என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • எண்ணெய்களில் பலமுறை பயன்படுத்திய எண்ணெய் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
    • வறுத்த நிலக்கடலை மற்றும் கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் பகுப்பாய்வு கூட நடமாடும் பகுப்பாய்வு வாகன பொறுப்பாளர் முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் ஏற்பாட்டின்படி, தர்மபுரி மாவட்டத்தில், ஒன்றியம் வாரியாக ' நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை முன்னிறுத்தி பொதுமக்கள் கூடும் இடங்கள் பேருந்து நிலைய மட்டும் தயாரிப்பு கூடங்கள் விற்பனை இடங்களில் விழிப்புணர்வு மற்றும் உணவுப் பொருட்கள் சேகரம் செய்து வாகனத்திலேயே பகுப்பாய்வு செய்து விழிப்புணர்வு மற்றும் உரிய மேம்பாட்டு அறிவிக்கை, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த வாரம் ஆந்திராவில் கலப்பட பால் அருந்தி கலப்படத்தினால் நான்கு பேர் உயிரிழப்பு அடிப்படையில் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், தயாரிப்பு கூடங்கள், சில்லறை நிலையங்கள், விநியோகப்பு நிலையங்களில் ஆய்வு செய்து கலப்படம் சார்ந்து உரிய நடவடிக்கை அபராதம், உணவு பாதுகாப்பு விதிகளை கண்காணித்து மேற்கொள்ள விழிப்புணர்வு நடவடிக்கை செய்ய மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டிமரத்துப்பட்டி, ஆலிவாயன்கொட்டாய் , பருத்திநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பால் சார்ந்த தயாரிப்பு முக்கியமாக பனீர், கிரீம், நெய் உள்ளிட்ட தயாரிப்பு நிலையங்களில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் மேற்பார்வையில், தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் பகுப்பாய்வுகூட இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து பால் மாதிரி எடுத்து வாகனத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    நான்கு இடங்களில் எடுக்கப்பட்ட பாலில் இரண்டு இடங்களில் தரம் குறைவாக காணப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நியமன அலுவலர் அவ்விடம் சட்ட ரீதியான உணவு மாதிரி எடுத்து மேல் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் மேல்காரவோணி, பென்னாகரம் ரோடு கோதுமை மாவு மில் அருகில், சோகத்தூர் கூட்ரோடு மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள் ஆய்வு செய்தனர்.

    கடைகளில் இருந்து தேயிலை, உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய், இனிப்பு, காரம் , மசாலா பொருட்கள், கோபி மஞ்சூரி, வறுத்த நிலக்கடலை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மாதிரி சேகரித்து நிகழ்விடத்திலேயே ஆய்வு செய்வதில் மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட எண்ணெய்களில் ஒரு எண்ணெய், பலமுறை பயன்படுத்திய எண்ணெய் என கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    இதேபோல் வறுத்த நிலக்கடலை மற்றும் கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி மூன்று கடை உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் வீதம் உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    காரவோணி நான்கு ரோடு சந்திப்பில் ஒரு பேக்கரியில் ஆய்வின்போது தயாரிப்பு கூடம் சுகாதாரமின்மை குறைவாகவும், செய்தித்தாள்களில் உணவுப்பொருட்கள் பரிமாறுதல் காட்சிப்படுத்துதல், நெகிழி கவர்கள் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான எசென்ஸ் பாட்டில்கள் மற்றும் உரிய விபரங்கள் இல்லாத லோக்கல் குளிர்பானங்களும்

    பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. பேக்கரிக்கு மேம்பாட்டு அறிவிக்கை நோட்டீஸ் அளித்து உடனடி அபராதம் ரூ.2000 விதிக்கப்பட்டு குறைபாடுகள் களைய எச்சரிக்கை செய்யப்பட்டது.

    இதேபோல் பென்னாகரம் ரோடு மேம்பாலம் அருகில் ஒரு பேக்கரியில் தேயிலை தரம் பார்வையிட்டதில் கலப்படம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் பேக்கரியில் நெகிழிகவர்கள், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரங்கள் பரிமாறுதல் மற்றும் காட்சிப்படுத்தல் காரணமாக மேற்படி கடை உரிமையாளர்க்கு ரூ.2000 அபராதம் விதித்து உடன் குறைபாடுகளை களைய எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    அப்போது அக்கடைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களில் சப்ளை செய்ய வந்த வாகனத்தை ஆய்வு செய்ததில் கம்பெனிக்குரிய உரிய லேபிள் அச்சடிக்கப்படாமலும் பல்வேறு கம்பெனி குடிநீர்க்கேன்கள் இருந்ததும் தயாரிப்பு தேதி இல்லாமலும் சப்ளை செய்தது கண்டறிந்து மேற்படி சப்ளையருக்கு உடனடி அபராதம் ரூபாய்.2000 விதித்ததுடன் தண்ணீரை திருப்பி எடுத்துச் சென்று உரிய கம்பெனி லேபிள் மற்றும் தயாரிப்பு தேதி அச்சிட்டு சப்ளை செய்திட எச்சரிக்கை செய்யப்பட்டது.

    மேலும் ஆய்வில் விதிமுறைகள் மீறிய உணவகம், பலகார கடை மற்றும் ஒரு ஜூஸ் கடை என மூன்று கடைகளுக்கு எச்சரிக்கை செய்து தலா ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத கடைகளுக்கு உடனடியாக எடுத்திட விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஆய்வில் நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி வாகனத்தில் உள்ள எல்இடி தொடுதிரை வாயிலாக கலப்படம் குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சிகள் காண்பிக்கப்பட்டது.

    • பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
    • நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார்.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் (35) இவரது மனைவி நிவேதிதா (30) இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 9 மற்றும் 7 வயதில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

    நிவேதிதாவிற்கு அப்பகுதியில் உள்ள வேறு ஒரு வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பாக்கியராஜ் நிவேதிதாவை பலமுறை கண்டித்துள்ளார்.

    ஆனால் தொடர்ந்து நிவேதிதா வாலிபருடன் பழகி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெரியவர்கள் பல முறை நிவேதிதாவிற்கு அறிவுரை கூறி சமரசம் செய்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதிதாவின் தொண்டை பகுதியில் குத்தி உள்ளார்.

    இதில் நிவேதிதா துடிதுடித்து ரத்தம் வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    நிவேதிதா இறந்ததை அறிந்த பாக்கியராஜ் தலைமறைவானார். இன்று காலை தகலவறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் பாக்கியராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணம் மீறிய உறவை கைவிடாததால் கணவனே மனைவியை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 2 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பைக் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அருகேயுள்ள அங்கனாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வினோத் (வயது29). இவர் தருமபுரி நகர் அன்னசாகரம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.

    இவர் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கனாம் புதூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (23) ஓட்டி பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த வினோத், ஹரிகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 4 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இதையடுத்து கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 700 கனஅடியாக வந்தது.

    இதையடுத்து கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
    • அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2021-இல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளன. இளம்வயது சிறார்கள் கூட போதைப்பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.

    ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.

    எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டபேரவைத் தேர்தலில் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.

    • தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
    • மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை.

    தருமபுரி:

    தருமபுரி அருகே வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருமணம் மண்டபம் கட்ட, 80 லட்சம் ரூபாயை, பா.ம.க. தலைவர் அன்புமணி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

    இதில், ஒன்றிய பொதுநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிதி உட்பட, 1.14 கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம், உணவருந்தும் கூடம், சுகாதார வளாகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதை, பா.ம.க. தலைவர் அன்புமணி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது, பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுப்பது என, மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    அதற்கு பணம் கொடுத்து விட்டால் தீர்வாகி விடாது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை. கடந்த, 2021-ல், தி.மு.க. அளித்த, 505 தேர்தல் வாக்குறுதியில், 66 மட்டும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.

    கடந்த, 12 நாளில், 16,000 கோடி ரூபாய்க்கு, 4,385 ஒப்பந்த பணிகள் போடப்பட்டுள்ளன.

    ஆட்சியின் கடைசி காலத்தில் கொள்ளையடிக்கும் வேலையை, தி.மு.க.வினர் செய்கின்றனர்.

    2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் போட்டி. தமிழகத்தில் பெண்களால், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    • ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.
    • ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும்.

    அதிகளவு நீர் ஓடும் போது அருவியில் குளித்து மகிழவும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவர்.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வர்.

    தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று 200 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால், காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    கர்நாடக அணிகளில் இருந்து உபரி நீர் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன. அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று குறைந்துள்ளது.

    கோடை காலம் துவங்கும் முன்பே கர்நாடகாவில் மழை குறைந்ததாலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    நீர்வரத்து மேலும் குறைந்ததால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கான தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது.

    இதே நிலை தொடர்ந்தால் கோடை சுற்றுலா இந்த ஆண்டு கடுமையாக பாதிப்பு நிலை ஏற்படும்.

    • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.
    • சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1200 கனஅடியாக வந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1500 கனஅடியாக குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலாப் பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • குற்றப்பரம்பரை என ஒரு பிரிவு இருந்ததை, சீர்மரபினர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான் மாற்றினார்.
    • மண், மக்களை பாதுகாக்க திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரியில் திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற திராவிட கழக தலைவர் கி.வீரமணி, 'இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஆட்சி, இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி' என்ற தலைப்பில் மேலும் பேசியதாவது:-

    தமிழகத்தில் திராவிட இயக்கமும், திராவிட மாடல் ஆட்சியும் இல்லை என்றால், நாம்யாரும் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது.

    குற்றப்பரம்பரை என ஒரு பிரிவு இருந்ததை, சீர்மரபினர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான் மாற்றினார்.

    அதேபோல திருநங்கைகள், பெண்களுக்கான அங்கீகாரத்தை அளித்தது திராவிட மாடல் ஆட்சிதான். எங்கெல்லாம் அநீதி ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் சமூக நீதி வேண்டும் என்பதற்கு தான் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார்.

    தமிழக்தின் கவர்னர் எதிர்க்கட்சிகளை போல வெளிநடப்பு செய்கிறார். இவை சட்டப்படி தவறு. எனவே தான் அடுத்த ஆண்டு முதல் சட்டப் பேரவையில் கவர்னர் உரையே இருக்காது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்தாலும், பா.ஜ.க.வால் ஏதும் செய்ய இயலாது. மண், மக்களை பாதுகாக்க திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும் என்றார்.

    ×