என் மலர்
நீங்கள் தேடியது "Talibans"
- 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
- 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள் என ஆப்கானிஸ்தான் கூறியது.
இதற்கு பதிலடியாக நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையான டுராண்ட் கோட்டில் நடந்த எதிர் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
நான்கு மணி நேர நடவடிக்கையில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ தளங்களும் 19 இராணுவ சாவடிகளும் அழிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியது.
மேலும் பல ராணுவ முகாம்களை கைப்பற்றி, அதில் பாகிஸ்தான் வீரர்களை சிறை பிடித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. ஆனால் முகாம்கள் கைப்பற்றப்பட்டதை பாகிஸ்தான் மறுத்தது.
இதற்கிடையே தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதிகாலை 1:50 மணிக்கு காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாவது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 133 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், 27 தாலிபான் ராணுவ நிலைகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்தாத தாலிபான் அரசு, பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களே என தெரிவிதுள்ளது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவம் எந்த தாக்குதலையும் முறியடிக்கும் திறன் கொண்டது. ஆப்கானிஸ்தானின் தாக்குதலே எங்களை பதில் தாக்குதல் நடத்த தூண்டியது" என்று தெரிவித்தார்.
தாலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டதாகவும், இப்போது நேரடிப் போர் நடத்துவோம் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார்.
- அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- 2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்தனர். அவர்கள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
குறிப்பாக பெண்கள் கல்வி கற்க தடை விதித்தனர். மேலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
நேற்று தலிபான்கள், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய 2-வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறியதாவது:-
"ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை. அவர்களை தேசம் பாராட்டுவதில்லை" என்றார்.
அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- தலிபான்களின் நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்தது.
- பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள் உயர்கல்வி பயில தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.
இதற்கிடையே சமீப காலமாக சர்வதேச உறவை மேம்படுத்த தலிபான்கள் முடிவுசெய்துள்ளனர். எனவே நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டு தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளனர்.
ஏற்கனவே, பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.
- ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்.
- பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
காபூல்:
20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.
பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.
ஆனாலும் பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் அங்கு 37 சினிமா படங்களும், சில ஆவணப்படங்களும் திரையிட தயாராக உள்ளன.
ஆனால் இந்த அனைத்து படங்களிலும் நடிகையாக அதிபா முகமது என்ற பெண் மட்டுமே நடித்துள்ளார்.






