என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டமளிப்பு விழா"

    • கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
    • போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலையில் நடைபெற உள்ளது.

    விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார். ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

    பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார். 

    • கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
    • தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து ஆனபோதும் இருவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கின்றனர்.

    நடிகர் தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.

    பின்னர், நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

    இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தாலும், தங்களது மகன்களுக்கு என எப்போதும் ஒன்றாக உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாத்ராவின் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து ஆனபோதும் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். அதன் புகைப்படங்கள் வைரலானது.

    இந்நிலையில், மகன் யாத்ராவிவன் பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பங்கேற்றனர்.

    இதன் புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,"பெருமைக்குரிய பெற்றோர்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    • திருச்சியை அடுத்த சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும், பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்றும் சிறப்பு விருந்தினர் கேட்டுக்கொண்டார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் முனைவர். எஸ்.குப்புசாமி, கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். டி.சீனிவாசன் மற்றும் கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை இன்போசிஸ் லிமிடெட்டின் மேம்பாட்டு மையத்தின் இணை துணைத் தலைவர் மற்றும் தலைவர் சூர்யா பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

    இதில் முதல் 21 தரவரிசையாளர்களைத் தவிர, மொத்தம் 1,223 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், மாணவர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை கூறும் வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றார்.

    மேலும், அவர் தனது எழுச்சியூட்டும் கதையுடன், பொறியியல் துறையில் சமீபத்திய போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன்களை மேம்படுத்தும் பழக்கத்தை வளர்க்கவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சூர்யா தனது பட்டமளிப்பு உரையில், பட்டதாரிகள் தங்கள் தொழில் சூழலில் வெற்றிபெற உதவும் சில திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்களை வலியுறுத்தியதோடு, சரியான பாதையில் கவனம் செலுத்துவதன் மூலம், வாழ்வில் வெற்றியின் உச்சத்தை அடையலாம் எனவும், அதற்கு ஆரோக்கியமான சூழல் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

    வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும் கூறினார். பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    • திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் 2019-20 ம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற 588 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் டி.ஜி.பி., எம்.ரவி பட்டங்களை வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:-  மாணவா்கள் கவனத்தை சிதறவிடாமல் உணா்வுப்பூா்வமாகக் கல்வியைக் கற்றால் எளிதில் வெற்றி பெறலாம். பட்டம் பெற்றதுடன் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதிலும் பெற்றோரைக் கவனிப்பது தலையாய கடமையாகும். இளைஞா்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பழக்கமானது இளைஞா்களின் குறிக்கோள், சமூகம் மற்றும் குடும்பத்தை விட்டே விலக்கிவிடும். ஆகவே மாணவா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.  

    • விருதுநகர் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழா நிறுவனர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இயக்குநர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் பல்கலை ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் தங்கராஜ், 511 இளங்கலை, 11 முதுகலை மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். முதல்வர் சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார்.
    • இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன் கலந்து கொண்டு 367 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில்

    23-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசி, ஆண்டறிக்கை வாசித்தார்.

    367 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

    சென்னை இன்போசிஸ் நிறுவன டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட் அதிகாரி முகமது முனாவர் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 367 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    'கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு' என்ற அவ்வையாரின் கூற்றிற்கு இணங்க, பட்டம் என்பது கற்றலின் ஆரம்பமே ஆகும். தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு மாணவ-மாணவிகள் மென்மேலும் கற்றுக்கொள்ள வேண்டும். நமது நாடு அதிகளவில் பொறியாளர்களை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய அதிகார மையமாக திகழ்கிறது. எங்கும் தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் முன்எப்போதும் இல்லாத வகையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயம், அறிவியல், உற்பத்தி, தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் நமது நாடு முன்னேறியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் ரிமோட் சென்சிங் பயன்பாடுகள் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறது.

    விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்

    தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் மூலமாக தொலைக்காட்சி, தொலைநிலை கல்வி, தொலை மருத்துவம், வானிலையியல் அனை வருக்கும் எளிதில் சாத்தியமாகிறது.

    வானிலை முன்னறிவிப்புகள், வானிலை கண்காணிப்பு மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

    நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவர்கள் சிறந்த லட்சியங்களை எதிர்கால கனவு களாக கொண்டு அதனை அடைய விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்க வேண்டும். முறையான கல்வியுடன் நேர்மை தவறாமலும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். அனைவரிடமும் மரியாதையுடனும், நன்றியுணர்வுடனும் இருக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி டீன் நாகராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்
    • விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து போராசிரியர்களும், ஊழயர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள ராஜாஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கல்லூரியின் தாளாளருமான எஸ்.ஏ. ஜாய் ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் தருண் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி டீன் நாகராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து போராசிரியர்களும், ஊழயர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
    • ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும் என்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி வரவேற்றார். முதல்வர் சுந்தரராஜ் விழாவை தொடங்கி வைத்தார். டீன் மாரிச்சாமி வரவேற்றார்.

    பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சான்றி தழ்களையும் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமத்தில் இருந்து ஏழை, எளிய மாணவ, மாணவிகள், பயன்பெறும் வகையில் மூத்த தகப்பனாராக இருந்து தாளாளர் சோலைசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி கலை அறிவியல் துறையிலும் சிறந்து விளங்க முடியும். மனதிற்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகமாக மாறி வருவதால் மாணவ-மாணவிகள் அதை கவனத்தில் கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

    அரசு வேலை மட்டுமின்றி தொழில் முனைவோ ராகவும் மாணவர்கள் மாற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்.

    நகரம் மற்றும் கிராமத்தில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு வித்தியாசம் உள்ளது. நகரத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.

    அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதை தமிழக அரசின் சார்பில் பாராட்டுகிறேன். கல்லூரி படிப்புடன் நிறுத்தி விடாமல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் கடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் ஒருங்கி ணைப்பாளர்கள் சிவகுமார், பிரேம்குமார், ஜெயபாலன் மற்றும் பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கீழக்கரையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    உலகக் கல்வியுடன் திருக்குரானை மனப்பாடம் செய்து முடித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது. அதாயி கல்வி குழுமத்தின் சார்பில் சுப்ரீம் நிறுவனர் முஹம்மது நிசார் பாஜில் ஜமாலி, சென்னை மற்றும் கீழக்கரை அதாயி பெண்கள் ஹிப்ளு பள்ளி தலைவர் ஹபிபுல்லாகான், கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளி தலைவர் ஜஹுபர் கமால், கீழக்கரை சுன்னத்துல் ஜமாத் பவுண்டேஷன் ஒபூர் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர்-தொழிலதிபர் ஹபிபுல்லா கான் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இதில் குரானை மனப்பாடம் செய்த 25 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார். விழாவில் கீழக்கரை பல்வேறு ஜமாத், சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

    • பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரியில் 30-வது மற்றும் 31-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்த விழாக்களுக்கு அதியமான் கல்வி குழும ஆலோசகரும், முன்னாள் துணைவேந்தருமான முத்துச்செழியன் தலைமை தாங்கினார்.

    எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி வரவேற்று பேசுகையில், இங்கு படித்து பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்களைப் போன்று தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.

    30 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை க்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசும்போது அப்துல்கலாமின் கனவுகாணுங்கள் எனும் வாசகத்தை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

    மேலும், ஒவ்வொரு முறையும் சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் வெற்றியடையலாம் என்று அறிவுறுத்தினார்.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற 31-வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் துணைவேந்தரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பெண்ணியல் துறை இயக்குநருமான மணிமேகலை, மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவ மாணவியர், நாளை செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்துமுடிக்க வேண்டும்,

    ஒவ்வொரு மாணவனும் உயர்கல்வி கற்க வேண்டும். இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கல்வியில் உயர்நிலை அடையும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக வழமுடியும், வீட்டின் பொருளாதாரமும், நாட்டின் முன்னேற்றமும் உயர்வடையும் என பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

    விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த வீடியோ வேகமாக பரவி மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
    • சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    பெங்களூரு :

    இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடி இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது. லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர்.

    அப்போது பட்டம் பெற வந்த கர்நாடகத்தை சேர்ந்த அதிஷ் என்ற மாணவர் ஒருவர், கலந்துகொண்டு பட்டமளிப்பு பெற்றார். அப்போது அவர் மூத்த ஆசிரியர்களுடன் கைகுலுக்கிய பின்னர், அவர் கன்னட கொடியை தனது கைகளில் பிடித்து பறக்கவிட்டப்படி கம்பீரமாக சென்றார்.

    இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில், நான் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் கன்னட கொடியை கையில் பிடித்தபடி பட்டம் பெற்றேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, கன்னட மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த பதிவை 1,550 பேர் மறுபதிவு செய்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடியோவை "லைக்" செய்துள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    ×