என் மலர்
நீங்கள் தேடியது "Rajyasabha election"
- அரியானா மாநிலத்தின் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
- சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு பாஜக, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்தன.
சண்டிகர்:
அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் அக்கட்சியின் வேட்பாளர் அஜய் மாக்கானுக்கு வாக்களிக்காமல் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். கார்த்திகேய சர்மாவுக்கு பா.ஜ.க, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற 31 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலையில், குல்தீப் பிஷ்னோய் மாற்றி வாக்களித்துள்ளார். மற்றொருவரது வாக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில், அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த குல்தீப் பிஷ்னோயை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குல்தீப் பிஷ்னோய் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
- மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
புதுடெல்லி :
மாநிலங்களவையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந்தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பா.ஜனதாவுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும்.
- கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட், அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது.
மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பா.ஜனதாவுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6-வது இடத்தை பெறுவதில் சிக்கல் உள்ளது. பா.ஜனதா 3 பேரையும், சிவசேனா 2 பேரையும் நிறுத்தி உள்ளது. இதனால் ஒரு இடத்துக்கு போட்டி நிலவுகிறது.
கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதா-3, காங்கிரஸ்-2, மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவர் என களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தானில் 4 இடங்களுக்கான ஓட்டுப்பதிவில் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும், பா.ஜனதா ஒரு வேட்பாளரும், பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சையாக சுபாஷ் சந்திராவும் போட்டியில் உள்ளனர்.
அரியானாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு சந்தேகமாகி உள்ளது.
4 மாநில மேல்சபை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் பல்வந்த்சிங் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில் அகமது படேல் வழக்கில் இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, அகமது படேல் மனு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யுமாறு கூறினர். எனவே, அகமது படேல் மனு மீது குஜராத் உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RajyaSabhaElection #SupremeCourt #AhmedPatel #GujaratHighCourt