என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"
- ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில், இந்தியா உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது.
- சீனாவின் ராணுவ செலவு 7 சதவீதம் அதிகரித்து, 31 ஆயிரத்து 410 கோடி டாலராக இருந்தது.
புதுடெல்லி:
சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாடும் தனது ராணுவத்துக்கு செய்த செலவினம் குறித்து ஆய்வு செய்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் வேளையில், அந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில், இந்தியா உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டில் இந்தியாவின் ராணுவ செலவு 8 ஆயிரத்து 610 கோடி டாலர். (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்து 31 ஆயிரம் கோடி) இது, முந்தைய ஆண்டை விட 1.6 சதவீதம் அதிகம்.
அதே சமயத்தில், பாகிஸ்தான் ராணுவ செலவு 1,020 கோடி டாலர். எனவே, இந்தியாவின் ராணுவ செலவு, பாகிஸ்தானை விட சுமார் 9 மடங்கு அதிகம்.
சீனாவின் ராணுவ செலவு 7 சதவீதம் அதிகரித்து, 31 ஆயிரத்து 410 கோடி டாலராக இருந்தது. 30 ஆண்டுகளாக அதன் ராணுவ செலவு அதிகரித்து வருகிறது. ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும், அணு ஆயுத விரிவாக்கத்துக்கும் செலவழித்து வருகிறது.
ஐரோப்பா கண்டத்தில் ராணுவ செலவு 17 சதவீதம் அதிகரித்து, 69 ஆயிரத்து 300 கோடி டாலராக இருந்தது. ரஷியா-உக்ரைன் போர் காரணமாக, ஐரோப்பாவின் ராணுவ செலவினம் உயர்ந்துள்ளது.
ரஷியாவின் ராணுவ செலவு 14 ஆயிரத்து 900 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய ஆண்டை விட 38 சதவீதம் அதிகம். உக்ரைன் ராணுவ செலவு 2.9 சதவீதம் அதிகரித்து, 6 ஆயிரத்து 470 கோடி டாலராக இருந்தது. இது, ரஷியாவின் செலவில் 43 சதவீதத்துக்கு சமமானது.
உக்ரைன் தனது வரிவருவாய் அனைத்தையும் ராணுவத்துக்கு செலவிட்டு வருகிறது.
ஜெர்மனியின் ராணுவ செலவு 28 சதவீதம் அதிகரித்து, 8 ஆயிரத்து 850 கோடி டாலராக இருந்தது. போலந்து நாட்டின் ராணுவ செலவு 31 சதவீதம் உயர்ந்து, 3 ஆயிரத்து 800 கோடி டாலராக இருந்தது.
- அட்டாரி-வாகா எல்லைக் கடவையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன.
- 850 இந்தியர்கள் பஞ்சாபில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்தது.
அதில் பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த உத்தரவின் கீழ், நேற்று ஞாயிற்றுக்கிழமை, 12 பிரிவுகளின் கீழ் குறுகிய கால விசாக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற கடைசி நாளாக இருந்தது, மேலும் அட்டாரி-வாகா எல்லைக் கடவையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன.
கடந்த வாரம் மத்திய அரசு விசா ரத்து செய்ததாக அறிவித்த பிறகு, ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் எல்லையில் இருந்து இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த 4 நாட்களில், 14 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 850 இந்தியர்கள் பஞ்சாபில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை, 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
இதனிடையே போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.
- பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்விகளுக்காக இந்தியா பாகிஸ்தான் மீது பழிபோடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
மேலும் பஹல்காம் விவகாரத்தில் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.

தொலைபேசி வாயிலாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்புமே பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
பதட்டங்களை தணிக்க இரு தரப்பும் பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும். பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இந்த மோதல் இந்தியாவிற்கோ அல்லது பாகிஸ்தானிற்கோ அடிப்படை நலன்களுக்கு உகந்ததல்ல, தெற்காசியாவின் ஸ்திரத்தன்மைக்கும் நன்மை பயக்கக் கூடியது அல்ல.
இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து நிலைமையை அமைதிப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வாங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
- பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல யூடியூப் சேனல்களை இந்திய அரசு இப்போது தடை செய்துள்ளது.
இதனுடன் பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சேனல்கள் மீதான தடை குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக எரிச்சலூட்டும், வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 16 யூடியூப் சேனல்களில் (முன்னலா கிரிக்கெட் வீரர்) சோயிப் அக்தரின் சேனல் மற்றும் அங்குள்ள பல முக்கிய ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார் டிவி, தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ஜியோ நியூஸ், சாமா ஸ்போர்ட்ஸ் மற்றும் உசைர் கிரிக்கெட் ஆகியவை முடக்கப்பட்டன என்று தெரிவித்தார்
முடக்கப்பட்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளிலும் இரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டனர்.
- கடந்த 3 நாட்களை விட நேற்று அவர்களது துப்பாக்கி சூடு சற்று அதிகமாக இருந்தது.
பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
இதற்கிடையே சர்வதேச எல்லைக்கோடு கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆங்காங்கே துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளிலும் இரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டனர்.
பயம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அவர்கள் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லையில் இந்திய நிலைகள் மீது குறி வைத்து துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
நேற்று இரவு 4-வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கடந்த 3 நாட்களை விட நேற்று அவர்களது துப்பாக்கி சூடு சற்று அதிகமாக இருந்தது.
குறிப்பாக பூஞ்ச், குப்பு வாரா மாவட்டங்களில் பாகிஸ்தான் வீரர்களின் அத்துமீறல் நேற்று இரவு அதிகமாக இருந்தது. இன்று அதிகாலை வரை அந்த அத்துமீறல் நீடித்தது.
இந்தியா தரப்பில் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய தரப்பில் எந்த சேதமும் இல்லை என்று பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.
- சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.
- பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி.
மகாராஷ்டிரா மாநிலம் பிரபானியில் வக்பு திருத்தம் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவரும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது :-
பாகிஸ்தான் தலைவர்களின் அச்சுறுத்தல்களால் எதுவும் செய்து விட முடியாது. "நீங்கள் அரை மணி நேரம் பின்தங்கியிருக்கவில்லை, இந்தியாவை விட அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கிறீர்கள். பாகிஸ்தான் நாட்டின் மொத்த பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டுக்கு கூட சமமாக இல்லை.
"பாகிஸ்தான் தங்களிடம் அணுகுண்டுகள் இருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்கிறது. வேறொரு நாட்டிற்குள் சென்று அப்பாவி மக்களைக் கொன்றால், எந்த நாடும் அமைதியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொல்வதற்கு முன்பு பயங்கரவாதிகள் அவர்களின் மதத்தைக் கேட்டிருக்கிறார்கள் "நீங்கள் எந்த மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவர்கள். இந்தச் செயல் நீங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் வாரிசுகள் என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவை குறிவைத்து பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது. மேலும், சர்வதேச சட்டம் இந்தியா பாகிஸ்தானின் விமானப்படையை முற்றுகையிட அனுமதிக்கிறது.
பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் போலவே காஷ்மீரிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்தவர்கள். "சிலர் காஷ்மீரிகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்கள் வெட்கமற்றவர்கள்.
பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது தனது உயிரைத் தியாகம் செய்தது ஒரு காஷ்மீரி. காயமடைந்த குழந்தையை முதுகில் சுமந்து 40 நிமிடங்கள் நடந்து சென்று உயிரைக் காப்பாற்றியவவர் ஒரு காஷ்மீரி.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்போது காஷ்மீரியும் இந்தியாவின் ஒரு பகுதிதான்.
வக்பு திருத்தம் சட்டம் குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்த போராட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.
- நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
- இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும்
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாரக இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் அந்நாடு போருக்கு தயாராக வேண்டும். நம்மிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
நாடு முழுவதும் நமது அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் உங்களை (இந்தியாவை) குறிவைக்கின்றன" என்று தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் தனது வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியாவில் விமானப் போக்குவரத்து அமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும், இந்த தடை இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்றும் அப்பாசி கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தனது பாதுகாப்புத் தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக பாகிஸ்தானைக் குறை கூறுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
- "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என வெளியிட்டு வருகின்றன.
- சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது உளவுத்துறையின் தோல்வி.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய கர்நாடக முதல்வர சித்தராமையா, "நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும், மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த கருத்தை "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என ஜியோ நியூஸ் உள்ளிட்ட பிரபல பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இது குறித்து கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் ஊடகங்கள் சித்தராமையாவை புகழ்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக நேருவை பாராட்டி ராவல்பிண்டியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதே போல் தற்போது சித்தராமையாவை பாராட்டி பாகிஸ்தானில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்வார்களா?" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது கருத்து குறித்து விளக்கமளித்த சித்தராமையா, "பாகிஸ்தானுடன் போருக்கு செல்லக்கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
போர் எதற்கும் தீர்வாகாது என்றுதான் சொன்னேன். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது உளவுத்துறையின் தோல்வி. இந்திய அரசு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. போரை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், நாம் நிச்சயமாக போருக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் செக்டார்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் 3-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இது குறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 26, 27-ந்தேதி நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் செக்டார்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் கொடுத்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்பொழுது சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
- பஹல்காம் தாக்குதலை குறித்து விஜய் ஆண்டனி அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் தற்பொழுது சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய பஹல்காம் தாக்குதலை குறித்து விஜய் ஆண்டனி அவரது கருத்தை பதிவிட்டு ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.
வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்." என தெரிவித்துள்ளார்.
- நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் பற்றி பேச விரும்பவில்லை.
- ராகுல் சின்ன பையன், அவருக்கு ஒன்றும் தெரியாது.
மதுரை:
மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இங்கு விலையில்லா ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல் எடை, ரத்த பரிசோதனை செய்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் அனைவரும் உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். விரைவில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டமிட்டு உள்ளேன். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானை ஏனைய உலக நாடுகள் தனிமைப்படுத்தி எந்த தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றைக்கு மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான் தான், அதனை தூண்டி விடுவது சீனா.
செல்போனில் நல்ல கருத்துகளை பார்க்கவேண்டும். ஆனால் சினிமா மோகத்தால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர். நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் பற்றி பேச விரும்பவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். அதில் பாகிஸ்தான் இருக்குமா? என்று தெரியவில்லை. ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை சரியான பதிலடி கொடுப்பார்கள். நல்லவராக இருப்பதைவிட வல்லவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்பர் ஒன் ஆக பிரதமராக மோடி உள்ளார்.
பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் தூங்குகின்ற புலியை இடறிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு தான் ஆதரவாக நிற்கிறது. பயங்கரவாதிகளை வளர்ப்பது பாகிஸ்தானில் தான், அவர்களை தூண்டி விடுவது சீனா தான்.
தீவிரவாதத்திற்கு எதிராக சிந்து நதிநீரை நிறுத்துவது சரியானதுதான். யார் கூறினாலும் சரி, அவர்களுக்கு தண்ணீரை வழங்க கூடாது. மனிதாபிமானத்தின் படி தண்ணீர் தருவது சரிதான். ஆனால் அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை. அவர்கள் இந்தியர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரர் வீர சாவாகர் குறித்து தவறாக பேசக்கூடாது. ராகுல் சின்ன பையன், அவருக்கு ஒன்றும் தெரியாது. ஈழத் தமிழர்களை அவர்களது தந்தை ஆட்சியில் தான் கொலை செய்தார்கள். வாஜ்பாய் ஆட்சியின்போது கொடுத்த பதிலடியை போன்று இந்தமுறையும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.