், வீடுகளை மழை வெள்ளம், மண் மூடியுள்ளது.

    இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் 70 முதல் 80 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் கிராம மக்கள், 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர உமர் அப்துல்லா பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் மீட்புப்பணியை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே உமர் அப்துல்லாவை சுற்றி வளைத்த பொதுமக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அப்போது அருகில் இருந்த கூடாரத்திற்கு (Tent) வாருங்கள், உங்களுடைய குறைகளை கேட்கிறேன் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஆனால், மக்கள் செல்ல மறுத்துவிட்டார். இதனால் மக்களை சந்திக்காமல் உமர் அப்துல்லா செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    மக்களுடைய கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய கோபம் உண்மையானது. கடந்த இரண்டு நாட்களாக மாயமாக தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடை என்ன? என விரும்புகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு வருவார்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

    மாயமானவர்கள் உயிர்ப்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றால், உடல்களை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப்., ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ள மக்களை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மீட்க முடியாத இடங்களில், குறைந்தபட்சம் உடல்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ளப்பெருக்கில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

    வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வருகிற 21ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர். மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    279 ஆண்கள், 15 பெண்கள், 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர். மன்சேரா மாவட்டத்தில் 23 பேரும், ஷங்லா மாவட்டத்தில் 36 பேரும், பஜாயுர் மாவட்டத்தில் 21 பேரும், பட்டாக்ராம் மாவட்டத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். 74 வீடுகள்முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

    • மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
    • நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.

    இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    ஜூன் 30 அன்று, நள்ளிரவில் மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.

    நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு முழித்த அதன் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.

    உடனடியாக அவர் அந்த நல்லறவில் அந்த கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.

    நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளனர். 

    • மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.
    • ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 23 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 16 நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    மேகவெடிப்பு, மழை வெள்ளம் காரணமாக மண்டி மாவட்டத்தில் உ்ள துனாங் நகரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் வங்கி செயல்பட்டு வந்தது. மழை வெள்ளத்தால் வங்கியின் ஒரு கதவு முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்துள்ளது.

    மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம் மற்றும் அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    துனாங்கில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஏராளமான வணிகர்கள், விவசாயிகள் கணக்கு வைத்துள்ளனர். தினசரி வரவு, செலவு மேற்கொண்டு வந்துள்ளனர். 8 ஆயிரம் மக்களுக்கு இந்த ஒரு வங்கிதான் எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஏராளமான பணம் மட்டும் இல்லாமல், அடது வைத்த நகைகள் ஏராளமான இருக்கும் என கருதப்படுகிறது. கதவு இல்லாமல் சகதியில் மூழ்கிக் கிடக்கும் வங்கியில் இருந்து நகைகளை கொள்ளையடிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இடிபாடுகளை அகற்றிய பிறகுதான் சேதம் குறித்து முழு விவரம் தெரியவரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
    • கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது.

    பருவமழை பாதிப்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவிக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த வரிசையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் மேக வெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்குகிறது.

    சிம்லாவை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேக வெடிப்பு தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

    இந்த குழுவில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட மூத்த காவல் துறை தலைவர் சஞ்சீவ் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். "எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி மேக வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் 20 பேர் மாயமாகி உள்ளனர்," என காஷ்யப் தெரிவித்தார்.

     

    மேக வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி பகுதியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது. மேலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.


    இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி உத்தராகண்ட் மாநிலத்தில் ஃபியூரி புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    • மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
    • மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தியாவில் பருவமழை பாதிப்பில் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி பலியானோர் எண்ணிக்கை 365ஆக அதிகரித்து உள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    வயநாடு இயற்கை பேரிடர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 1 வீடு மட்டுமே எஞ்சியுள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து சமேஜ் கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவர் கூறியதாவது:- புதன்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது பலத்த இடி இடித்தபோது வீடே உலுக்கியது. இதையடுத்து நாங்களே வெளியே வந்து பார்த்தபோது, கிராமம் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் கிராமத்தில் உள்ள கோவிலில் போய் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம். என் வீடு மட்டும் பேரழிவில் இருந்து தப்பியது, ஆனால் மற்ற அனைத்தும் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டன என்று கூறினார்.

    அதே கிராமத்தை சேர்ந்த வயதான பக்ஷி ராம் கூறியதாவது, "எனது குடும்பத்தினர், சுமார் 14 முதல் 15 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் பற்றிய செய்தி அதிகாலை 2 மணிக்கு எனக்கு கிடைத்தது. அப்போது ராம்பூரில் இருந்ததால் நான் உயிர் பிழைத்தேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். எல்லாம் அழிந்துவிட்டன. என் குடும்பத்தினரை தேடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

    இதனிடையே மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, கிராமத்தில் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கான நிதி உதவி விரைவில் அறிவிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×