என் மலர்tooltip icon

    இந்தியா

    SIR செயல்முறை வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி -  பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குற்றச்சாட்டு
    X

    SIR செயல்முறை வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி - பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குற்றச்சாட்டு

    • கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று.
    • பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற 92 வயதான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் குற்றம்சாட்டி உள்ளார்.

    தேசிய ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகவும் கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால், மேற்கு வங்காளத்தில் அது அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

    வாக்காளர்கள் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு செய்யத் தவறினால், அது வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமர்த்தியா சென் அவரது வாக்காளர் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது பேசுபொருளானது.

    Next Story
    ×