என் மலர்

  நீங்கள் தேடியது "sikkim"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிக்கிம் மாநிலத்தில் உள்ள ரிட் சூ பாலத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றபோது உள்ளூரைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவரும், சுற்றுலா பயணி ஒருவரும் கால் இடறி அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

  இந்நிலையில், இந்திய திபெத்திய எல்லைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி தலைவர்கள் இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
  காங்டாக்:

  சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநில கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சி, ஆட்சியை பிடித்துள்ளது. 32 தொகுகிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா 17  தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

  இந்நிலையில், பெரும்பான்மை பெற்றுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பி.எஸ். கோலே தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற குழுவினர், இன்று கவர்னனனர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். எனினும், முதலமைச்சர் யார்? என்பதை அக்கட்சி வெளியிடவில்லை. விரைவில் அறிவிக்க உள்ளதாக கோலே தெரிவித்தார்.  முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கோலேவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், அவர் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

  ஊழல் வழக்கில் கோலே சிறைத்தண்டனை பெற்றதாலும், 2017ல் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாலும் அவரை முதலமைச்சராக பதவியேற்க அழைக்கலாமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்பு விழா 28-ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
  புதுடெல்லி:

  சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சாவுக்கும் கடும் போட்டி நிலவியது. இரு மாநில கட்சிகளும் தனித்து களம் இறங்கின. காங்கிரஸ், பா.ஜனதாவும் களத்தில் நின்றன.

  இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த போது ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 5 தொகுதிகள் முன்னிலை அறிவித்தபோது அதில் அனைத்திலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் கையே ஓங்கி இருந்தது.

  1994-ம் ஆண்டு முதல் பவன்குமார் சாம்லிங் முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்றார்.

  அருணாசல பிரதேச மாநில சட்டசபையில் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- அமைச்சராக பெமா கண்டு உள்ளார்.

  அருணாசல பிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, காங்கிரஸ் மல்லுகட்டின. அருணாசலபிரதேச மக்கள் கட்சியும் போட்டியிட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது பா.ஜனதா பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் பா.ஜனதா மீண்டும் அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
  புதுடெல்லி:

  ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு(2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் தேர்தல் நடைபெறுகிறது.

  இதனால் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்தும்போது இந்த 4 மாநிலகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் அண்மையில் கலைக்கப்பட்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கும் வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதுபற்றி தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-  ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநிலங்களில் இதற்கு முந்தைய முன்மாதிரிகளைக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். அதேநேரம் காஷ்மீரில் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். இதற்கான அதிக பட்ச கால அவகாசம் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள்ளாகவே அங்கும் தேர்தலை நடத்தவேண்டிய நிலையும் உள்ளது. காஷ்மீரில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தும் போதே சட்டசபைக்கும் தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு படையினரின் தேர்தல் பாதுகாப்பு பணி எளிதாக முடிந்துவிடும் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இன்னொரு அதிகாரி கூறுகையில், “மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜனதா அரசுதான் உள்ளது. அவர்கள் 6 மாதத்துக்குள் சட்டசபையை கலைக்க முன்வந்தால் அந்த 2 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார். #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிக்கிம் மாநிலத்தின் நல்லெண்ண தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை நியமித்து அம்மாநில கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #ARRehman
  காங்டோக் :

  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சிக்கிம் மாநில நல்லெண்ண தூதராக நியமனம் செய்துள்ளதாக அம்மாநில கவர்னர் ஸ்ரீனிவாஸ் பாட்டில் அறிவித்துள்ளார்.

  இந்தியாவின் முதல் முழுமையன இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம், அதன் சமூக பொருளாதார வளர்ச்சிகளில் நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனைகளையும், மேம்பாட்டு திட்டங்களையும் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுளார். இதற்கு ஊதியமாக பணம் ஏதும் அவர் பெறவில்லை என அம்மாநில கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், கடந்த 18-ம் தேதி முதல் சிக்கிம்மில் தங்கியபடி அம்மாநிலத்தின் இயற்கை அழகினை பிரதிபலிக்கும் வகையில் ஆவணப்படம் ஒன்றையும் ரஹ்மான் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.  #ARRehman
  ×