என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jammu and Kashmir"
- பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
- கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்
இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).
ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.
"பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.
இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு காஷ்மீரில் இருந்து மதுரைக்கு நாளை முன்பதிவற்ற ெரயில் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
ஜம்மு காஷ்மீர்-மதுரை இடையே முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. இது நகர்லாகூனில் இருந்து நாளை (7-ந்தேதி) இரவு 11.50 மணிக்கு புறப்படுகிறது. அந்த ெரயில் 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு காட்பாடி வருகிறது. அதன் பிறகு காலை 7.52 மணிக்கும் சேலத்துக்கும், 8.50 மணிக்கு ஈரோட்டுக்கும், 9.43 மணிக்கு திருப்பூருக்கும், 10.42 மணிக்கு கோவைக்கும், மாலை 2.10 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், 4 மணிக்கு மதுரைக்கும் வருகிறது.
இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.
மேலும் அந்த பகுதியில் வேறு பயங்கரவாதிகள் யாரும் இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- ஒரு பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன்.
- பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏகே74 , ஏகே 56 ரக துப்பாக்கிகள் பறிமுதல்
ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக
காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. தெரிவித்தார். முக்தியார் பட் என்ற அந்த பயங்கரவாதி, சிஆர்பிஎஸ் மற்றும் ஆர்.பி.எப் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என அவர் கூறினார். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே74 ரகம் , ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைதுப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
- மூன்று பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
- பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை.
ஸ்ரீநகர்:
ஜம்முகாஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர் அப்போது டிராச் பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் என்கவுன்டன் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களில் இருவர் ஹனன் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு காஷ்மீர் மூலு பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பு காவல் அதிகாரி ஜாவேத்தார் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவங்களில் இந்த தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜய் குமார் குறிப்பிட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.
- இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் குலாம் நபிக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-ஷ்மீரைச் சேர்ந்த பாஜக முக்கியக் குழு உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், தேவேந்திர சிங் ராணா, ஜம்முகாஷ்மீர் பாஜக மேலிட பொறுப்பாளர் தருண் சுக் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்ததும் அந்த யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
- இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
- இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,
ஸ்ரீநகர்:
கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.
இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.
இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
- காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பாஜக கண்டனம்.
- காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு.
சோட்டி போரா:
ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிபோரா பகுதியில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
உயிரிழந்தவர் சுனில் குமார் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது சகோதரர் பிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, இந்துக்களை குறி வைத்து நடத்தப்பட்ட கோழைத்தன தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் இரத்தக் களரி சூழலை பாகிஸ்தான் விரும்புகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் விஜய்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரை நியமித்து பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள், இது பிரதமர் மோடியின் தோல்விக்கு மற்றொரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
- எல்லைப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை
- ட்ரோன் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு.
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சில்லியாரி கிராமம் அருகே பறக்கும் சாதனம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அது ட்ரோன் ஆக இருக்கலாம் என்று எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். எனினும் அந்த ஆளில்லா விமானத்தை யாரும் பார்த்தார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு எல்லைப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றதாகவும் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் ஏதுவும் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் இந்த பணிக்கு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாட்டில் இருந்து ஏவப்படும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். சமீபகாலமாக பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய எல்லையில் பறந்து போதை பொருள், வெடிபொருள் உள்ளிட்டவற்றை வீசி வருகின்றன. இதற்கு எல்லை பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரின் சர்வதேச எல்லையில் அதிகாலை 4.15 மணியளவில் டிரோன் பறந்தது.
இந்த டிரோன் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரரகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த டிரோன் அங்கிருந்து மாயமானது.
டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆயுதம் அல்லது ஏதாவது வெடிபொருளை விட்டு சென்றார்களா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.