என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voters list"

    • வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
    • தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

    தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், எஸ்ஐஆர் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்," ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. உண்மையான தேர்தல் நடைபெற உள்ளது. பொய் தேர்தல் அல்ல.

    நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாந்துபோகும் தேர்தலாக வரப்போகும் தேர்தல் இருக்கும்" என்றார்.

    • சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் 14.25 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.

    இது, எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.79 லட்சமாக இருந்தது.

    இந்நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு சென்னை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை

    ஆர்.கே.நகர் - 56,916

    பெரம்பூர் - 97,345

    கொளத்தூர் - 1,03,812

    வில்லிவாக்கம் - 97,960

    திரு.வி.க. நகர் - 59,043

    எழும்பூர் - 74,858

    ராயபுரம் - 51,711

    துறைமுகம் - 69,824

    சேப்பாக்கம் - 89,241

    ஆயிரம் விளக்கு - 96,981

    அண்ணாநகர் - 1,18,287

    விருகம்பாக்கம் - 1,10,824

    சைதாப்பேட்டை - 87,228

    தியாகராயநகர் - 95,999

    மயிலாப்பூர் - 87,668

    வேளச்சேரி - 1,27,521

    • வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் 14.25 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.

    இது, எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.79 லட்சமாக இருந்தது.

    • SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
    • சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.

    இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    • தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது.
    • வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு முந்தைய விபரங்கள் பெறப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் திருப்பி வழங்கிய படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை(19-ந்தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:-

    தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.

    மேலும் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 57 ஆயிரத்து 658 வாக்காளர்கள் இறந்தவர்கள், 10 ஆயிரத்து 719 வாக்காளர்கள் இரட்டைபதிவு, 1 லட்சத்து 46 ஆயிரத்து 621 வாக்காளர்கள் இடம் பெயர்ந்தவர்கள், 58 ஆயிரத்து 675 வாக்காளர்கள் கண்டறிய முடியாதவர்கள் மற்றும் மற்றவை 601 வாக்காளர்கள் என மொத்த 2 லட்சத்து 74 ஆயிரத்து 274 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளார்கள்.

    வாக்காளர்களின் மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றார்.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.

    புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மொத்தம் 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 17,936 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    • SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம்.
    • தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.

    இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு திமுகவிற்கு என்ன அச்சம். முதல்வர் ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்த பிறகு சிவி சண்முகம் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    SIR விண்ணப்ப படிவங்களை BLO களிடம் பறித்து திமுகவினரே நிரப்பி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    தமிழக வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் யார் யார் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதை திமுகவினரை முடிவு செய்கிறார்கள் தேர்தல் ஆணையத்தின் அத்தனை அதிகாரங்களையும் அவர்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட ராகுல் காந்தி இதே போன்ற ஆதாரங்களை தான் வெளியிட்டு வாக்கு திருட்டு புகார்களை கூறியிருந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, SIR-ஐ கண்டித்து வரும் நவம்பர் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், ஆர்ப்பாட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகிறது.
    • யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசியதாவது:

    பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகிறது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில், மேற்கு வங்கத்தில் நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழுக்களை கணக்கெடுப்புகளை நடத்த பாஜ அனுப்பி வைத்துள்ளது.

    யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம். அவர்கள் அந்தத் தரவைப் பயன்படுத்தி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். அதற்கு பதிலாக, வாக்குச் சாவடிகளில் நேரடியாகச் சரிபாருங்கள்.

    நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விட மாட்டேன் என தெரிவித்தார்.

    • நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    பெயர் சேர்க்க, நீக்க

    இதில் 2023 ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரினை சேர்க்க படிவம் 6, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நபர்களில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ள வர்களின் பெயரினை நீக்கம் செய்ய படிவம் 7, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விபரங்களை திருத்தம் செய்ய மற்றும் அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8 ஆகியவற்றை வழங்கி பொதுமக்கள் பயனடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்

    பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமாகவும், Voter Helpline Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பாளை வட்டத்திற்கு உட்பட்ட கீழ்காணும் வாக்குச்சாவடி மையங்களில் 26-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு தொடர்பான ஆயத்தபணி மற்றும் 27-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

    மாற்று மையங்கள்

    எனவே அந்த வாக்குச்சாவடி மையங்க ளுக்கு பதிலாக வேறு பள்ளி களில் வாக்குச்சாவடி மையங்களை அந்த 2 தேதிகளில் மட்டும் மாற்றிய மைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாளை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மாற்றாக பாளை ஏஞ்சலோ மெட்ரிக் பள்ளியில் செயல்படும். சாராள் தக்கர் பள்ளி வாக்குசாவடி சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும்.

    தியாகராஜநகர் புஷ்ப லதா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் ஏற்கனவே 5 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வரும் தியாகராஜநகரில் உள்ள ராம்நகர் ரோஸ் மேரி பள்ளியில் கூடுதல் வாக்குசாவடி மையமாக செயல்படும். மேலும் வி.எம்.சத்திரம் தூத்துக்குடி மெயின்ரோட்டில் உள்ள ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் கே.டி.சி நகர் ஓயாசிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்குசாவடி மையமாக செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
    • விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் அளிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும்.

    நவ. 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். இந்தப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    • பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக வரைவுப் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்வதற்காக 1,914 படிவங்களும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்ளேயே முகவரியை மாற்றுவதற்காக 19 ஆயிரத்து 36 படிவங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளம் மூலமும் விண்ணப்பங்களை அளித்தாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்குச்சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து வருகிறார்கள்.

    பெயர்கள் விடுபட்ட வாக்காளர்கள் உரிய விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

    பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். இதற்கான படிவங்கள் சிறப்பு முகாம்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    ×