search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரி"

    • 40 வருடங்களாக அணிந்திருந்த வைர மோதிரம் தொலைந்து போனதால் எனது இதயம் உடைந்துவிட்டது.
    • மோதிரத்தை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு நான் நன்றிக்கடனாக இருப்பேன் என கூறி உள்ளார்.

    பிஸ்கெட்டில் விழுந்த வைர மோதிரத்தை தேடும் பேக்கரி உரிமையாளர்அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மோன்ரா. அங்குள்ள நகரம் ஒன்றில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் இருந்து கேக், பிஸ்கெட், குக்கீஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு சிறு கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் பேக்கரியில் பிஸ்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது 4 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.30 லட்சம்) மதிப்புள்ள வைர மோதிரத்தை தனது விரலில் அணிந்துள்ளார்.

    மோன்ராவின் நிச்சயதார்த்தத்தின் போது அணிவிக்கப்பட்ட அந்த மோதிரத்தை அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அணிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி பேக்கரிக்கு சென்று திரும்பிய போது தான் அவரது வைர கல் பதித்த அந்த மோதிரம் தொலைந்து போனதையும், அதை பிஸ்கெட் தயாரிக்க தேவையான பொருட்களை தயாரிக்கும் பெரிய குடுவைக்குள் போட்ட நியாபகம் வந்துள்ளது. இதனால் பிஸ்கெட் தயாரிக்கும் குடுவைக்குள் மோதிரக் கல் விழுந்திருக்கலாம் என கருதிய அவர், இதுபற்றிய விபரங்களை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தார். அதில், 40 வருடங்களாக அணிந்திருந்த வைர மோதிரம் தொலைந்து போனதால் எனது இதயம் உடைந்துவிட்டது. அந்த மோதிரம் பிஸ்கெட் தயாரிக்கும் போது விழுந்திருக்கலாம் என்பதால், அந்த மோதிரத்தை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு நான் நன்றிக்கடனாக இருப்பேன் என கூறி உள்ளார். வாடிக்கையாளர்கள் யாரும் பிஸ்கெட்டை கடித்து பற்களை உடைத்து கொள்ள வேண்டாம் என உஷார்படுத்தி உள்ள மோன்ரா, மோதிரத்தை கண்டுபிடித்தால் திருப்பித்தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

    • கேக் கெட்டு போனதை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி.
    • குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு ஸ்ரீரச்சனா மற்றும் நிஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழுந்தையின் பிறந்தநாளை ஒட்டி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அய்யங்கார் பேக்கரியில் கேக் வாங்கி கொடுத்து, பிறகு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக்கை வெட்டிய குழந்தைகள், அதனை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் கேக் கெட்டு போய் இருந்ததை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனே குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    கேக் கெட்டு போன விஷயம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை பேக்கரியை தொடர்பு கொண்ட பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த பேக்கரி நிறுவனம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நடந்தேரிய தவறுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இதை ஏற்க மறுத்த குழந்தைகளின் தந்தை பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் கீழ் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரியில் சோதனை நடத்தினர். சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப் போன இனிப்பு மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு அபராதமும், நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    • தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் அழிக்கப்பட்டது.
    • அபராத தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம், வெளி ப்பாளையம், மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள பேக்கரியில் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நிறுவனம் சுகாதாரமான முறையில் பேக்கரியை பராமரிக்க வில்லை.

    உணவு தயாரிப்பு இடம் சுகாதாரமற்று இருந்தது தெரிய வந்தது.

    ஆனால் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்தனர்.

    பின்னர் அங்கிருந்த காலாவதியான மற்றும் தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

    ஒருவார காலத்திற்குள் உணவு தயாரிக்கும் இடம் சுத்தப்படுத்தி, குறைகள் சரிசெய்து, வெள்ளையடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரக் கேட்டிற்கான அபராதத் தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    • ஆதிரா’ஸ் பேக்கரிஸ் புதிய கிளையை நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.
    • அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் புதிய கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க வடக்கு நகர செயலா ளரும், நகரசபை தலைவருமான ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.முன்னதாக திறப்பு விழா விற்கு வருகை தந்த நகரசபை தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமு கர்களை பேக்கரி உரிமை யாளர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

    ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர் சிவசண்மு கம், சசிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் 'மாலைமலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் எங்களது ஆதி'ராஸ் குழு மங்களின் கிளை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதர வுடன் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.தொடர்ந்து புதிய கிளையை ராமநாதபுரத்தில் தொடங்கி உள்ளோம். வீட்டு விஷே சங்களுக்கு தேவையான அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவை வேண்டு கிறோம் என்றார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர்கள் சிவ சண்முகம், சசிக்குமார்,நகர் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஐஸ்வர்யா குழுமங்களின் உரிமையாளர் தொழிலதிபர் சுப்பு, பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேணிக்கரை பாலன் ஹோட்டல் உரிமையாளர் சோமு, தி.மு.க அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ. பிரதீப் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் இடங்கண சாலையை அடுத்த மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38), இவர் தனது குழந்தைகளான யாசினி (9), யாசித்(8), சபரீஷ் (3) ஆகிய 3 பேருடன் கொங்கணாபுரம் அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.

    அங்கு வழிபாடு செய்தவர் தனது குழந்தைகளுடன் மீண்டும் வீடு திரும்பிய நிலையில், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து முட்டை பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த எடப்பாடி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுரு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்ததுடன், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

    • எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி கடை முழுவதும் எரிந்தது.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் பேக்கரியில் இருந்த கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருப்பினும் தீயில் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 312 உணவு வணிகர்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில்,உணவு கடைகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதை பயோடீசலாக மாற்றம் செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உணவு வணிகர்களிடம் இருந்து விலைக்கு பெற்று பயோ டீசலாக மாற்றப்படுகிறது. இதனால் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவது தடுக்கப்படும்

    இதுபோன்று மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் இதயம், வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தடுக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமை–யல் எண்ணெயை சேகரிக்கும் ரூகோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது :- மாவட்டத்தில் இதுவரை 312 உணவு வணிகர்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உணவு தயாரிப்பு கூடங்களில் 40 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்கள் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரிக்க வைக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்படுகிறது.

    மாதத்துக்கு 7 முதல் 8 டன் வரை ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை 111 டன் எண்ணெய் சேகரிக்கப்பட்டு அதில் 85 டன் பயோடீசலாக மாற்றுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    பேக்கரி, டீக்கடைகள், உணவு விற்பனை நிலையங்களில் பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரத்தை காகிதத்தில் பரிமாறுவது தவிர்க்கப்பட்டு வாழை இலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 90 கிலோ காகிதம் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலப்படம் மற்றும் உணவு தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் வாலிபர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

    அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார். அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் மேலும் பேக்கரி கடை நிறுவனத்திற்கான சான்றிதழை வைத்து கடையை நடத்தியது தெரியவந்தது.

    மேலும் ஆய்வு செய்யும் போது அழுகிய உருளைக்கிழங்கு, தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்தது.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அந்த குடிநீர் பாட்டிலை பறிமுதல் செய்து பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • அஸ்வின்ஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் விற்பனை தொடங்கியது
    • 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது

    பெரம்பலூர்:

    அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன், தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் கூறியதாவது:- பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அண்டு பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது. எங்களது நிறுவனத்தின் மூலம் அனைத்து பண்டிகை நாட்களையும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அந்தந்த பண்டிகைக்கு ஏற்ப இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு உகந்த, இனிப்பு மற்றும் பட்சணங்களை பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இதன்படி கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பொருட்டு சுமார் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பே செர்ரி, உலர் திராட்சை, ஆரஞ்சு தோல், முந்திரி, ஆப்பிரிகாட், டியூட்டி புரூட்டி, பேரீட்சை ஆகிய சத்தான பழங்கள், ஜாதிக்காய் பொடி, லவங்கப்பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து ஒயினில் ஊறவைக்கப்பட்டு இந்த புரூட்ஸ் நன்றாக ஊறிய பின்னர் தற்போது சுவையான கிறிஸ்துமஸ் கேக்குகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வகைகளான ரிச் ப்ளம் கேக், புட்டிங், சாக்லேட், ஸ்பெஷல் குக்கீஸ், சாக்கலேட் ஆகியவை தயாரிக்கப்பட்டு தற்போது அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் விற்பனை துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அஸ்வின்ஸ் உணவுத் தொழிற்சாலையின் அவுட்லெட் மற்றும் அனைத்து கிளைகளிலும் தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்குகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


    • 14 கிலோ எடை கொண்ட் கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரப்பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களில் வீட்டு உபயோகத்திற்கு பயண்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட் கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பூர் பி.என் ரோடு, போயம்பாளையம், மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியகளில் மாவட்ட வழங்கல் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    அப்போது போயம்பாளையத்தில் செயல்பட்டுவந்த ஒரு பேக்கரியில் முறைகேடாக வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தகடையிலிருந்த 2 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து வணிக நிறுவனங்களில் வீட்டு சிலிண்டர்கள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • முகமூடி திருடர்கள் கைவரிசை
    • களியக்காவிளை போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே உள்ள வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் பிரவு சிங். இவர் குழித்துறை சந்திப்பு பகுதி யில் கடந்த 5 வருட மாக பேக்கரி கடை நடத்தி வருகி றார். நேற்று இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் இரவு 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது பின்பக்க சட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    கடைக்குள்சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. யாரோ மர்ம மனிதர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை சம்பவ த்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. கடை யின் பணப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து பிரவு சிங் களியக்காவிளை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில் மர்ம நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கடைக்கு உள்ளே புகுந்து கல்லாவை உடைத்து பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.

    இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறை பகுதியில் அடிக்கடி கடைகளை உடைத்து திருட்டு நடப்பதால் கடை நடத்தி வருபவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு உணவகம், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல்லடம் என்.ஜி.ஆர். சாலை, திருச்சி சாலை, பஸ் நிலையம் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிம்பிகை தலைமையில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 67 கிலோ திண்பண்டங்கள், 5 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக் வைத்திருந்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அந்தக் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள் மீது சரியான தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் பாக்கெட்டின் மேற்புரத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு தரம் மற்றும் கலப்படம் குறித்த புகார்களுக்கு வாட்ஸ்அப் 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த வாட்ஸ்அப் எண்ணை அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    ×