search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.
    • செலக்ஷன் கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பினார்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ்காரர் ஒருவர் தனது சக ஊழியரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வடக்கு காஷ்மீரின் சோபோரில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள துணைப் பயிற்சி மைய (எஸ்டிசி) தல்வாராவுக்கு இரண்டு காவலர்கள், மற்றொரு சக ஊழியருடன் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    காலை 6:30 மணியளவில் உதம்பூரின் ரெஹெம்பல் பகுதியில் உள்ள காளி மாதா கோவிலுக்கு அருகே போலீஸ் வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.

     

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வாக்குவாதத்தில் டிரைவரை தலைமை கான்ஸ்டபிள் தனது ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் என்று தெரிவித்தனர்.

    வாகனத்தில் பயணித்த மற்றொரு நபரான தேர்வு செலக்ஷன் கிரேடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பியதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

     

    • குவாத் கிராமத்தை சேர்ந்த 5 பேர் விசாரணைக்காக ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • காவல்துறையும் விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஆப்ரேஷனின் போது பொதுமக்களை ராணுவத்தினர் அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் [Kishtwar] மாவட்டத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    குவாத் கிராமத்தை சேர்ந்த 5 பேரை விசாரணைக்கு ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்ற ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள் முகல் மைதான் என்ற பகுதியில் வைத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தியது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது.

     

    இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கிஷ்த்வார் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல்துறையும் விசாரணை நடத்தி வருவதாக கிஷ்த்வார் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளார்.

    • பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உதவினர்.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இது தொடர்பாக ஜம்முவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, உதம்பூர், ரம்பவின் கிஷ்த்வார் ஆகிய பகுதிகளில் உள்ள 9 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நடவடிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உதவினர்.

    • டெல்லியில் காற்று மாசுபாடுடன் பனிப்பொழிவும் சேர்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    • காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பனிப்பொழிவு ஏற்படும். அதேபோல் தற்போதும் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் காலை வேளையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிய வரவே சிரமப்படுகின்றனர்.

    இதனிடையே டெல்லியில் காற்று மாசுபாடுடன் பனிப்பொழிவும் சேர்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது-

    இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ், துலைல் மற்றும் கன்சல்வான் ஆகிய எல்லைப் பகுதிகள் உட்பட, பந்திபோராவின் மேல் பகுதிகள் பனிப்பொழிவால் வெள்ளைப் பனியால் மூடப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.





    • பந்திபோரா மாவட்டத்தின் நக்மர்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்.
    • பயங்கரவாதிகள் மறைந்து இருக்கும் இடத்தை நெருங்கும்போது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டததில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    பந்திபோரா மாவட்டத்தின் நக்மர்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருந்ததை வீரர்கள் கண்டறிந்தனர். அந்த இடத்தை நெருங்கும்போது பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

    இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாகிஸ்தானில் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களை வேட்டையாடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஸ்ரீநகர் புறநகரில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • தச்சிகம்-நிஷாத் பகுதிகளை இணைக்கும் காட்டுப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இதேபோல் ஸ்ரீநகர் புறநகரில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை தச்சிகம்-நிஷாத் பகுதிகளை இணைக்கும் காட்டுப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    • வெளிமாநில மக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்.
    • தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதும், கொல்வதும் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக இல்லாத வெளிமாநில மக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் சந்தையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை தாக்கி வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஓலிகுந்த்வாரா கிராமத்தை சேர்ந்த கிராம பாதுகாவலர்களான நசீர்அகமது, குல்தீப்குமார் ஆகியோர் அத்வாரியில் உள்ள முன்ஸ்லா தார் காட்டுப் பகுதியில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றனர்.

    அப்போது அவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்று, சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களையும் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் கொலை செய்யப்பட்ட கிராம காவலர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது.

    அவர்களது உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை. உடல்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகளை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்துக்கு ஜெய்-இ-முகமது அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இதற்கிடையே கிராம பாதுகாவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் மனோஜ்சின்ஹா, முதல்-மந்திரி உமர்அப்துல்லா மற்றும் காங்கிரஸ், பா.ஜனதாவினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கவர்னர் மனோஜ்சின்ஹா வெளியிட்டுள்ள பதிவில், கிராம பாதுகாவர்கள் மீதான கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் இல்லை. இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த துணிச்சலான மகன்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து பயங்கர வாதத்தையும் அழித்து இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பழிவாங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    இந்தநிலையில் வடக்கு காஷ்மீரில் சோபுரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஏ.கே.ரக துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

    • சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர தீர்மானம்.
    • பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்து முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மக்களவை எம்.பி.யான இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்து காண்பித்தார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளில் ஈடுபட எம்.எல்.ஏ.-வுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியது. இன்றும் 370 சட்டப்பிரிவு தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளில் ஈடுபட்டனர். அப்போது அவாமி கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை உருவானது.

    இதனால் சபாநாயகர் அப்துல் ரஹிம் ராதர், பாதுகாவலர்களை அழைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.-க்கள் வெளியே மறுப்பு தெரிவித்ததால் குண்டுகட்டாக தூக்கி அவையில் இருந்து அப்புறப்படுத்தினர். 

    • கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும்போது கடத்தல்.
    • கண்கள் தோண்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மாலை கிராம பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் காஷ்மீர் டைகர்ஸ் என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. கண்கள் தோண்டப்பட்ட நிலையில் இறந்தவர்களின் உடல் படங்களை பயங்கரவாத குரூப் வெளியிட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்டவர்கள் நசீர் அகமது, குல்தீப் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் ஒஹ்லி குந்த்வாரா கிராமத்தை சேர்ந்தவர்கள். உடல்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை. போலீசார் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருவரும் தங்களுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்கு காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லும்போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

    இருவர் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் செயல்கள் ஜம்மு-காஷ்மீரில் நீண்டகால அமைதியை அடைவதில் குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது என முதல்வர் உமல் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சந்தேகப்படும்படி யாராக நடமாடினால் அது தொடர்பாக தகவல் தெரிவிக்கும்படி கிராம மக்களுக்கு ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை காண்பித்த எம்.எல்.ஏ.
    • எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. சட்டமன்றம் கூடியதும் மக்களவை எம்.பி.யான இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை காண்பித்தார்.

    இதற்கு ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமர வற்புறுத்தினார். இருந்தாலும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்களை வெளியேற்ற பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.எ.-க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    • இதுவரை, 27,809 பேருக்கு டெங்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன.
    • 5,009 பேரில், 425 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜம்மு:

    காஷ்மீரில் சமீபகாலமாக டெங்கு பாதிப்பு தீவிரமாகி வருகிறது. குறிப்பாக ஜம்முவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஜம்முவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

    இதுபற்றி அவர்கள் கூறுகையில், "நோய் பாதிப்பு அதிகரிக்கலாம், ஆனால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இதுவரை, 27,809 பேருக்கு டெங்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. அதில் 5,009 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,009 பேரில், 425 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். டெங்கு பாதிப்புக்கு ஆளான நோயாளி ஒருவர் உயிரிழந்தார்" என்றனர்.

    • ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வென்று உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி ஏற்றார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

    இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்ட சபை தொகுதிகள் உள்ளன. லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவி ஏற்றார்

    மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து [சட்டப்பிரிவு 370] ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு- காஷ்மீர், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தேர்தல் இதுவாகும்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ×