என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம்"

    • முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது.
    • சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும்.

    தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    சென்னை வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டனர். முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது. சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விடுப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.

    அதன்படி தற்போது சென்னையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28,30,936. இதில் ஆண்கள் 13,65,763, பெண்கள் 14,64,344 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 829 பேர். சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும். பெரம்பூரில் 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகத்தில் 1,16,896 வாக்களர் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் சேவை இணையதளம் (voters.eci.gov.in) அல்லது தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் (elections.tn.gov.in) சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம் 

    • காஞ்சிபுரம் மாவட்ட 4 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் உள்ளனர்.

    எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகுிறது.

    அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட 4 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், வாக்காளர்கள் எண்ணிக்கை- 11,92,194 உள்ளதாக தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,76,299 வாக்காளர்களும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் உள்ளனர்.

    இதேபோல், ஸ்ரீபெரும்புதூர்- 3,75,921, உத்திரமேரூர்- 2,43,922, ஆலந்தூர்- 2,9,052 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    * சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை- 27,55,830.

    ஆண்கள்-13,84,548

    பெண்ள்- 13,70,962

    3ம் பாலினத்தவர்- 320 பேர் உள்ளனர்.

    * தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், வாக்காளர்கள் எண்ணிக்கை- 13,6,624.

    ஆண்கள்- 6,71,742

    பெண்ள்- 7,0,689

    3ம் பாலினத்தவர்-193 வாக்காளர்ள் உள்ளனர்.

    * விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417.

    ஆண்கள்- 7,28,539

    பெண்கள்- 7,68,62

    3ம் பாலினம்- 246 வாக்காளர்கள் உள்ளனர்.

    *செங்கல்பட்டு மாவட்டம்:

    வாக்காளர்கள் எண்ணிக்கை- 22,60,03

    ஆண்கள்- 11,04,511

    பெண்கள்- 11,55,144

    3ம் பாலினம்- 381 வாக்காளர்கள் உள்ளனர்.

    *சிவகங்கை மாவட்டம்:

    வாக்காளர்கள் எண்ணிக்கை- 11,10,599

    ஆண்கள்-5,44,035

    பெண்கள்- 5,66,526

    3ம் பாலினம்- ௩௮

    * கன்னியாகுமரி

    வாக்காளர்கள் எண்ணிக்கை- 15,10,550

    ஆண்கள்- 7,51,016

    பெண்கள்- 7,59,390

    3ம் பாலினம்- 144 


    • நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக பீகாரிலும், 2-வது கட்டமாக தமிழகம், கேரளம், மேற்குவங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் தீவுகள் என யூனியன் பிரதேசங்களுக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

    இந்நிலையில், கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், சண்டீகர், தாத்ரா-நகர் ஹவேலி, டாமன்-டையூ, அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

    • திமுகவில் 4 இடங்களும், அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    மேல்சபை எம்.பி.க்களின் (மாநிலங்களவை) பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும். 10 மாநிலங்களில் உள்ள 37 உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைகிறது.

    இந்தநிலையில் காலியாகும் 37 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு, மராட்டியம், மேற்குவங்காளம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி நடை பெறுகிறது.

    தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் இடம் காலியாகுகிறது.

    தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, பி.செல்வ ராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரது பதவி காலமும், அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.தம்பிதுரை, மற்றும் அ.தி.மு.க. சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது. இந்த 6 மேல்சபை எம்.பி. இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. மார்ச் 5-ந்தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 6-ந்தேதி நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். மார்ச் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் 20-ந்தேதி முடிவடையும்.

    மாராட்டியம் மாநிலத்தில் 7 மேல்சபை எம்.பி.க்கள், ஒடிசாவில் 4 உறுப்பினர்கள், மேற்கு வங்காளத்தில் 5 எம்.பி.க்கள் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது.

    அசாம் (3), பீகார் (5), சத்தீஸ்கர் (2), அரியானா (2), இமாச்சலபிரதேசம் (1), தெலுங்கானா (2) ஆகிய மாநிலங்களில் உள்ள மேல்சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் 9-ந்தேதி முடிவடைகிறது.

    இந்த 9 மாநிலங்களில் காலியாகும் 31 மேல்சபை எம்.பி.க்களின் தேர்தலும் மார்ச் 16-ந்தேதி நடக்கிறது.

    • எந்த நாற்காலியும் நிரந்தரமானது அல்ல
    • இந்த அரசாங்கம் [மத்திய அரசு] 2026 க்கு மேல் நீடிக்காது.

    தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட கட்சியால் நடத்தப்படும் 'துக்ளக் ஆணையமாக' மாறிவிட்டது என செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையத்தால் மேற்குவங்கம் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வங்காள அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டால், நாங்கள் அவர்களை 100 சதவீதம் பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார்.

    "ERO-க்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ERO-க்களிடம், அவர்களின் குற்றம் என்ன, அவர்களின் தவறு என்ன என்று கேட்டீர்களா? என ஏழு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார். 

    தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காரணம் காட்டி, ஜனநாயக உரிமைகளைப் பறித்து, சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்து, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டில் தலையிடுகிறார்கள். எந்த நாற்காலியும் நிரந்தரம் அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் பாஜக ஐடி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.   

    • தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து 22 லட்சத்திக்ரும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நாளை மறுநாள் வெளியாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 மற்றும் 1145/2025 ஆகிய வழக்குகளில் 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது. 30.01.2026 அன்று வெளியிட்ட கடித எண் 23/ SIR/ 2026/ ERS -ல். "முரண்பாடுகள்" (Logical Discrepancies) என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுக்கா/ துணை பிரிவு அலுவலகங்கள். நகரப் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

    மேலும், இம்முரண்பாடுகள் பிரிவில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள். முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள். உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை நேரில் அல்லது தங்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட) மூலமாக சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.

    இதற்கமைவாக. இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது. 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision SIR) தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.
    • ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய துணைத் தேர்தல் ஆணையர்கள் பன்வர் பிரகாஷ், மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் மற்றும் பலர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் கூறுகையில், "தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு சென்னை மற்றும் புதுச்சேரியை அடைந்துள்ளது," என்றார்.

    தேர்தல் ஆணைய குழுவினர் நாளை, நாளை மறுநாள் (பிப். 12 மற்றும் 13) சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 12ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) துணை கமிஷனர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவையான முன்னேற்பாடு பணிகள் நிறைவுபெற்ற பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    • தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
    • சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட் சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

    இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி இன்று நிறைவு பெறுகிறது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. அதில் உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரடடை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

    நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

    66 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று நீக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

    அதன்படி பார்த்தால் சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் இரட்டை பதிவுகளை வைத்திருக்கலாம் என்று தேர்தல் கமிஷன் நம்புகிறது.

    அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. 

    • தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
    • தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.

    அங்கீகரிக்கப்படாத கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்ற உத்தரவை மாற்றக்கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பாமக விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.

    தற்போதைய சூழலில் நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பாமகவின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தக்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு மம்தா நன்றி தெரிவித்தார்
    • பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.

    அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.

    பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

    SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மம்தா பானர்ஜி மனு மீது 2 நாட்களில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. .

    இதனையடுத்து தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த மம்தா மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டுகோள் விடுத்தார்.

    • படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இடம் மாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6-ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்வதற்கு புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று, 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    • கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று.
    • பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற 92 வயதான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் குற்றம்சாட்டி உள்ளார்.

    தேசிய ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகவும் கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால், மேற்கு வங்காளத்தில் அது அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

    வாக்காளர்கள் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு செய்யத் தவறினால், அது வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமர்த்தியா சென் அவரது வாக்காளர் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது பேசுபொருளானது.   

    ×