search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK"

    • தவெக மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது.
    • விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து மாநாடு வெற்றி பெற வேண்டினர்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது.

    இந்த மாநாடு வெற்றி பெற வேண்டி புதுவை யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட விஜய் ரசிகர்கள் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் வழிபாடு நடத்தினர்.

    சனிபகவானின் காலடியில் மாநாட்டு பத்திரிகையை வைத்து விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து மாநாடு வெற்றி பெற வேண்டினர்.

    • தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும்.
    • கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க தலைவர் விஜய்க்கு பகுஜபன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    த.வெ.க. இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும்.
    • பொதுச்செயலாளர் என்பது முகவரி தான்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    வருகிற வழிகளில் எல்லாம் வைக்கப்பட்ட பேனர் மற்றும் வரவேற்பு சிறப்பாக இருந்தது. ஆனால் அதில் ஒன்றில் நிரந்தர பொதுச்செயலாளர் என்று போடப்பட்டு இருந்தது. தலைவர் எனக்கு பொதுச்செயலாளர் பதவி மட்டும் கொடுத்து இருக்கார்.

    அது நிரந்தரமா இல்லையா என்பதை முடிவு பண்ண வேண்டியது நமது தலைவர் தளபதி தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும். தளபதியோட ரசிகன் என்ற பதவி கடைசி காலம் வரைக்கும் என்று நான் சொன்னேன். அந்த பதவி தான் இன்று என்னை இந்த இடத்தில் தளபதி நிறுத்தி இருக்கிறார். அதனால தயவு செய்து பொதுச்செயலாளர் என்பது முகவரி தான். எப்பவும் நம்ம எல்லாரும் தளபதிக்கு கீழ தளபதி தொண்டனாகவும், தோழனாகவும் கடைசி காலவரைக்கும் நாம் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • த.வெ.கவிற்கு 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • வாகன நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    வரும் 27ம் தேதி மாநாடு நடக்கும்போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் ?

    வாகன நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உடனடியாக தேர்வு செய்து, அதற்கான வரைபடங்களை ஒப்படைக்க வேண்டும்.

    மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்த வகையான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டியே காவல்துறைக்கு தர வேண்டும்.

    ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தவெக முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
    • தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம்.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

    ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சட்டசபை தொகுதி அளவில் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்களுடன் தற்காலிக பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
    • மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.

    மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    முதல் மாநாடு நினைவாக, 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் நட திட்டமிடப்பட்டுள்ளது. புயல், மழையை தாங்கும் வகையில் விண்ட் வெலாசிட்டிக்கு ஏற்ப கொடிக்கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது.

    தொடர்ந்து, வரும் 27ம் தேதி மாநாடு தொடங்கும் முன், திடலின் எதிரே 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு 27-ந்தேதி நடைபெறுகிறது.
    • பந்தல் அமைக்கும் பணி இன்று முதல் நடைபெற இருக்கிறது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்தனர். பின்னர் மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

    பந்தக்கால் நட்பபட்ட போது தளபதி, தளபதி என கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர். பந்தக்கால் நடப்பட்ட விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தின் முக்கிய கோவில்கள், தேவாலயம், மசூதி ஆகிவற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதில் த.வெ.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பூமி பூஜை மற்றும்டி பந்தக்கால் நடும் விழாவிற்கு வந்தவர்களுக்கு இட்லி, பொங்கல், பூரி, வடை ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.

    மாநாடு நடைபெறும் இடத்திற்கு புஸ்சி ஆனந்த் வந்ததும், அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    • அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டம்.
    • விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக, மீண்டும் அனுமதி கேட் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தவெக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

    அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி, பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று வெளியிட்டிருந்த நிலையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார். 

    • சிகிச்சை பலன் இன்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • முற்போக்கு அரசியலில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சீராம் யெச்சூரியின் மறைவுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும்.
    • அதிமுக வலிமையான கட்சி என்பதால் அவதூறு பரப்புகின்றனர்.

    சேலம்:

    சேலம் நரசோதிப்பட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டினேன். குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. இதற்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தெந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையோ அதை சரிசெய்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு நான் சொன்ன கருத்துக்கு எதிர்மறை கருத்து என்பது எந்த விதத்தில் நியாயம்.

    கேள்வி: வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் 99 சதவீதம் சாதி பாகுபாடுகள் தமிழகத்தில் அப்படியே தான் இருக்கிறது என சொல்லியுள்ளார்?

    பதில்: ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

    கே: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் பரவியுள்ளது குறித்து?

    ப: இதுபற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வேண்டும் என்று இதுமாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க. அ.தி.மு.க. என்பது ஒரு கடல். இதில் அவரை மாதிரி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கட்சியில் அங்கம் வகிக்கிறாங்க. கட்சிக்காக உழைத்து கொண்டிருக்காங்க. அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் வதந்தியை கிளப்பிக்கிட்டு இருக்கு. இது கண்டிக்கத்தக்கது.

    கே: பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து?

    ப: அரசாங்கம் அவர்களை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும். அந்த மக்களின் பிரச்சினை என்ன? அவர்கள் என்ன? என்ன? கோரிக்கை வைக்கிறாங்க? என அதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலமாக தீர்வு காண வேண்டும். அதுதான் என்னுடைய நிலைபாடு.

    கே: தமிழகத்தில் மருந்து தட்டுபாடு நிலவி இருப்பதாக கூறப்படுவது குறித்து?

    ப: நேற்று கூட ஊடகத்தில் வந்த செய்தி. கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். தமிழகத்தினுடைய பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. ஏற்கனவே நான் இந்த மருத்துவமனையில் உள்ள இந்த குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினேன். அதற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்களே தவிர அதை சரி செய்யாமல் விட்டுவிட்டு வேண்டும் என்றே எடப்பாடி பழனிசாமி தவறான கருத்து சொல்கிறார் என கூறுகிறார்கள்.

    நாங்கள் அங்கு இருக்கிற நிலைபாட்டை எடுத்து சொல்கிறோம். குறைபாடுகளை தீர்ப்பது அரசினுடைய கடமை. மக்கள் எங்களிடம் விண்ணப்பம் மூலம் கோரிக்கை வைக்கிறாங்க. இப்படியெல்லாம் குறைபாடு இருக்கிறது, இதையெல்லாம் நீங்கள் வெளியே தெரிவிக்க வேண்டும். சரி செய்ய வேண்டும் என சொல்றாங்க. அதன் அடிப்படையில் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஊடகத்தின் வாயிலாக பேசுகிறோம். அரசாங்கம் எந்தெந்த மருத்துவமனையில் குறைபாடுகள் இருக்கிறதோ? அதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    ×