என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graduation Ceremony"

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

    பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார். 

    • கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
    • தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து ஆனபோதும் இருவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கின்றனர்.

    நடிகர் தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.

    பின்னர், நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

    இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தாலும், தங்களது மகன்களுக்கு என எப்போதும் ஒன்றாக உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாத்ராவின் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து ஆனபோதும் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். அதன் புகைப்படங்கள் வைரலானது.

    இந்நிலையில், மகன் யாத்ராவிவன் பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பங்கேற்றனர்.

    இதன் புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,"பெருமைக்குரிய பெற்றோர்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    • திருச்சியை அடுத்த சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும், பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்றும் சிறப்பு விருந்தினர் கேட்டுக்கொண்டார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் முனைவர். எஸ்.குப்புசாமி, கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். டி.சீனிவாசன் மற்றும் கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை இன்போசிஸ் லிமிடெட்டின் மேம்பாட்டு மையத்தின் இணை துணைத் தலைவர் மற்றும் தலைவர் சூர்யா பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

    இதில் முதல் 21 தரவரிசையாளர்களைத் தவிர, மொத்தம் 1,223 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், மாணவர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை கூறும் வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றார்.

    மேலும், அவர் தனது எழுச்சியூட்டும் கதையுடன், பொறியியல் துறையில் சமீபத்திய போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன்களை மேம்படுத்தும் பழக்கத்தை வளர்க்கவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சூர்யா தனது பட்டமளிப்பு உரையில், பட்டதாரிகள் தங்கள் தொழில் சூழலில் வெற்றிபெற உதவும் சில திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்களை வலியுறுத்தியதோடு, சரியான பாதையில் கவனம் செலுத்துவதன் மூலம், வாழ்வில் வெற்றியின் உச்சத்தை அடையலாம் எனவும், அதற்கு ஆரோக்கியமான சூழல் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

    வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும் கூறினார். பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    • திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் 2019-20 ம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற 588 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் டி.ஜி.பி., எம்.ரவி பட்டங்களை வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:-  மாணவா்கள் கவனத்தை சிதறவிடாமல் உணா்வுப்பூா்வமாகக் கல்வியைக் கற்றால் எளிதில் வெற்றி பெறலாம். பட்டம் பெற்றதுடன் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதிலும் பெற்றோரைக் கவனிப்பது தலையாய கடமையாகும். இளைஞா்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பழக்கமானது இளைஞா்களின் குறிக்கோள், சமூகம் மற்றும் குடும்பத்தை விட்டே விலக்கிவிடும். ஆகவே மாணவா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.  

    • விருதுநகர் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழா நிறுவனர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இயக்குநர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் பல்கலை ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் தங்கராஜ், 511 இளங்கலை, 11 முதுகலை மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். முதல்வர் சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் பட்டமளிப்பு விழா நடை பெற்றது.
    • விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனையின் 52-வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

    இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, 52-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.

    முதல் பிரதியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். விழாவில் தொழில் அதிபர் எம்.கே.எம். முகம்மது நாகிப், எம்.கே.எம். முகம்மது நாசர், அகமது கபீர், நெல்லை லாட்ஜ் நிக்மத்துல்லா, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மருத்து வர்கள் முருகன், அழகேசன், கிரிஷ் தீபக், அகமது யூசுப், முகம்மது இப்ராஹீம், முகம்மது கனி, ஜியாவுல்லாஹ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனை மற்றும் ஷிபா கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

    • நிகழ்ச்சிக்கு மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார்.
    • முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கினார்

    கடையநல்லூர்:

    கடையநல்லூர், மெயின் பஜாரில் அமைந்துள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடத்தப்படும் ஜாமிஆ அன் நஜாஹ் அரபிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் பஷீர் அஹ்மத் உமரி தொகுத்து வழங்கினார். மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி செயலாளர் முஹம்மது காசிம் சின்சா, பேராசிரியர்கள் ஜபருல்லாஹ் பத்ரி, முஹிபுல்லாஹ், மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் முஹம்மது கோரி வரவேற்று பேசினார்.

    முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், அப்துல் மஜீத், கஸ்ஸாலி முஹம்மது கோரி, முஹம்மது யஹ்யா, ரபீக் அஹ்மத் மற்றும் உறுப்பினர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இந்த வீடியோ வேகமாக பரவி மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
    • சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    பெங்களூரு :

    இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடி இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது. லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர்.

    அப்போது பட்டம் பெற வந்த கர்நாடகத்தை சேர்ந்த அதிஷ் என்ற மாணவர் ஒருவர், கலந்துகொண்டு பட்டமளிப்பு பெற்றார். அப்போது அவர் மூத்த ஆசிரியர்களுடன் கைகுலுக்கிய பின்னர், அவர் கன்னட கொடியை தனது கைகளில் பிடித்து பறக்கவிட்டப்படி கம்பீரமாக சென்றார்.

    இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில், நான் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் கன்னட கொடியை கையில் பிடித்தபடி பட்டம் பெற்றேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, கன்னட மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த பதிவை 1,550 பேர் மறுபதிவு செய்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடியோவை "லைக்" செய்துள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    • கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகக்குழுத் தலைவர் பத்ஹீர் ரப்பானி தலைமை தாங்கினார். ஈரோடு முகம்மது ஹஸன் அலி, தென்காசி மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவர் வி.டி.எஸ்.ஆர் முகம்மது இஸ்மாயில், கயத்தாறு பி.எச். சுல்தான், கடையநல்லூர் தொழில் அதிபர்கள் ஏ.ஐ.கே.அமானுல்லா, கே.நயினா முகம்மது, கே.ஏ.ஜாபர் சாதிக், எஸ்.மக்தும், இப்ராஹிம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கல்லூரியின் முதல்வரும், தென்காசி மாவட்ட அரசு ஹாஜியுமான முஹ்யித்தீன் ஹஜரத் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபுபக்கர், கீழக்கரை சீனாதானா செய்யிது அப்துல் காதிர், சென்னை குரோம்பேட்டை காயிதேமில்லத் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் என்.முகம்மது காசிம், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சென்னை எஸ்.முகம்மது ரபீக் பேராசிரியர் ப.அ.முகம்மது இக்பால், தென்காசி ஹாஜி முஸ்தபா குருப்ஸ் எஸ்.எம். கமால் முகைதீன் ஆகியோர் பேசினார்கள்.


    சென்னை சுன்னத் ஜமாஅத் பேரியக்க தலைவர் டாக்டர் எஸ்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத் மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்வகாப், அச்சன்புதூர் அக்பர்அலி முகைதீன் பள்ளி இமாம் இப்ராஹிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 47-வது பட்டமளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் திடலில் நடைபெற்றது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 28 மாணவர்கள் உள்பட 600-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 47-வது பட்டமளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் திடலில் நடைபெற்றது.

    கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 28 மாணவர்கள் உள்பட 600-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், "இன்றைய மாணவர்களே எதிர்கால இந்தியாவின் தூண்கள். நீங்கள் நல்லொழுக்கத்துடனும், நேர்மை தவறாமலும் வாழ்வில் பயணித்து நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்" என்றார். விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறையின் உதவிப் பேராசிரியர் வேல் பாண்டி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பட்டங்கள் வழங்கும் விழா விமர்சையாக நடந்தது.
    • யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வேலம்பாளையம் ரிங்ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது. பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி தலைமை தாங்கினார். யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாதிரி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பள்ளி பொருளாளர் சுருதிஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பட்டமளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் திருப்பதி, பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.

    யு.கே.ஜி. மாணவர்களை கே.ஜி. வகுப்பிலிருந்து அவர்களை அடுத்த கட்ட (முதலாம்) வகுப்பிற்கு வழி அனுப்பும் விதமாக எல்.கே.ஜி. மற்றும் பிரி-கே.ஜி. மாணவர்கள் நடனங்கள் மற்றும் நாடகம் மூலம் பிரியாவிடை அளித்து மகிழ்வித்தனர். யு.கே.ஜி. மாணவர்களும் தாங்கள் கே.ஜி. வகுப்புகளில் கற்ற அனுபவங்களை கலை நிகழ்ச்சியாக கற்காலத்தில் உருவாக்கப்பட்ட சக்கரத்தின் உதவியால் இயக்கப்பட்ட கட்டைவண்டி முதல் தற்காலத்தில் விண்ணில் ஏவப்படும் விண்கலம் வரை அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருவது குறித்தும், சுற்றுச்சூழலை மனிதன் மாசுபடுத்துவதால் தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவது குறித்தும், விண்வெளியின் முக்கியத்துவம் மற்றும் கோள்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும் நாடகம் மற்றும் நடனம், உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.

    மாணவர்களின் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவை கண்டு களித்தனர். சிறப்பு விருந்தினர் திருப்பதி யு.கே.ஜி. மாணவர்கள் 96 பேருக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் எலிசபெத் விழாவினை முன்னின்று வழிநடத்தினார்.

    ×