என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ்"

    • வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
    • மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-

    இது "எங்கள் குடும்பம்" என்று சொல்வதா, "கழகக் குடும்பம்" என்று சொல்வதா, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் "நமது குடும்பம்" என்ற நிலையிலேதான் இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அன்பில் கழகப் பணி இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு நான் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தலைவர் கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு நட்புக் கொண்டிருந்தார். தலைவர் கலைஞருக்கு எந்த அளவிற்குத் துணையாக இருந்தார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே கழகத்தை உருவாக்குவதற்கு, கழகம் இன்றைக்கு கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த அன்பில் கடைசி வரையிலே கழகத்திற்கு, தலைவர் கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தவர்.

    அதைத் தொடர்ந்து அவருடைய மகன், என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி எனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே ஒரு உற்ற நண்பனாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலே ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அன்பில் பொய்யாமொழி.

    ஆகவே இப்படித் தொடர்ந்தது அந்த உறவு. அதற்குப் பின்னால் இங்கே வரவேற்புரையாற்றிய உதயநிதி குறிப்பிட்டதைப் போல, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்றைக்கு எங்களுடைய குடும்பத்திலே, குறிப்பாக உதயநிதியிடத்திலே எந்த அளவுக்கு நட்போடு பழகி, அவர் இன்றைக்கு வளர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, அமைச்சராகவும் பொறுப்பேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி .

    சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி, பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளிவிவரத்தையும் கையிலே வைத்துக் கொள்ளாமல் எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போல பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரைப் பார்த்து எல்லோரும் பாராட்டுகிற போது அவருடைய தந்தை என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவுக்கு சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப்போதும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    ஆகவே இது இப்படித் தொடர்ந்து இன்னும் அன்பிலோடும் முடியவில்லை, தலைவர் கலைஞரோடும் முடியவில்லை, என்னோடும் முடியாது. நம்முடைய அன்பில் பொய்யாமொழியோடு முடியாது. அதேபோல நம்முடைய உதயநிதி, மகேஷோடு முடியப் போவதில்லை. உதயநிதியினுடைய மகன் இன்பனாக இருந்தாலும் சரி, மகேஷினுடைய மகன் இனியனாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நட்பும் இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆகவே வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்தச் சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்து எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே முடித்துவிட்டுதான் இன்றைக்கு வந்திருக்கிறேன்.

    இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறுகிற போது கையை எடுத்து இப்படி ஒரு சொல். அந்த ஆக்ஷனோடு நான் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்தது அல்ல. ஏதோ காரில் ஏற வருகிற போது அங்கே எதிரே நின்று கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் என்னை பார்த்து "என்ன முடிந்துவிட்டதா, முடிந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். "முடிந்துவிட்டது" என்று சொன்னேன், அவ்வளவுதான். அது இன்றைக்கு பெரிய வைரலாகி "எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் ஃபினிஷ்டு" அப்படின்னு சொல்ற மாதிரி இன்றைக்கு அந்த காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

    ஆகவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்களாக இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிக்கு இரண்டு பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த நான்கு பேரும் சென்னையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். நாம் வழக்கமாகச் செல்வது உண்டு.

    ஆகவே இதை முடிச்சுட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்தான் வேகவேகமாக வந்து வேகவேகமாகத் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு நான் செல்லவிருக்கிறேன். இன்றைக்கு அந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே பொய்யாமொழி இருந்து இந்த விழாவை நடத்துகிறபோது எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைவாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் பல்லாண்டுக் காலம் எல்லா நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    • குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.
    • கூட்டணிக்கு தலைமை யார்? என்பதில் இன்னும் போட்டி தொடர்கிறது.

    புதுச்சேரி:

    சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தது. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறாமல், காலதாமதமாகி வந்தது.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் என தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

    தமிழகத்தில் தாங்கள் கேட்ட தொகுதிகளை விட எண்ணிக்கை குறைந்துள்ளதால் புதுச்சேரியில் கடந்த முறையை விட கூடுதலான தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியிலும் காங்கிரஸ், தி.மு.க. இடையே கூட்டணிக்கு யார்? தலைமை, கூடுதல் தொகுதியில் போட்டி என்ற மோதல் இருந்து வருகிறது.

    தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்ற நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.

    இதுதொடர்பாக ஏற்கனவே கட்சி தலைமைக்கும் புதுச்சேரி காங்கிரசார் தொகுதி பட்டியலுடன் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை தாங்குவதை விரும்பவில்லை.

    இதனை புதுச்சேரி மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் எம்.பி.யை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலையும் அளித்துள்ளனர். இதனால் கூட்டணிக்கு தலைமை யார்? என்பதில் இன்னும் போட்டி தொடர்கிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் தெலுங்கானா மந்திரி இல்ல திருமண விழாவில் பங்கேற்க ஐதராபாத் சென்றுள்ளனர். அவர்கள் இன்று மாலை சென்னை திரும்புகின்றனர்.

    அகில இந்திய தலைமை அறிவுறுத்தினால் சென்னையில் அண்ணா அறிவாலயம் சென்று புதுச்சேரிக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று மாலை தொடங்குவார்கள். புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா இன்று சென்னையில் தி.மு.க. தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்திய கம்யூனிஸ்டு 1, விடுதலை சிறுத்தைகள் 1 என தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டது.

    இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் புதுச்சேரியில் தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

    இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் ஒரு பொது, 2 தனி என 3 தொகுதிகள் வேண்டும் என தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளும் மாறும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

    • காங்கிரசுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறேன்.
    • அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம்.

    தஞ்சாவூர்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இவ்விழாவில் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * காங்கிரசுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறேன்.

    உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி... தனித்து விடப்பட்ட தவெக - என்ன செய்யப்போகிறார் விஜய்?

    * அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம்.

    * தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை.

    * ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு அமைந்த கூட்டணி அடுத்த தேர்தலில் நீடித்தது இல்லை என்பதும் வரலாறு என்றார்.

    • ஆட்சியின் கடமை மக்களின் வாழ்வை உயர்த்துவது; அரசியல் காட்சிகளை அல்ல.
    • மக்கள் நல ஆட்சியின் மண், மாநில உரிமைகளின் குரல்.

    விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மக்கள் வரிப்பணம் —

    அரசியல் மேடைகளுக்கா?

    ஒரே நாள் நிகழ்ச்சிக்கு

    ₹30 கோடியை தாண்டும் செலவு.

    மேடைகள் உயர்ந்தன,

    விளம்பரங்கள் முழங்கின,

    ரோடு ஷோக்கள் பிரகாசித்தன.

    ஆனால் மக்கள் வாழ்க்கை?

    விலைவாசி உயர்வு,

    வேலைவாய்ப்பு குறைவு,

    இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி.

    ஆட்சியின் கடமை

    மக்களின் வாழ்வை உயர்த்துவது;

    அரசியல் காட்சிகளை அல்ல.

    ஆனால் இன்று

    பிரதமர் மோடி அவர்களின் வருகைக்காக

    கோடிகள் செலவழிக்கப்படும் அரசியல் கலாசாரம் உருவாகிறது.

    இந்த கலாசாரம்

    தமிழ்நாட்டில் வேரூன்றக்கூடாது.

    ஏனெனில்

    தமிழ்நாடு என்பது

    மக்கள் நல ஆட்சியின் மண்,

    மாநில உரிமைகளின் குரல்.

    அதனால் தான்

    பாஜக/அதிமுக கூட்டணியை

    அரசியல் ரீதியாகத் தடுக்க வேண்டியது அவசியம்.

    மக்கள் பணம் புனிதம்.

    அதை காக்கும் பொறுப்பு

    மக்களிடமே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்திர ரெட்டி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • சத்தீஸ்கருக்கு பூலோதேவி நேதம் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

    அதன்படி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்திர ரெட்டி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இமாச்சல பிரதேசம் - அனுராக் சர்மா, அரியானா - கரம்வீர் சிங், சத்தீஸ்கர் - பூலோதேவி நேதம் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டவர்.

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.

    இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    திருச்சியை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டோபர் மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அதிக இடங்களை கோரியது.
    • திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது,

    2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தவெகவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அதிக இடங்களை கோரியது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது,

    தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ஆட்சியில் பங்கு என்று கூறி திமுக கூட்டணி கட்சிகளுக்கு தவெக தூது விட்டது. விசிக இந்த வலையில் முதலில் விழும் என்று எதிர்பார்த்த தவெகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலுவானது. தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்தது.

    இதனிடையே காங்கிரஸ் கட்சியுடன் தவெக மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தற்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி பங்கீடு இறுதி செய்ததால் தவெகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் உறுதியாகியுள்ளதால் நாம் தமிழர் கட்சி போல தனித்து போட்டியிட வேண்டிய நிலைமைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தவெக உடன் கூட்டணி இல்லை என்பது தெளிவானது.

    2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது.  பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல்கள் வெளியாகி வந்தது.

    இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. நாளை முதலமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் சந்தித்து பேசினர்.
    • பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ப.சிதம்பரம் கட்சி தலைமைக்கு தெரிவித்தார்.

    தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ப.சிதம்பரம் கட்சி தலைமைக்கு தெரிவிப்பார் என்றும் அதைத்தொடர்ந்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் என்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று மாலை சென்னை வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதியாகி இருப்பதாக டெல்லி வட்டார தகவல் வெளியாகி உள்ளது.

    • சாதனைகளை செய்துதான் வாக்குகளை வாங்க முடியும். எங்களது சாதனைகள் மக்கள் மனதில் இருக்கிறது.
    • பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குறைந்த கட்சி தான் உள்ளது. அவர்கள் கூட்டணியை ஆரம்பித்து பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதனால் அ.தி.மு.க. கூட்டணியுடன் தி.மு.க. கூட்டணியை ஒப்பிடக்கூடாது. நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் சமூகமாகத்தான் பேசுவோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூட்டணியை சரியான பாதையில் கொண்டு செல்வார்.

    த.வெ.க.வுடன் காங்கிரஸ் திரைமறைவு பேச்சுவார்த்தை என்பதெல்லாம் கிளப்பி விடுகின்ற விஷயம். எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி, இங்கு வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வரமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

    விஜய்யும் யாரும் செல்லாததால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பை விஜய் புரிந்திருக்கலாம். அவ்வளவு தான், ஆள் இல்லாத வீட்டில் என்ன வேணாலும் கொண்டாடலாம். த.வெ.க. ஆளில்லா வீடு. சாதனைகளை செய்துதான் வாக்குகளை வாங்க முடியும். எங்களது சாதனைகள் மக்கள் மனதில் இருக்கிறது. அதன் மூலமாக நாங்கள் வாக்குகள் வாங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்யக்கூடிய சூழ்நிலை சில தொகுதியில் உருவாகி இருக்கிறது.

    பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம். எங்களது கனவு உண்மையான கனவு. எங்களது நினைவும் உண்மையான நினைவு. 200 நிச்சயம், அது தமிழ்நாடு சரித்திரத்தின் வரலாறாக இருக்கும். நாங்கள் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கி விட்டோம். இதுவரை இந்திய சரித்திரத்தில் இல்லாத வகையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே வீடு வீடாக சென்று மகளிர் பரப்புரையை மேற்கொண்டுள்ள ஒரே இயக்கம் தி.மு.க.தான். ஒவ்வொரு வாக்காளரையும் ஒரு முறையல்ல, இரு முறை சந்தித்து விட்டு வந்திருக்கிறோம்.

    எங்களைப் பொறுத்தவரை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். 118 இடங்களுக்கு மேலே வெற்றி பெற்றால் தனி பெரும்பான்மை தான். தி.மு.க. 120 இடங்களில் வெற்றி பெற்று விடும். இந்த தேர்தலில் எந்த சவாலும் எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றார். 

    • கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு.
    • ஒற்றுமையை நமது மிகப்பெரிய சக்தி.

    சென்னை:

    தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்டது கிடைத்தால் தொடருவோம் என்ற நிலைப்பாட்டில் காங்கிரசும், போனால் போகட்டும் பார்க்கலாம் என்ற மனநிலையில் தி.மு.க.வும் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியலை தி.மு.க. அறிவிக்க உள்ளது.

    தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியானால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு. ஆனால் எந்த தனிநபரையும் விட கட்சியே உயர்ந்தது. தலைமையினர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை- ஏனெனில் ஒற்றுமையை நமது மிகப்பெரிய சக்தி என பதிவிட்டுள்ளார். 



    • 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • கவுரவ் கோகாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களோடு அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஏப்பரல் மாதம் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம். தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    அசாம் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 42 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்காத் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் தேபப்பிரதா சைகியா நஜிரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிபுன் போரா பார்சல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் 2016-ம் ஆண்டு ஆட்சியை இழந்தது.

    ×