என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு"

    • வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
    • தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

    தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், எஸ்ஐஆர் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்," ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. உண்மையான தேர்தல் நடைபெற உள்ளது. பொய் தேர்தல் அல்ல.

    நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாந்துபோகும் தேர்தலாக வரப்போகும் தேர்தல் இருக்கும்" என்றார்.

    • வாக்காளர் பட்டியலை இன்று கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.
    • மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,37,126.ஆண்கள் 6,25,692,பெண்கள் 6,11,258, 3-ம் பாலினத்தவர் 176.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று கலெக்டர் சாந்தி வெளியிட்டார். பின்னர் இது குறித்து அவர் தெரிவித்த போது தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,25,692 ஆண்களும், 6,11,258 பெண்களும், 176 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12,37,126 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

    மேலும் தருமபுரி மாவட்டத்தில் 1,485 வாக்குச் சாவடி நிலையங்கள் உள்ளன. 01.01.2023 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் வரும் 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்களில், தகுதியான நபர்கள் அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 வழங்கியும், ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம்.

    மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம் வருமாறு:-

    பாலக்கோடு- ஆண் வாக்காளர்கள் 1,18,950, பெண் வாக்காளர்கள் 1,16,541, 3-ம் பாலினத்தவர் 17.

    பென்னாகரம்-ஆண் வாக்காளர்கள் 1,25,465, பெண் வாக்காளர்கள் 1,17,213,3-ம் பாலினத்தவர் 10.

    தருமபுரி-ஆண் வாக்கா ளர்கள் 1,30,747,பெண் வாக்காளர்கள் 1,28,551,3-ம் பாலினத்தவர் 112.

    பாப்பிரெட்டிப்பட்டி-ஆண் வாக்காளர்கள் 1,28,322,பெண் வாக்கா ளர்கள் 1,27,603,3-ம் பாலினத்தவர் 13.

    அரூர்-ஆண் வாக்கா ளர்கள் ,22,168, பெண் வாக்காளர்கள் 1,21,650,3-ம் பாலினத்தவர் 24.

    மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,37,126.ஆண்கள் 6,25,692,பெண்கள் 6,11,258, 3-ம் பாலினத்தவர் 176.

    ×