என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறது பாமக. அதிமுக கூட்டணியிலும் பாமக நிச்சயம் இடம்பெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    பாமக கட்சி தற்போது ராமதாஸ் அணி அன்புமணி அணி என 2 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பாமக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம்.

    அரியலூர்:

    அரியலூரில் விவசாயிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். இதன் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன்களை தள்ளுபடி செய்தோம்.

    * 11 ஆயிரத்து 11 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் முந்திரி சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் உழவன் செயலியை அறிமுகம் செய்து, பருத்தி நோய் தாக்குதலின் போது மருந்து அடிக்க பரிந்துரைத்தோம்.

    * மரவள்ளி கிழங்கு நோய் தாக்குதலுக்கு, மாவு பூச்சி பயிர்களுக்கு தேவையான மருந்து அடித்து பாதுகாத்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏரிகளை தூர்வாரிய போது வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்பெற்றாக கூறினார்.

    • தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார்.
    • போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் கோவையில் 2 நாட்கள் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் இன்று தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

    கோவை டாடாபாத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் தொடங்கியது. போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று.

    ஆனால் கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

    மேலும் தமிழ்நாட்டில் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் இந்த போராட்டம் நடக்கிறது" என்றார்.

    • ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
    • இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும், அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.

    "காலை 11 மணிக்கி ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்" என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர். இந்த மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால், கொள்ளையர்களின் பதில் மிரட்டல், கொலை!

    இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல; அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது.

    இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.

    மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • அ.தி.மு.க. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நோக்கம்.
    • ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கவில்லை.

    சென்னை:

    சென்னையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நோக்கம். அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை. உடன் இருப்பவர்களுக்கு பதவி பெற்றுத்தரப்படும். அ.தி.மு.க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதால் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கவில்லை. கட்சி தொடங்கிய பிறகு விஜய் இன்று வரை நன்றாக தான் செயல்பட்டு வருகிறார். விஜய்க்கு எங்களது தார்மீக ஆதரவு உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம்.
    • மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும்.

    கீழ்ப்பாக்கம்:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    * அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்.

    * சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி.

    * அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறோம்.

    * எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம்.

    * மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும்.

    * எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. அது என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியும்

    * எனது தலைமையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும்

    * எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிப்பேன் என்றார்.

    • இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன.
    • இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன.

    ஸ்டாலின் அவர்களே- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் உங்கள் அரசால், உங்கள் காவல்துறையால் தனது கனவனை இழந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறார். மீனாவுக்கு உங்களிடம் இருந்து பதில் வருமா பொம்மை முதல்வரே?

    திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கும் நீங்கள் அவசர கதியில் கொடுத்த வேலை மற்றும் நிலம், தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர்.

    லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும் மனமில்லை!

    இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?

    லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என

    ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.
    • போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி மிக வலுவாகவே உள்ளது.

    * தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறதா என உதயநிதி பார்த்து கொள்ளட்டும்.

    * தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.

    * போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.

    * அடுத்தாண்டு தேர்தல் வருவதால் தி.மு.க. நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.

    * உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்கிற பெயரில் நாடம் நடத்தப்படுகிறது.

    * 4 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் இப்போது குறைகளை கேட்கிறார்கள்.

    * அ.தி.மு.க.வுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளன என்றார். 

    • எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது.
    • வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார்.

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் முடிவடைந்தது.

    சுற்றுப்பயணம், 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரம் நிறைவுபெறுகிறது.

    இந்நிலையில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை 2-ம் கட்ட பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

    அதன்படி, வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார். புதுக்கோட்டையில் தொடங்கும் சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
    • விவசாயிகள், வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று முன்தினமும், நேற்றும் அவர் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இன்று அவர் கடலூர், பண்ருட்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதையொட்டி இன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வரும் அவருக்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் .சி. சம்பத் தலைமையில் கடலூர் மாவட்ட எல்லையான, ரெட்டிச்சாவடியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சக்குப்பம் எம்.ஜி.ஆர்.சிலை அருகிலும், தொடர்ந்து டவுன்ஹால் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், 4.45 மணி அளவில் மஞ்சக்குப்பத்தில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார். அதன்பிறகு, சீமாட்டி சிக்னல் அருகில் சிறப்புரையாற்றுகிறார்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகிலும், மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலும், அண்ணா கிராமம் அம்பேத்கர் சிலை அருகிலும் சிறப்புரையாற்றுகிறார். மாலை 7 மணி அளவில் திருவதிகை ஆயில் மில், திருவதிகை எம்.ஜி.ஆர். சிலை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதன்பிறகு இரவு 7.30 மணி அளவில் பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகில் பேசுகிறார். இதையடுத்து நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம் பாக்கம், அண்ணா கிராமம் பண்ருட்டி நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகள் வழி நெடுக்கிலும் பல கிலோமீட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அ.தி.மு.க.வினர் வழி நெடுகிலும் பெரிய அளவிலான பேனர்கள் வைத்து வரவேற்று உள்ளனர். இது மட்டும் இன்றி மதியம் முதல் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகள் முழுவதும் விழா கோலம் பூண்டு உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்க உள்ளனர்.

    நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி புதுவை மாநிலம் பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    அவர் இன்று அந்த விடுதிக்கு கடலூர் மாவட்ட விவசாயிகளை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதில் விவசாயிகள், வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். மனுக்களும் கொடுத்தனர்.

    இதில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.சி.சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
    • கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.

    சென்னை:

    மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.

    தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது.

    எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. தமிழக அரசிடம் நிதி இல்லாததால் தான் அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்கிறார்கள். கோவிலை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும்.

    சமூக நீதி விடுதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அங்கு எந்த வசதியும் இல்லை. விடுதியை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது.

    அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.

    இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.

    இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

    • தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் கூறி உள்ளார்.
    • தனித்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் கூட்டணி ஆட்சி அமையுமா? என்று தொடர்ந்து பலரும் என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு "ஆம்" என்பதே எனது பதில் ஆகும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கூறுகையில், பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

    கூட்டணி ஆட்சி என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கும் நிலையில், தனித்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இரு கட்சி தலைவர்களின் கருத்துகளால் குழப்பம் தொடர்கிறது.

    ×