என் மலர்
நீங்கள் தேடியது "Indus Water Treaty"
- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் சிஸ்டத்தை இந்தியா சஸ்பெண்ட் செய்தது.
- இந்தியாவுக்கான நீரை வேறு வழிகளில் பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனடிப்படையில் சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு பகிரப்பட்டு வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த நிலையில் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சிந்து நதி நீர் அமைப்பில் (பல ஆறுகள் இணைந்தது) உள்ள ஆறுகளின் நீரை வடஇந்திய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கென ஒரு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் மூத்த அமைச்சர்களிடையே நடைபெற்றுள்ளது. பீஸ் நதியை சிந்து நதியுடன் இணைப்பது தொடர்பான முழு திட்ட அறிக்கை (detailed project report) தயாரிக்கப்பட இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியன் நதியை 14 கி.மீ. சுரங்கம் மூலம் சிந்து நதியுடன் இணைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரிக்க எல்&டி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அடுத்த வருடத்திற்குள் தயாராகும் எனக் கூறப்படுகிறது.
சிந்து நதி நீரை 113 கி.மீ. கால்வாய் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தண்ணீரம், ரத்தமும் ஒன்றாக பயணிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டாக தெரிவித்தது. அதில் இருந்த சிந்து நதி நீரில் இந்தியாவுக்கான பகிர்வை எப்படி பயன்படுத்தலாம் என மத்திய அரசு தொடர்ந்த யோசனை செய்து வந்தது.
இந்த திட்டத்தில் 14 கி.மீ. தூரம் சுரங்கம் அமைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சுரங்கம் அமைக்க மலைப்பாறைகள் குறித்த முழு ஆய்வு அவசியம். பாறைகள் பலவீனமாக இருந்தால், சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. DPR அறிக்கை பெற்ற பிறகு கட்டுமான பணி தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்த சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள உஜ் பல்நோக்கு திட்டத்துடன் இணைக்கப்படும், இது ராவியின் துணை நதியான உஜ் நதியிலிருந்து பீஸ் படுகைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டமாகும்.
- இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது தனது மிகப்பெரிய நீர்மின் திட்டமான 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை கட்ட இந்தியா தயாராகி வருகிறது.
இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 1980களிலேயே தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள், நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உடன் மோதல் நிலவுவதால் இதை பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய நீர்மின் கழகம் (NHPC) இந்த திட்டத்திற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 ஆகும். இந்த திட்டம் NHPC மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.
இந்த திட்டம் 847 ஹெக்டேர் வன நிலத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழு, திட்ட கட்டுமானத்திற்காக சுமார் 3000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
- இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நதியை சீனா தடுக்க ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் தெரிவித்தார்.
இதற்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
காலாவதியான சிந்து நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு பிரம்மபுத்திராவின் தண்ணீரை சீனா நிறுத்தினால் என்ன செய்வது என்று அச்சுறுத்தி உள்ளது. பிரம்மபுத்திராவின் மொத்த ஓட்டத்தில் சீனா 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரம்மபுத்திரா நதி இந்தியா மேல் நீரோட்டத்தை சார்ந்துள்ளது. இது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு. இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பலப்படுத்தப்படுகிறது. சீனா நீர் ஓட்டத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை. ஒருவேளை நீர் ஓட்டத்தை சீனா குறைத்தாலும் உண்மையில் இந்தியாவுக்கு அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைத் தணிக்க உதவக்கூடும்" என்று கூறினார்.
- நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனருமான ஹபீஸ் சயீதும் கடந்த காலங்களில் இதே பாணியில் மிரட்டல்களை விடுத்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இந்தியாவை எச்சரித்துள்ளார்.
பஹலகாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாவதும் பாகிஸ்தான் மீது இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்தது.
அதன்படி பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை ஆறுகள் மூலம் செல்லும் நதிநீர் நிறுத்தப்படுவதால் அந்நாட்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.
எனவே நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதியில் தண்ணீர் ஓட வில்லை என்றால் ரத்தம் ஓடும் என அந்நாட்டு அரசியல் தலைவர் பிலாவல் பூட்டோ எச்சரிக்கை வைரலானது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அகமது ஷெரீப் சவுத்ரி, இந்தியாவைக் குறிப்பிட்டு, "நீங்கள் எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்" என்று பேசியிருக்கிறார்.
2008 மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனருமான ஹபீஸ் சயீதும் கடந்த காலங்களில் இதே பாணியில் மிரட்டல்களை விடுத்துள்ளார். அதே பாணியில் லெப்டினன்ட் ஜெனரல் பேசிய இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
- பஹல்காம் பயங்கரவா தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என இந்தியா திட்டவட்டம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை இந்தியாவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்தது. பாகிஸ்தான் உடனான அனைத்து வகையிலான இருதரப்பு உறவுகளையும் இந்தியா ரத்து செய்தது.
குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. தண்ணீரும், ரத்தமும் இணைந்து பாய முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் பாகிஸ்தானின் சிந்து உள்ளிட்ட பிராந்தியங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை திரும்பப்பெற வேண்டும் என பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், இந்த நிலையில் "தண்ணீரும் இரத்தமும்" ஒன்றாகப் பாய முடியாது என்பதால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடும் வரை பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம், நிறுத்தப்படும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
அத்துடன் பாகிஸ்தானுடன் எந்தவொரு இருதரப்பு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அது பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் பகுதியை குறித்தது மட்டுமாகவே இருக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உதவுவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவது குறித்த கேள்விக்கு "இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இருதரப்பு ரீதியாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் நன்கு அறிவீர்கள். பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்லாது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.
இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை யில் சிந்து நதி நீரை இந்தியா எந்தெந்த வகைகளில் பயன்படுத்துவது என்பதற் கான முடிவை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சிந்து நதியில் கூடுதல் நீர் சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நீர், மின் திட்ட பணிகளை நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகளாக விரைவு படுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல் படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனால் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய நதிகளின் நீரை இந்தியா போதுமான அளவு பயன்படுத்த முடியும்.
ஆறுகள் மற்றும் அணைகளில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளால் இந்திய பகுதிகளில் நீரோட்டம் அதிகரிக்கும். அந்த நீரை இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி திருப்பி விட நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரோட்டம் குறையும்.
ஏற்கனவே பாகிஸ்தானில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 35 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது எடுத்துள்ள முடிவால் பாகிஸ்தான் மேலும் பாதிக்கப்படும்.
ஏற்கனவே மேற்கு ஆறுகளில் இருந்து பயன் படுத்தக்கூடிய மின் மெகாவாட் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. கிஷன்கங்கா மற்றும் ரேட்லே நீர்மின் திட்ட பணிகளை விரைவாக செல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிந்து மற்றும் துணை நதிகளின் உபரி நீரோட்டத்தை ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானுக்கு திருப்பி விடவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு முற்றிலும் நியாயமானது மற்றும் தேசிய நலனுக்கானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். .
- தண்ணீரைத் தடுக்கும் எந்தவொரு செயலும் போர் நடவ்டிக்கையாகும் என்றும் பாகிஸ்தான் கூறியது.
- ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதனபடி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை நேற்று இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறையில் செயல்படுத்த, இந்தியா தடைகளையும் அணைகளையும் கட்ட வேண்டியிருக்கும். இதனால் பெரும் செலவும், தாமதமும் ஏற்படும்.
ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் நோக்கத்துடன், இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
முன்னதாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததை பாகிஸ்தான் நிராகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரைத் தடுக்கும் எந்தவொரு செயலும் போர் நடவடிக்கையாகும் என்றும் பாகிஸ்தான் கூறியது.
பாகிஸ்தானில் நடந்த உயர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகா எல்லையை மூடுதல், பாகிஸ்தான் வான்வெளியை மூடுதல், இந்தியாவுக்குச் சொந்தமான விமான நிறுவனங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடை செய்தல் மற்றும் இந்திய குடிமக்களுக்கான விசாக்களை முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவுசெய்யப்பட்டது.
- பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இன்று இந்தியா நிறுத்தியது.
- சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் எதிரோலியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை ஆகும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைதொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தற்போது இந்தியா நிறுத்தியது.
- சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
- மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும்.
இது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அயூப் கான் ஆகியோரால் பாகிஸ்தானின் கராச்சியில் உருவாக்கப்பட்டது. உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கெயெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை தாண்டி பல நதிகள் ஓடுகிறது என்பதால், அவற்றின் நீரைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வழிமுறை இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் வகுத்தது எனலாம். மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
கிழக்கு நதிகள் மூன்று, மேற்கு நதிகள் மூன்றாகும். அதில் கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகியவற்றின அனைத்தை நீரையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்தியாவின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்று போர்கள், கார்கில் மோதல், மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் இருந்தாலும், இது ஒரு வெற்றிகரமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்த நடவடிக்கை மூலம் சிந்து நதியின் நீர் பாகிஸ்தானுக்கு பாய்வதை இந்தியா நிறுத்தும். சிந்து நதி பாகிஸ்தானின் பல மாகாணங்கள் வழியாக அரபிக்கடல் வரை பாய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய தாக்கம் பாகிஸ்தானின் விவசாயத்தில் இருக்கும்.
210 மில்லியனுக்கும் அதிகமான பாகிஸ்தான் மக்களின் தண்ணீர் தேவைகளும் இந்த சிந்து நதி நீர் அமைப்பைச் சார்ந்துள்ளது. அது நிறுத்தப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது.






