என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மின் நிலையம்"

    • ஜம்மு காஷ்மீரின் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதி நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றது.
    • இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானுடனான 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

    1960 ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரின் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதி நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றது. ஆனால், தற்போது இந்த நதிகளின் நீரை இந்தியா தனது தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

    ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. செனாப் போன்ற மேற்கு நதிகளில் இந்தியாவுக்குக் குறைந்த அளவிலான பயன்பாட்டு உரிமையே இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா அந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளது.

    இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் நிலையம் கட்டும் திட்ட பணிகளை இந்தியா துரிதப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NHPC, இந்தத் திட்டத்திற்காக ₹5,129 கோடி மதிப்பிலான டெண்டரை வெளியிட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் பணிகளை முடிக்க சுமார் 9 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏல விண்ணப்பங்கள் மார்ச் 12 முதல் மார்ச் 20 வரை பெறப்படும். 

    • இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தியது.

    சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது.

    பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது தனது மிகப்பெரிய நீர்மின் திட்டமான 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை கட்ட இந்தியா தயாராகி வருகிறது.

    இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் 1980களிலேயே தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள், நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

    செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உடன் மோதல் நிலவுவதால் இதை பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    தேசிய நீர்மின் கழகம் (NHPC) இந்த திட்டத்திற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 ஆகும். இந்த திட்டம் NHPC மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.

    இந்த திட்டம் 847 ஹெக்டேர் வன நிலத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழு, திட்ட கட்டுமானத்திற்காக சுமார் 3000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டீஸ்டா ஸ்டேஜ் 5 அணை மின் நிலையம் 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுடையது.
    • நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர் மின் நிலையம் பயங்கர நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது .

    510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.

    அதனால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

    கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இந்த டீஸ்டா அணையின் சிலபகுதிகள் அடித்து செல்லப்பட்டதால், அணை செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×