என் மலர்
நீங்கள் தேடியது "Vice President"
- நேற்று வேடபட்டியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக முனியசாமி விளாத்திகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேம்பார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக முனியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 63). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தை கள் உள்ளனர். முனியசாமி பேரிலோவன்பட்டி பஞ்சாயத்து துணை தலை வராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வேடபட்டியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக முனியசாமி விளாத்திகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேம்பார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முனியசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அடை யாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் முனியசாமியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு நடைபெற்றது.
- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம்.
திருப்பூர் :
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
- துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி ஊராட்சி யில் துணை தலைவராக வருபவர் விஜயலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர் சிவராஜ்.
இவர் துணை தலைவரின் மின்னணு சாவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சாவியை துணை தலைவர் அவரிடம் பலமுறை கேட்டும் திரும்ப தர வில்லை.
இந்த நிலையில் ஊராட்சி 9-வது நிதி வங்கி கணக்கில் உள்ள தொகையினை துணை தலைவருக்கு தெரியப்படுத்தாமல் ஒப்பந்ததாரருக்கு பண பரிவத்தினை செய்துள்ளார்.
மேலும் துணை தலைவர் விஜயலட்சுமி மின்னணு சாவியை கேட்டார். ஆனால் துணை தலைவரை அலுவ லத்துக்குள் அனுமதிக்காமல் ஊராட்சி செயலாளர் சிவராஜ் அலுவலகத்தினை பூட்டி விட்டு சென்று விட்டதாகவும் கூறப்படு கிறது.
இதை கண்டித்து துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை பற்றி அறிந்ததும் சென்னிமலை பி.டி.ஓ. குணசேகரன் மற்றும் போலீசார் வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகம் சென்று போரட்டத்தில் ஈடுபட்ட துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதை தொடர்ந்து துணைத் தலைவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
- திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு தீவிரம் காட்டியது. இதுதொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- புத்தாண்டு விடியல், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
- குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும். இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முன் எப்போதும் காணாத வகையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது.
- உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும்.
நாட்டின் மிகச் சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு விருது உள்பட 78 தேசிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. டெல்லியில் மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் வி.பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதைப் பெற்றார். புதுச்சேரியைச் சேர்ந்த கே.வெங்கடேசன், டெரக்கோட்டா வேலைப்பாட்டுக்காகவும், மாசிலாமணி, ஷோலாபித் வேலைப்பாட்டுக்காகவும், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
விருது பெற்றவர்களில் 36 பேர் பெண்கள். சில்ப் குரு விருதுடன் தங்க நாணயம், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய தன்கர் கூறியுள்ளதாவது:

முன் எப்போதும் காணாத வகையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. உலக அளவில் முதலீடுகளுக்கு உகந்த இடமாக இந்தியா உள்ளது. கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் தொடர்புடைய கைவினைஞர்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
கலைஞர்களின் அரிய திறன்கள் இந்தியாவை பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கைவினைஞர்கள் நமது கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்கின்றனர். இந்தியா, அளவில்லாத திறன்களைக் கொண்டுள்ளது என்பதை உலகிற்கு அவர்கள் பறை சாற்றுகின்றனர்.
ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்பதன் மூலம், பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையை உலகம் கவனிப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த தசாப்தத்தின் முடிவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உலகம் முழுவதும் ஆன்மிக நற்சிந்தனையை பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர்.
- ஆன்மிகம் ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது.
அபுநகர்:
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு நகரில் பிரம்ம குமாரிகளின் இயக்கத்தின் 85-வது ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளதாவது:
பிரம்ம குமாரிக்ள் அமைப்பு மனித குலத்திற்கு மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது. உலகம் முழுவதும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்டிய அவர்களது பணி பாராட்டுக்குரியது. சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே தமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும்.
நாட்டில் இருந்து முறையற்ற தன்மையையும், நீதியற்ற நடத்தையையும் எதிர்மறை போக்கையும் களைவதற்கு சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்ப்பது அவசியம். ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது. உலகம் முழுவதும் தற்போது தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது கல்வியில் ஆன்மிகம் என்பது இன்றியமையாத பகுதி, இது ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொரோனா காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
- இந்தியாவை ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை.
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியாவை மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். நாட்டில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டாண்மை அவசியம்,
அனைவருக்கும் சுகாதார சேவை வழங்கும் கனவை நனவாக்க, சுகாதார சேவையில் பொதுத்துறையினரும்-தனியார்துறையினரும் இணைந்த பெரும் கூட்டு முயற்சி தேவை. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை.
இந்தியா தனது குடிமக்களுக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி செலுத்தியதுடன், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. 1990 முதல் குழந்தை இறப்பு விகிதம் தடுப்பு போன்ற சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்துள்ளது. இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் உள்ளது.
அனைவருக்கும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் ஏழைகள் மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான சுகாதார சேவை கிடைக்கும் இடைவெளி வெகுவாக குறைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியா முக்கிய பங்களிப்பு.
- ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதுகளை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வழங்கினார். இந்திய சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச அளவிலான மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியாவின் பங்களிப்பு தனிசிறப்பு வாய்ந்தது. நமது பழமையான சிகிச்சை முறையான ஆயுர்வேதம் மற்றும் யோகா, உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.
சுற்றுலாவுக்கான சொர்க்கமாக இந்தியா உள்ளது. சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா தளங்களை இந்திய சுற்றுலாப் பயணிகள் காணவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 29ந் தேதி சைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
- 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.
திருப்பூர் :
சைமா சங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 29ந்தேதிசைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் பாலச்சந்தர் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக தொழில் சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் மாற்றங்களும்ஏற்படும் சிக்கல்களையும் களைவதற்கு சங்கத்தில் முனைப்புடன் கூடிய செயலாற்றும்திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாகசங்கத்தில் பதவி வகித்து வரும் மூத்த உறுப்பினர்களில் பலர் தொழில் நிலையில் இருந்துவிலகி உள்ள காரணத்தினால் மாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வேண்டும் என்று எங்கள் அணி சார்பாக வேண்டுகோள்வைக்கப்பட்டது.
ஆயினும் சங்கத்தின் செயற்குழு கூடி வழக்கம்போல் ஏற்கனவே உள்ளஅனைவரும் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என தீர்மானித்தனர். எனவே நாங்கள்தேர்தலை எதிர்கொள்வதற்காக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் ஏறத்தாழ25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதாவது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவர்களது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை முன்வைத்தும் பலர் தொழிலை விட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருவது தொழிலுக்கு தேவையான நன்மைகளை நிர்வாகிகளால் கோரிப் பெற முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாற்றத்திற்கான அணியை உருவாக்கி தற்போது தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவராக நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.இவர் அவர் கூறினார்.