என் மலர்

  நீங்கள் தேடியது "Speaker Appavu"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • அ.தி.மு.க விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல.
  • தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

  நெல்லை:

  சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

  இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

  முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சி. மணி மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சிகள் மூலம் அவரது வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

  வ. உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் பாரதியார் 100-வது நினைவுதினம் ஆகியவையையொட்டி அவர்கள் 2 பேரும் படித்த பள்ளியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது.

  வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது பெருமைப்படுத்த உரியதாக உள்ளது.

  அ.தி.மு.க விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

  அ.தி.மு.க.வில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி, தவறு என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது.

  இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

  எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. கொறடா கொடுத்த மனு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும். எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக்கும்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை என சபாநாயகர் தகவல்
  • இது அவசரம், பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினை இல்லை என கருத்து

  சென்னை:

  தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகளை சட்டபேரவை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  16-வது சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைகள் குறிப்புகளை சட்டப்பேரவை இணையதளமான www.assembly.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

  2021-ம் ஆண்டு மே 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 26-ந்தேதி வரை இடைப்பட்ட காலத்தில் 14 நாட்கள் நடைபெற்ற சட்டசபையின் அவை குறிப்புகள் அனைத்தும் பி.டி.எப். வடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

  மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுருவ படத்திறப்பு விழா நிகழ்ச்சிகளும் பொதுமக்கள் பார்வைக்காக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை இன்று முறைப்படி தொடங்கி வைத்தேன்.

  கேள்வி:- எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரு தரப்பிலும் கடிதம் வந்துள்ளதே. இதன் மீது என்ன முடிவு எடுப்பீர்கள்?

  பதில்:- கடிதம் எனக்கு வரும் முன்பே நீங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு விட்டீர்கள். எனவே இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. அது அவர்களது உள்கட்சி விவகாரம். அவர்கள் கோர்ட்டுக்கு சென்று உள்ளார்கள். நானே இதுபற்றி பலமுறை சொல்லி விட்டேன்.

  ஜனநாயக முறைப்படி, சட்டமன்ற மாண்புப்படி முடிவு எடுப்பேன். ஏனென்றால் இது அவசரம், பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினை இல்லை. இது கட்சி பிரச்சினை. எனவே நல்ல முடிவு எடுப்பேன். சட்டமன்றத்துக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி விருப்பு-வெறுப்பு இன்றி நியாயமாக முடிவு எடுப்பேன்.

  கேள்வி:- இந்த விஷயத்தில் கட்ட பஞ்சாயத்து செய்ய சபாநாயகர் யார்? என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு கூறி இருக்கிறாரே?

  பதில்:- அவர் (ஜெயக்குமார்) இதே சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்து இருந்தவர்தான். அவர் மனசாட்சிபடி அவர்தான் பதில் கூற வேண்டும். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் சொன்னதை குற்றமாக நினைக்கவில்லை.

  கேள்வி:- அ.தி.மு.க. இரு தரப்பினரும் கொடுத்த கடிதத்தின் மீது முடிவெடுக்க கால அவகாசம் எதுவும் உண்டா?

  பதில்:- இந்த விஷயத்தில் யாருக்கும் எதையும் கட்டுப்படுத்தாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. சட்டமன்றத்தில் பல வாக்கெடுப்பு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. அதற்கு எதுவும் கால அவகாசம் இல்லை. எனவே என்னிடம் மட்டும் இதற்கு கால அவகாசம் கேட்கிறீர்களே. அது பேரவை தலைவரின் உரிமை. ஆனாலும் எந்த கால தாமதமுமின்றி விருப்பு வெறுப்பு இன்றி நியாயமாக முடிவு எடுப்பேன் என்பதை நூறு சதவீதம் நம்பலாம்.

  எனவே அதன் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி முடிவு எடுப்பேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின்போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளைஞர்கள் தொழில் செய்வதற்கு அதிக அளவில் தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது.
  • வள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு படித்த வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

  நெல்லை:

  நெல்லை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் குறித்தும், புதிய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு அரசு திட்டங்கள் விரைவாக சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை கூட்டம் வண்ணார்்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

  சபாநாயகர் பேட்டி

  இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இது தவிர உள்ளூரில் உள்ள பெரிய தொழிலதிபர்கள் மூலமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் தொழில் செய்வதற்கு அதிக அளவில் தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது. 12 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ. 2 கோடி கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் அதாவது ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

  குறு, சிறு, நடுத்தர தொழிலில் இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்பை அதிக அளவில் வழங்கு வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இளைஞர்களுக்கு எப்படி அதிக அளவில் வேலை வாய்ப்பினை வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். மேலும் முன்னணி வங்கிகளில் கடன் உதவி எளிதாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.

  வள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு படித்த வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

  வள்ளியூரில் அரசு நிலத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அதில் தொழில் பேட்டை அமைக்கப்பட உள்ளது. இங்கு தொழில் நிறுவனங்கள் அமைக்க விரும்பும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதற்கான பணிகளை தொடங்கி வைக்க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரை அழைக்க உள்ளோம்.

  இது தவிர வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட இடங்களில் வீட்டு வசதி மேம்பாடு மூலமாக வள்ளியூரில் 504 வீடுகளும், பணகுடியில் 468 வீடுகளும் கட்டுவதற்கு அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தொடங்கும்.

  வருகிற 6-ந்தேதி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும், கிராமப்புற மாணவர்கள் கலந்து கொள்வதற்கு கூடுதல் பஸ் வசதிகள் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 300 நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்கிறார்கள். இதன் மூலமாக சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்பு.
  • நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து பேச மாட்டோம்.

  நெல்லை:

  தமிழக சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.

  அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி எதிர்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக கடிதம் கொடுத்துள்ளார்.

  நான் இன்னும் சென்னை செல்லவில்லை. அங்கு சென்ற பிறகு கடிதத்தை படித்து பார்த்து சட்டமன்ற விதிகளின்படி நடவடிக்கை எடுப்பேன்.

  மேலும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை எந்தெந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன்.

  அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து நாங்கள் பேச மாட்டோம். சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து மட்டும் முடிவு செய்வேன்.

  ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் நடைபெற்று வருகிறது. எனவே ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • எதற்காக எதிர்க்கட்சி துணைத்தலைவரை நீக்கினார்கள்? எதற்காக புதிய ஆட்களை நியமிக்கிறார்கள் என்பதை படித்து பார்க்க வேண்டும்.
  • ஏற்கனவே இதுதொடர்பாக நீதிமன்றம், தேர்தல் கமிஷன் உள்ளிட்டவைகளில் முறையிட்டுள்ளார்கள்.

  நெல்லை:

  நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரையும், துணைச் செயலாளராக அக்ரி. எஸ். கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க வேண்டும் என சட்டமன்ற அ.தி.மு.க. கொறடா எஸ். பி. வேலுமணி ஒரு கடிதத்தை எனது அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னதாக வழங்கி உள்ளார்.

  ஏற்கனவே கடந்த வாரம் இது சம்பந்தமாக ஓ.பன்னீர் செல்வமும் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது வேலுமணி கொடுத்த கடிதத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

  நான் சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள அந்த கடிதத்தை பார்த்த பிறகு சட்ட விதிகளின்படியும், சட்டமன்ற விதிகளின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  மற்றபடி என்னை பொறுத்தவரை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 66 பேருமே இரட்டை இலை சின்னத்தில் இருந்து வெற்றி பெற்றவர்கள். அந்த கட்சியில் யார் தலைவர்? யார் செயலாளர்? என்பதை அவர்களுக்குள் பேசி முடித்துக்கொள்வார்கள்.

  இதில் சட்டமன்ற தலைவர் தலையிடமாட்டார். எதற்காக எதிர்க்கட்சி துணைத்தலைவரை நீக்கினார்கள்? எதற்காக புதிய ஆட்களை நியமிக்கிறார்கள் என்பதை படித்து பார்க்க வேண்டும்.

  ஏற்கனவே இதுதொடர்பாக நீதிமன்றம், தேர்தல் கமிஷன் உள்ளிட்டவைகளில் முறையிட்டுள்ளார்கள். எனவே ஜனநாயக முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன்.
  • அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  சென்னை:

  சென்னையில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

  கேள்வி:-அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராகி உள்ளார்? பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருப்பதால் இதுபற்றி ஏதும் கடிதம் கொடுத்திருக்கிறார்களா?

  பதில்:-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து அவரது உதவியாளர் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது.

  அந்த கடிதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த கடிதத்தின் மீது விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த முடிவு எடுத்தாலும் அதை தெரிவிப்பேன்.

  மற்றபடி அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் சென்றுள்ளனர். அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும்.

  எனவே எல்லாமே பரிசீலனையில்தான் உள்ளது. இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நீங்களாக யூகித்து கொண்டு பதிலை எதிர்பார்த்தால் அதுபற்றி கருத்து கூற முடியாது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரப்பாடி மற்றும் இளங்குளம் கிராமங்களில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் திட்டம் ரூ.21 லட்சம் மதிப்பில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
  • புதுச்சேரி முதல் கோவங்குளம் வரை செல்லும் சாலையில் சிறிய பாலம் ரூ.32.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

  நெல்லை:

  பரப்பாடியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம், கழிப்பறை வசதியுடன் மற்றும் ஆட்டோ நிறுத்தம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.

  மேலும் பரப்பாடி மற்றும் இளங்குளம் கிராமங்களில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் திட்டம் ரூ.21 லட்சம் மதிப்பில் தொடங்கி வைத்தார்.

  புதுச்சேரி முதல் கோவங்குளம் வரை செல்லும் சாலையில் சிறிய பாலம் ரூ.32.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் பரப்பாடியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடத்தினையும் திறந்து வைத்து டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் பரப்பாடி குளம் தூர்வாரும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

  தொடர்ந்து மூலக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து வகுப்பில் நடத்தப்படும் பாட முறைகளை கேட்டு அறிந்து பார்வையிட்டார்கள்.

  நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி .எஸ். ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியாஆரோக்கிய எட்வின், நாங்குநேரி தாசில்தார் உட்பட பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அப்பாவுவின் தைரியமான பேச்சு உண்மையிலேயே வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்களின் 82-வது மாநாட்டில் பங்கேற்று மாநில உரிமைகள் குறித்த வலுவான தமிழகத்தின் குரலை தமிழக சபாநாயகர் அப்பாவு ஒலித்திருக்கிறார். அவரது குரல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. அல்லாத அரசுகளின் குரலாக ஒலித்திருக்கிறது.

  அவரது தமது உரையில், ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது சட்டமன்றத்தின் அதிகாரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிடுகிறது. எனவே எந்தெந்தத் தீர்மானங்கள், எவ்வளவு காலத்துக்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது பற்றியும், அவற்றைத் திருப்பி அனுப்புவதற்கும் ஒரு காலக்கெடுவை வகுப்பதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

  அதேபோல சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்படும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டால், அது குறித்த காரணங்களும் சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அந்தத் தீர்மானத்திலுள்ள குறைகளைத் திருத்திக் கொண்டு, மற்றொரு மசோதாவை நிறைவேற்ற முடியும்.

  10-வது அட்டவணைப்படி சட்டப்பேரவை நலன் சார்ந்து சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இடையூறாக இருக்கும் முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய வேண்டும்’ என அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

  சபாநாயகர்களின் அதிகாரம் குறித்தும் அதில் மத்திய அரசு, நீதிமன்றங்களின் தலையீட்டினால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். மாநிலத்தின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது, அந்த மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தக்கூடிய செயல் என்பதைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

  மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் மசோதாக்களை கிடப்பில் போடுவதோ, திருப்பி அனுப்புவதோ, அந்த மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ள சபாநாயகர் அப்பாவு, குறிப்பிட்ட மசோதா ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணத்தையாவது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

  இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அவரது தைரியமான பேச்சு உண்மையிலேயே வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
  ×